ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 11 நவம்பர், 2018

645. மணவாள மாமுனிகள்

👣👏🏻🙌🏼💫🕉🔥

*மணவாள மாமுனி திருநக்ஷத்திரம் !*

எங்கள் மாமுனியே...
கலி கண்ட மாமுனியே...
எம் கலி தீர்க்க வந்த மாமுனியே...

சாதாரண ஜனங்களும் எம்பெருமானிடத்தில் சரணாகதி செய்துய்ய...
*சாதாரண வருஷத்தில்* அவதரித்த மாமுனியே...

ஜீவர்களின் சம்சார ஐயத்தையும்,
ஆத்ம பசியையும் போக்க
*ஐப்பசியில்* வந்துதித்த மாமுனியே...

24 தத்துவங்களையும்,
25வதான ஆத்மாவையும்,
உணர்த்தி
26வதான பரமாத்மாவை காட்டித்தர
ஐப்பசி *26ம் நாள்* அவதரித்த மாமுனியே !

வளர்பிறையாய் பக்தி
ஞான வைராக்கியம் வளர
திவ்யப்ரபந்தத்தை அனுதினமும் சொல்லித்தர
*வளர்பிறையில்* வாராது வந்த மாமுனியே !

சதுர்வித புருஷார்த்தமான,
அறம் பொருள் இன்பம் வீடு,
சதுர் வர்ணத்தவரும் அடைய,
*சதுர்த்தியில்* ஜகத்தை
ஆள வந்த மாமுனியே !

லக்ஷ்மி நாதன் தொடக்கமான,
நாதமுனி யாமுனாசார்யாரை நடுவில் கொண்ட,
யதிராஜன் வழி வந்த
குருபரம்பரை விளங்க,
குருவாரமான *வியாழனன்று* குலமணியாய் வந்த மாமுனியே !

ஆதிமூலமான நாராயணனை,
அன்போடு அடை நெஞ்சே,
என்று அக்கறையோடு சொல்ல,
*மூல நட்சத்திரத்தில்* முத்தாய் வந்த எங்கள் மாமுனியே !

சைலேச தயா பாத்திரமென
அரங்கனும் பிள்ளையாய்
வந்து ஸ்தோத்திரம் செய்த
ஆசார்ய குல சிகாமணியான
*மணவாள மாமுனியே இன்னுமோர் நூற்றாண்டு இரும்...*

©குருஜீ கோபாலவல்லிதாசர்
ஐப்பசி மூலம்...
11/11/2018, ஞாயிறு..

💫🕉🙌🏼👣👏🏻🔥

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP