ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2020

647. ஆளவந்தார்...

📿🕉️🙏🏻👣🙌👏🏻🇮🇳

*ஆனந்தவேதம் !*

_647. எம்மை ஆளவந்தீரோ !!!_

ஆடி உத்திராடத்தில்
காட்டுமன்னார்கோயிலில்
எம்மை ஆளவந்தீரோ...

ஆக்கியாழ்வானுடன்
வாதிட்டு அரசியையும்
அரசையும் ஆளவந்தீரோ !!!

தூதுளைக் கீரையால்,
மணக்கால் நம்பியின் கீதையால்
ஆளவந்தீரோ !!!

முடிசூடும் அரசை விட்டு
அரங்கனின் அடி சூடும் அரசை
ஆளவந்தீரோ !!!

ஸ்ரீமந் நாதமுனிகளின்
திவ்யப்ரபந்த அனுபவத்தை
ஆளவந்தீரோ !!!

யோக ரஹஸ்யத்தை விட்டு
என் அனந்தபத்மநாபனை
ஆளவந்தீரோ !!!

கரமணையாற்றங்கரையில்,
தெய்வவாரியாண்டானை
ஆளவந்தீரோ !!!

இளையாழ்வார் வைபவம் கேட்டு
காஞ்சியில் திருக்கச்சிநம்பியை
ஆளவந்தீரோ !!!

இளையாழ்வாரைக் கண்டு
ஆம் முதல்வன் இவன் என
ஆளவந்தீரோ !!!

வரதனிடம் இளையாழ்வாரை
ஸ்ரீவைஷ்ணவம் தழைக்கக் கேட்டு
ஆளவந்தீரோ !!!

மாறனேரி நம்பியை சிஷ்யராக்கி,
உன்னத தியாகியாக்கி
ஆளவந்தீரோ !!!

இளையாழ்வாரை தரிசனத்திற்கு
இழைய பெரியநம்பியை நியமித்து
ஆளவந்தீரோ !!!

ரகஸ்யங்களை சிஷ்யர்களுக்கு
சொல்லி அதை இளையாழ்வாரிடம்
சேர்பித்து அனுக்ரஹித்து
ஆளவந்தீரோ !!!

சரமத் திருமேனியிலும்,
இளையாழ்வாருக்கு தன் விரல்
மடங்கிய மகிமையைக் காட்டி
ஆளவந்தீரோ !!!

ஸ்ரீவைணவ தரிசனத்தை,
உலகிற்குப் புரியவைத்து,
மத்தியமமாய் ஆளவந்தீரோ !!!

ஆம் !!! ஆளவந்தீர்...ஆதலால்
நீரே எம் ஆளவந்தார் ....

ஆள வந்தீர்....
ஆளவே வந்தீர்....
ஆளவந்தாரே....

என்றும் ஸ்ரீவைணவத்தை
ஆளும் ஆளவந்தாரே,
உமக்குப் பல்லாண்டு பல்லாண்டு...

அடியேன் ஸ்ரீவைஷ்ணவதாஸன்
கோபாலவல்லியையும்
ஆளவந்தீரே...

©குருஜீ கோபாலவல்லிதாசர்
2.8.2020, ஞாயிறு....

🇮🇳📿🕉️🙏🏻👣👏🏻🙌

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP