ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி
அனந்தபுர நகரம் புகுதுமின்றே !

Search This Blog

Friday, July 28, 2017

நீயும் ஆகலாம் கலாம் !

அப்துல் கலாம்...

லட்சியத்தில்
திடமிருந்தால்,
உலகமே உன்னை
திரும்பிப் பார்க் *கலாம்*
என்று வாழ்ந்தாரே !

உண்மையாய் உழைத்தால்,
நீ ஜனாதிபதி
மாளிகையில்
தங் *கலாம்*
என்று காட்டினாரே !

தேசத்திற்காய் சிந்தித்தால்,
எல்லோர்
மனங்களிலும்
தங் *கலாம்*
என்று நிரூபித்தாரே !

செய்தித்தாள் விற்று
படித்தாலும்,
கனவை நினைவாக்க
முயன்றால்
அணு விஞ்ஞானி
ஆ *கலாம்* என்றே
சொல்லித்தந்தாரே !

உன் வேலையை
நீ ஒழுங்காக செய்தால்,
இந்த தேசமே உன்னை
வணங் *கலாம்*
என்று வாழ்கின்றாரே !

பிறந்த மதம் எதுவாயினும்,
மற்றவரை மதித்து
நடந்தால், நீ
தெய்வத்தை
அனுபவிக் *கலாம்*
என்றே புரியவைத்தாரே !

அதனால் நீயும்
ஆகலாம் *கலாம்* !

Read more...

Thursday, July 27, 2017

நீ பிறந்த திருவாடிப்பூரம் !

தூது சொல்லடி !
என்னை உன் கிளியாக்கி,
தூது சொல்லடி...
ரங்கனின் உயர் கன்னி ஆண்டாளே !

காதல் சொல்லடி !
என்னை உன் மாலையாக்கி,
காதல் சொல்லடி...
சூடிக் கொடுத்த சுடர்கொடியே !

ஆசை சொல்லடி !
என்னை உன் ஆடையாக்கி,
ஆசை சொல்லடி...
அஞ்சுக்குடிக்கொரு சந்ததியானவளே !

பாசுரம் சொல்லடி !
என்னை உன் தோழியாக்கி,
பாசுரம் சொல்லடி...
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளையே !

கண்ணாடி காணடி !
என்னை உன் கண் மையாயிட்டு,
கண்ணாடி காணடி...
பிஞ்சாய் பழுத்தவளே !

புலம்பல் செய்யடி !
என்னை உன் மூக்குத்தியாக்கி,
புலம்பல் செய்யடி...
பெரும்புதூர் மாமுனிக்கு பின்னானாளே !

கைத்தலம் பற்றடி !
என்னை உன்கை மருதாணியாக்கி,
கைத்தலம் பற்றடி...
திருப்பாவை பாடிய செல்வியே !

அம்மி மிதிப்பாயடி !
என்னை உன் பாத மெட்டியாக்கி,
அம்மி மிதிப்பாயடி...
ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாளே !

அழைத்துச் செல்லடி !
என்னை உன் கோபாலசுந்தரியாக்கி,
அழைத்துச் செல்லடி...
ஸ்ரீவில்லிபுத்தூர் நாயகியே !

உன்னிடமே வைத்துக்கொள்ளடி !
என்னை உன் திருமுலையாக்கி,
உன்னிடமே வைத்துக்கொள்ளடி...
திருவாடிப்பூரத்து செகத்துதித்தாளே !

இவையெல்லாம் தருவாயடி !
இன்று நீ பிறந்த திருவாடிப்பூரம் !
தகுதியில்லை என்றாலும்,
உன்னிடமுள்ள உரிமையில் கேட்டுவிட்டேன் !
ஆகையால்தருவாயடி !
மன்னித்து அருள்வாயடி !

Read more...

Thursday, July 13, 2017

இனி ஒரு விதி செய்வோம் !

*இனி ஒரு விதி செய்வோம் !*
நம் மக்களை தீவிரவாதிகள் தாக்காமல் இருக்க
இன்று புதிய பிரார்த்தனை செய்வோம் !

*இனி ஒரு விதி செய்வோம் !*
தீவிரவாதிகள் எங்கும் தீவிரவாதம் செய்யாமலிருக்க
இன்று நாம் சிரத்தையாக நாம ஜபம் செய்வோம் !

*இனி ஒரு விதி செய்வோம் !*
உலகின் எந்த மூலையிலும்
தீவிரவாதிகள் தாக்காமலிருக்க
இன்று நாம் திடமாக பக்தி செய்வோம் !

*இனி ஒரு விதி செய்வோம் !*
உலகிலுள்ள தீவிரவாத
அமைப்புகள் அழிந்துபோக,
இன்று நாம் பகவானிடம் சரணாகதி செய்வோம் !

*இனி ஒரு விதி செய்வோம் !*
அனைத்து தீவிரவாதிகளின் மனமும் நல்வழி செல்ல,
இன்று நாம் ஒற்றுமையாக, பஜனை செய்வோம் !

*இனி ஒரு விதி செய்வோம் !*
வரும் தலைமுறைக்கு
தீவிரவாதம் இல்லாத உலகைத் தர,
இன்று நாம் புதிய சங்கல்பம் செய்வோம் !

*இனி ஒரு விதி செய்வோம் !*
நம் மனம் மாறினால்,
எல்லாம் மாறும் !
இன்று முதல் தீவிரவாதம் இல்லா உலகம் செய்ய மனம் கொள்வோம் !

Read more...

About


Radhekrishna Sath Sangam . . .The Secured Sacred Spiritual Journey towards salvation . . .Founded by HER HOLINESS POOJYA SHREE SHREE AMMA . . .

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP