ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 31 அக்டோபர், 2009

செல்லக் குழந்தை!



ராதேக்ருஷ்ணா 

எதையோ நினைத்துப் புலம்பாதே!
யாரையோ நினைத்து அழாதே!
வாழ்க்கையை நினைத்துப் பயப்படாதே!
மனதில் ஆசைவயப்பட்டு உளறாதே!
நினைத்தது நடக்காவிட்டால் 
கோபப்படாதே!
நினைக்காதது நடந்துவிட்டால் 
நொந்துபோகாதே!
அவமானப்படுத்தினால் கலங்காதே!
 ஒதுக்கிவைத்தால் ஓய்ந்துபோகாதே!
மனிதர்களை நினைத்து 
உன் வாழ்க்கையை இழக்காதே !
அத்ருஷ்டத்தை நினைத்து
முயற்சியை விடாதே!
கைரேகையை நம்பி
க்ருஷ்ணனை தொலைத்துவிடாதே!
ராசிக்கல்லை வைத்துக்கொண்டு
 எல்லாம் கிடைக்குமென்று
கனவு காணாதே ! 
உன் ஜாதகத்தைக் கணித்துவிட்டு
வாழ்க்கையை முடிவு  செய்யாதே! 
 உன் பெயரை மாற்றினால்
எல்லாம் மாறுமென்று நினைக்காதே !
உன் ராசி பலனை அறிந்துகொள்ளாதே! 

  உன்னிடம் என்ன இல்லை?
உன்னிடம் எல்லா நல்லவைகளும்
நீக்கமற நிறைந்து உள்ளது !
அதை புரிந்து கொள் ! 

நீ அகிலாண்ட கோடி ப்ரும்மாண்ட
நாயகன் க்ருஷ்ணனுக்கும்,
அன்பு வடிவான ராதிகாவுக்கும்
பிடித்த செல்லக் குழந்தை! 
  
அவர்களைத் தவிர வேறு
யார் உன்னை நன்றாக
அறிவார்கள் !

"ராதேக்ருஷ்ணா"
இந்த மந்திரம் போதும் !
உன் வாழ்க்கை நிம்மதியாக நடக்கும்! 


Read more...

வெள்ளி, 30 அக்டோபர், 2009

ஒரே வழி ! ! !





ராதேக்ருஷ்ணா

உன்னால் அமைதியாக வாழமுடியும்!
உன்னால் வினயத்துடன் வாழமுடியும்!
உன்னால் தைரியமாக வாழமுடியும்!
உன்னால் தெளிவாக வாழமுடியும்!
உன்னால் ஆனந்தமாக வாழமுடியும்!
உன்னால் புத்திசாலியாக வாழமுடியும்!
உன்னால்ஆரோக்கியமாக வாழமுடியும்!
உன்னால் சமாதானமாக வாழமுடியும்!
உன்னால் அற்புதமாக வாழமுடியும்!
உன்னால் பக்தியுடன் வாழமுடியும்!
உன்னால் நாமஜபத்தோடு வாழமுடியும்! 
உன்னால் பகவானோடு வாழமுடியும்!
உன்னால் பக்தர்களோடு வாழமுடியும்!
உன்னால் பக்தர்கள்போல் வாழமுடியும்! 
உன்னால் உருப்படியாக வாழமுடியும்!

இதற்கு ஒரே வழி ! ! !
குருஜீ அம்மாவைமட்டும்
திடமாகப் பிடித்துக்கொள் ! 
 

Read more...

நீயும் துளசியாகலாமே !



ராதேக்ருஷ்ணா

என்றாவது யோசித்திருக்கிறாயா ? ! ?


உன்னால் உனக்கு என்ன உபயோகம் ?
உன்னால் மற்றவர்களுக்கு என்ன உபயோகம்?
உன்னால் உலகத்துக்கு என்ன உபயோகம் ?
உன்னால் பகவானுக்கு என்ன உபயோகம் ?

 ஒவ்வொரு நாளும்
நீ உனக்கு
உபயோகமாக இரு !
அதாவது உன் ஆத்மாவுக்கு நீ
சமத்தாக இரு!
உன் மனதில் குற்ற உணர்ச்சி
வராதபடி நட !
அகம்பாவத்தில் ஆடாதே !
தற்பெருமையில் குதிக்காதே!
நேரத்தை வீணடிக்காதே !
சோம்பேறியாய் திரியாதே !
புத்திசாலியென்று அலட்டாதே !
 நீ அழகென்று அலையாதே !
உன் உடலைப் படுத்தாதே !



உன்னால் மற்றவர்களுக்கு
உதவி இல்லையென்றாலும்  
உபத்திரவமாக இருக்காதே !
யாரைப் பற்றியும் தவறாக
எதுவும் யாரிடமும் பேசாதே !
யாரையும் கேவலமாக நினைக்காதே !
யாரையும் கேவலப்படுத்தாதே !
யாரையும் அனாதையென்று இகழாதே!
யாருக்கும் கெடுதல் நினைக்காதே !
யாரையும் கெடுக்காதே !



உன்னால் நீ வாழ்கின்ற 
உலகிற்கு நிச்சயம் ஏதாவது 
நல்லது நடக்கவேண்டும் !
உலகை கேவலமாக நினைக்காதே!
உலகை வெறுக்காதே !
உலகை நிந்திக்காதே !
உலகை குப்பையாக்காதே!
உலகின் வளத்தை வீணடிக்காதே!
உலகின் வளத்தை அழிக்காதே !
பசுமையைக் காப்பாற்று !


உன்னால் பகவானுக்கு என்ன 
ப்ரயோஜனமுண்டு ?
நீ உனக்கு ப்ரயோஜனமாக
இருந்தாலே பகவானுக்கு
அதுவே போதும் !
பகவானை நம்பு!
பகவானின் நாமத்தைச் சொல் !
பகவானின் வைபவத்தில் மனதை வை !

உன் வாழ்க்கையை நீ
நல்லபடி வாழ்ந்து, நீ
ஆனந்தத்தில் திளைத்து,
இந்த ஜன்மாவில்
கடைத்தேறினாலே
பகவானுக்கு உபயோகம் !


எல்லோருக்கும் உபயோகமாக
இருக்க முடியுமோ  ? ! ?
யாராவது உண்டோ ? ! ?


உண்டு ! உண்டு ! உண்டு !


துளசியினால் துளசிக்கு உபயோகம் !
துளசியினால் அடுத்தவர்க்கு உபயோகம் !
துளசியினால் உலகத்திற்கு உபயோகம் !
துளசியினால் பகவானுக்கு உபயோகம் !


துளசிதேவி பவித்திரமாக இருப்பதனால்,
அவள் பகவானின் திருமுடியை 
அலங்கரிப்பதால் அவளுக்கு அவளே
ப்ரயோஜனமாகின்றாள் !


துளசியைக் கொண்டு அர்ச்சிக்கும்போது
மற்றவர்களின் பாபமும் அழிகிறதால்,
அவள் மற்றவர்களுக்கு உபயோகமாக
இருக்கிறாள் !


ப்ருந்தாவனம் இருப்பது உலகில்தானே!
துளசிதேவிதானே ப்ருந்தாவனம் !
ப்ருந்தாவனம் ஸ்வயம் க்ருஷ்ணனே !
ஆண்டாளையும் தந்தவள் துளசிதானே!

உலகமே இன்று அவளைக்கொண்டு
க்ருஷ்ணனை அனுபவிப்பதனால்
உலகிற்கு உபயோகமாகிறாள் !


என்றுமே க்ருஷ்ணனிஷ்டப்படி
இருப்பதனால், எப்பொழுதும்
பிரியாதிருக்கும் க்ருஷ்ணப்ரியா !


இன்று அவள் பகவானிடம்
தனனை அர்ப்பித்த நாள் !
க்ருஷ்ணனை கல்யாணம்
செய்துகொண்ட நாள் !
க்ருஷ்ணன் நாற்றத் துழாய்
முடியனான நாள்!


இன்று துளசியைக் கொண்டாடு !
ஆவலுடன் ப்ரார்த்தனை செய் !
என்றுமே துளசியைப் பிடித்துக்கொள்!


தினம் க்ருஷ்ணனுக்கு துளசியைத் தா !



நீயும் துளசியாகலாமே !


பிறகு உன்னையும் தரலாமே!




Read more...

வியாழன், 29 அக்டோபர், 2009

க்ருஷ்ணனுக்கு மட்டும் ! ! !



ராதேக்ருஷ்ணா


உன் மனதில் ஆயிரம் எண்ணங்கள் !
உன் மனதில் ஆயிரம் ஆசைகள் !
உன் மனதில் ஆயிரம் குழப்பங்கள் !
உன் மனதில் ஆயிரம் யோசனைகள் !
உன் மனதில் ஆயிரம் கேள்விகள் !
உன் மனதில் ஆயிரம் தவிப்புகள் !
உன் மனதில் ஆயிரம் கோபம் !
உன் மனதில் ஆயிரம் பயம் !
உன் மனதில் ஆயிரமாயிரம் மனிதர்கள் !
உன் மனதில் ஆயிரம் எதிர்பார்ப்புகள் !
உன் மனதில் ஆயிரம் பொருளாசைகள் !
உன் மனதில் ஆயிரம் நிகழ்ச்சிகள் !
உன் மனதில் ஆயிரம் காயங்கள் !

உன் மனதில் ஆயிரம் சண்டைகள் !
உன் மனதில்ஆயிரம் வலிகள் !
உன் மனதில் ஆயிரம் அழுகைகள் !
உன் மனதில் ஆயிரம் குற்ற உணர்ச்சிகள் !
உன் மனதில் ஆயிரம் பாபங்கள் !
உன் மனதில் ஆயிரம் தேடல்கள் !
உன் மனதில் ஆயிரம் பிரச்சனைகள் !
உன் மனதில் ஆயிரம் சொந்தங்கள் !
உன் மனதில் ஆயிரம் விரோதிகள் !
உன் மனதில் ஆயிரம் சந்தேகங்கள் !
உன் மனதில் ஆயிரம் அழுக்குகள் !
உன் மனதில் ஆயிரம் அசிங்கங்கள் !
உன் மனதில் ஆயிரம் அகம்பாவங்கள் !
உன் மனதில் ஆயிரம் தற்பெருமைகள் !
உன் மனதில் ஆயிரம் பொறாமைகள் !

உன் மனதில் ஆயிரம் ஏமாற்றங்கள் !
உன் மனதில் ஆயிரம் ரகசியங்கள் !
உன் மனதில்ஆயிரம் திட்டங்கள் !
உன் மனதில் ஆயிரம் சதிகள் !
உன் மனதில் ஆயிரம் தோல்விகள் !
உன் மனதில் ஆயிரம் அவமானங்கள் !
உன் மனதில் ஆயிரம் 
பைத்தியக்காரத்தனங்கள் !
உன் மனதில் ஆயிரம் கனவுகள் !
உன் மனதில் ஆயிரம் கற்பனைகள் !
உன் மனதில் ஆயிரம் துரோகங்கள் !
உன் மனதில் ஆயிரம் அளவுகள் !
உன் மனதில் ஆயிரம் வேறுபாடுகள் !
உன் மனதில் ஆயிரம் ஏற்றத்தாழ்வுகள் !


ராதேக்ருஷ்ணா !
பார்த்தாயா உன் மனதின் வேலையை !
பிரமிப்பாக இருக்கிறதா !
பயமாக இருக்கிறதா !

இனனும் சொல்லவா ?
உண்மையைத்  தாங்குவாயா ?
போகட்டும் விடு ! ! !


இவ்வளவும் இருந்தால் 
எங்கே நிம்மதி ?

இவ்வளவுக்கும் இடம்
இருக்குமென்றால்
க்ருஷ்ணனுக்கு இடமில்லையா?


க்ருஷ்ணனுக்கு மட்டும்
இடமிருந்தால் 
இவற்றிற்கு இடமில்லையே !



க்ருஷ்ணனுக்கு மட்டும்  இடம்
தர ஒரு ரகசியம் சொல்லவா ?!
உன் காதை என்னருகில் கொண்டு வா !


"விடாமல் "ராதேக்ருஷ்ணா "
என்று குருஜீ அம்மாவின்
த்யானத்தோடு சொல்லிக்கொண்டிரு !


இதை மட்டும் நீ செய்துவிடு !
பிறகென்ன ! ! !


உன்  இதயத்தில் யாருக்கும்
தெரியாமல்
உன் கண்ணனை மட்டும்

அனுபவித்துக் கொண்டிருக்கலாமே !


அப்படி உன் கண்ணனை
உள்ளபடி அனுபவிக்க  
ஐப்பசி சதயமான
திருநக்ஷத்திரத்தில் இன்று,
திருக்கண்ட, பொன்மேனி கண்ட,
அணிநிறம் கண்ட, பொன்  ஆழி கண்ட,
சங்கம் கை கண்ட
பேயாழ்வாரின்
திருவடிகளில் ப்ரார்த்தனை செய் !







Read more...

புதன், 28 அக்டோபர், 2009

அன்பாக மாறு !


ராதேக்ருஷ்ணா


அன்பினால் என்ன பிரயோஜனம் ?

அன்பு மட்டும்தான்
வாழ்க்கையின் ப்ரயோஜனம் !


உண்மையான அன்பு எது ?


தாயின் அன்பா ?
தந்தையின் அன்பா ?
கணவனின் அன்பா ?
மனைவியின் அன்பா ?
குழந்தையின் அன்பா ?
தாதாவின் அன்பா ?
பாட்டியின் அன்பா ?
பேரனின் அன்பா ?
பேத்தியின் அன்பா ?
சகோதரனின் அன்பா ?
சகோதரியின் அன்பா ?
தோழனின் அன்பா ?
தோழியின் அன்பா ?
வளர்க்கும் நாயின் அன்பா ?


இது எல்லாம் ஓரளவுக்கு
உண்மைதான் ! ! !


ஆனால் ஒரு தாயின் அன்பை
தந்தையால் தரமுடியுமோ ?

தந்தையின் அரவணப்பை

மனைவி தரமுடியுமோ ?


கணவனின் காதலை
பிள்ளை தரமுடியுமோ ?


சகோதரனின் உரிமையை
பேரன் செய்யமுடியுமோ ?



நண்பனின் கனிவை
வளர்க்கும் நாய் தருமோ ?


ஒருவர் தரும் அன்பை
மற்றொருவர் தர முடியாது !


ஆனால் இவையெல்லாம்
சேர்ந்தாலும் தர முடியாத
அன்பைத் தரவே
க்ருஷ்ணன் இருக்கின்றான் !


அந்த அன்பை அனுபவிப்பதே
உன் வாழ்வின் ஒரே ப்ரயோஜனம் !

எந்த அன்பு  யாரிடமும்

கிடைக்கவில்லையென்றாலும்
அதைவிட உயர்ந்த அன்பை
கண்ணன் உன்னிடம்
வைத்திருக்கினறான் !
அதை ஒரு நாளும் மறவாதே ! ! !

இனி யாருடைய
அன்பிற்கும் ஏங்காதே !



அந்த அன்பையே அகல் விளக்காக,
ஆர்வமே நெய்யாக,
இன்புருகு சிந்தையே திரியாகக்
கொண்டு விளக்கேற்றின
பூதத்தாழ்வாரின் திருநக்ஷத்திரமான
ஐப்பசி அவிட்டமாகிய இன்று
நீயும் அன்பு செய் !
நீயும் அன்பை அனுபவி !
நீயும் அன்பைப் பருகு !
நீயும் அன்பினால் விளக்கேற்று !
நீயும் அன்பில் குளி !
நீயும் அன்பில் விளையாடு !
நீயே க்ருஷ்ணனின் அன்பாக மாறு !





Read more...

செவ்வாய், 27 அக்டோபர், 2009

மஞ்சனமாடி வந்தான் !



ராதேக்ருஷ்ணா

ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம்
எங்கள் பத்மநாபன்
எல்லையில்லா ஆனந்தக்கடலில்
பக்தர்கள் திளைக்க
ஆராட்டு ஆடி வந்தான் !


ஸ்யானந்தூர அழகன்
மஞ்சனமாடி வந்தான் !

பக்தர்களின் குழந்தை
பக்த குழந்தைகளோடு
மஞ்சனமாடி வந்தான் !


அகிலாண்ட கோடி
ப்ரும்மாண்ட நாயகன்
சங்குமுகக் கடற்கரையில்
மணலில் புரண்டு
மஞ்சனமாடி வந்தான் !


சுவாதித் திருநாளின்
சுந்தரவேந்தன்
சுகமாக
மஞ்சனமாடி வந்தான் !

திருப்பாற்கடல் நாதன்
உப்புக் கடலில்
உவகையோடு விளையாடி
மஞ்சனமாடி வந்தான் !

தசவாதார நாயகன்
நாலு அவதார ரூபனாக
மஞ்சனமாடி வந்தான் !

உப்பு மாங்காய் கடிப்பவன்
உருண்டு உருண்டு
பக்தர்களோடு
சாடிச் சாடி
மஞ்சனமாடி வந்தான் !

தாமரைக் கையன்
தாமரை நாயகியோடு
தள்ளாடித் தள்ளாடி
மஞ்சனமாடி வந்தான் ! 

ஆளவந்தாரை ஸ்ரீ ரங்கத்திலிருந்து
அழைத்து வந்த
அமலன்
மஞ்சனமாடி வந்தான் !



ராமானுஜரை நாடு கடத்திய
ராச மண்டல நாயகன்
மஞ்சனமாடி வந்தான் !




ஆளாய் பறக்கும்
கூட்டத்தின்
ஆகாய ஊர்திகளை
நிறுத்தி,
ராஜாதி ராஜன்
எதற்கும் அடங்காத
தேவாதிதேவன்
மஞ்சனமாடி வந்தான் !


 யவனர்களையும்
சிரம் தாழ வைத்து
செருக்குடன்
மஞ்சனமாடி வந்தான் !

மீன் பிடிக்கும்
கூட்டத்தாரின் தாபம் தீர
தாமரைக் கண்ணன்
மஞ்சனமாடி வந்தான் !

 மும்மதமுடைய
அந்தணர்களை அனைவருடன்
சேர நீராட வைத்து  
மஞ்சனமாடி வந்தான் !

கோபாலவல்லிக்கு
திருக்கோளூரில்
மாநிதியாகக் காட்சி தந்து
மஞ்சனமாடி வந்தான் !

இன்னும் ஆறு மாதம் உண்டே!
அடுத்த ஆராட்டிற்கு !
அதுவரையில் உடல் நிற்குமோ !
உயிர் வாழுமோ !
நினைவும் நிலைக்குமோ !
 சிரத்தை அதிகமாகுமோ !


இவை இருக்குமென்றால்
அடுத்த ஆராட்டிற்கு
அப்போதைக்கு இப்போதே
சொல்லி வைப்போம்!
நாமும் போய் நணுகவேண்டும் !


அதுவரை
பேரும் ஓர் ஆயிரத்துள்
ஒன்று பேசுவோம் !

 








Read more...

மஞ்சனமாடச் செல்கின்றான் !





ராதேக்ருஷ்ணா

இன்று, இப்பொழுது

திருவனந்தபுரத்தில்
வாழ்பவர்கள்
பாக்கியவான்கள் !

சங்கை இடக்கையில்
கொண்டவன்
சங்குமுக தீரத்தில்
மஞ்சனமாடச் செல்கின்றான் !


திருவனந்தபுரத்து 
ஆயன் 
மஞ்சனமாடச் செல்கின்றான் !

 த்வாரகா நாதன் 
மஞ்சனமாடச் செல்கின்றான் !

திவாகர முனியின்
செல்லப் பிள்ளை
மஞ்சனமாடச் செல்கின்றான் !

நம்மாழ்வாரின் காளை
மஞ்சனமாடச் செல்கின்றான் !

திருவனந்தபுரத்து செல்வன்
மஞ்சனமாடச் செல்கின்றான் !

பில்வமங்களரின் பகவான்
மஞ்சனமாடச் செல்கின்றான் !

குலசேகர வம்சத்தின்
காவலன் மஞ்சனமாடச் செல்கின்றான் !


ஸ்யானந்தூரத்தின்
ஆனந்தன்
மஞ்சனமாடச் செல்கின்றான் !

பெண்களை பேதையாக்கும்
பெண்பித்தன்
மஞ்சனமாடச் செல்கின்றான் !

பதினெட்டு அடி பக்தவத்ஸலன் 
மஞ்சனமாடச் செல்கின்றான் !

பிரியத்தின் பொக்கிஷம்
பிரியதர்ஷினியோடு
மஞ்சனமாடச் செல்கின்றான் !


அலங்கார பூஷிதன்
மஞ்சனமாடச் செல்கின்றான் !

அழகுப்பெட்டகம்
மஞ்சனமாடச் செல்கின்றான் !

முகத்திரை போடுபவர்களின்
முகமும் காதலில்
சிவக்க 
மஞ்சனமாடச் செல்கின்றான் !


பார்ப்பவர்களின்
பாபத்தை

கொள்ளையடிக்கும்
பவழத்தூண்
மஞ்சனமாடச் செல்கின்றான் !

கோபாலவல்லியின்
உள்ளத்தைக் 
கொள்ளை கொண்ட
கொள்ளைக்காரன்
மஞ்சனமாடச் செல்கின்றான் ! 


Read more...

ஆனந்தம் பொழிகிறது !





ராதேக்ருஷ்ணா

ஒவ்வொரு நாளுமே
ஆனந்தம்தான்
அதுவே வேதம் !


ஆனந்தத்திற்கு அடையாளம்
இருவர் !
ஒன்று பகவான் ஸ்ரீ க்ருஷ்ணன் !
இன்னொன்று பக்தர்கள் !


இரண்டும் ஒன்றாக இணைந்தால் !!!
பரமானந்தம் ! நித்யானந்தம் !
ரஹஸ்யானந்தம் ! ப்ரேமானந்தம் !
ஆத்மானந்தம் ! ஜன்மானந்தம் !
நாமானந்தம் ! க்ருபானந்தம் !


இன்று அப்படியொரு விசேஷம்!


இன்று, ஸ்ரீ க்ருஷ்ணனாகிய
நம் திருவனந்தபுரத்து
அனந்தபத்மநாபஸ்வாமி
பக்தர்களோடு,
சங்குமுக தீரத்தில்,
சமுத்திர க்ரீடை செய்யும்
மஹோத்சவம் !


இன்று, ஐப்பசி திருவோணம் !
உலகையே அகலாக,
கடலையே நெய்யாக,
சூரியனையே விளக்காக,
சுடராழியானடிக்கு சூட்டின
பொய்கையாழ்வார்
அவதார நன்னாள் ! 


இதைவிட வேறு என்ன 
வேண்டும் !


ஹே மனிதர்களே !
உங்கள் மேல் ஆனந்தம்
பொழிகிறது !
நீங்கள் தடுக்காமல்
இருந்தால் போதும் ! !





Read more...

திங்கள், 26 அக்டோபர், 2009

உனக்கும் புரியும்!


ராதேக்ருஷ்ணா

சர்வத்ர கோவிந்த நாம
ஸங்கீர்த்தனம் ! ! !


கோவிந்தா ! கோவிந்தா ! 

பகவானுக்கு பிடிக்காதவை
அகம்பாவமும், மமகாரமும்!


அதை கொன்று போடு!
வேரோடு பிடுங்கிப் போடு!
தடயமில்லாமல் அழித்து விடு!
அகம்பாவத்தை எரித்து சாம்பலை
யமுனையில் கறைத்து விடு!


அகம்பாவமும், என்னுடையது
என்கின்ற எண்ணமும்
மலம், மூத்திரம் போல்
கேவலமானவை !


உடலில் மல, மூத்திரம் தங்கினால்
எத்தனை கஷ்டமோ, அதை விட
கோடிமடங்கு பயங்கரமான
கஷ்டம் மனதில் அகம்பாவமும்,
மமகாரமும் இருப்பதனால்
உண்டாகும்.


மல, மூத்திரங்களை வெளியே
தள்ளினால் எத்தனை சமாதானம்!
அதே போல் மனதின் மல,
மூத்திரங்களான
அகம்பாவத்தையும், மமகாரத்தையும்
தள்ளிப்பார்! உனக்கே புரியும் !


அகம்பாவமும், மமகாரமும்
அழிந்த பிறகே இந்திரனுக்கு
ஸ்ரீ க்ருஷ்ணனின் மகிமை
புரிந்தது!

நீயும் இன்று க்ருஷ்ணனிடத்தில்
சரணாகதி செய்து, அவன் நாமத்தை
ஜபித்து, அவனிடத்தில் கதறியழுது,
மனமுருகி  உன்னிடத்திலிருக்கும்
அழுக்குகளை அகற்ற ப்ரார்த்தனை செய்!



உனக்கும் புரியும்!


Read more...

கண்ணனை களவு செய் !



ராதேக்ருஷ்ணா

இன்று கோவிந்த பட்டாபிஷேகம் !


கிரிதாரியிடம் இந்திரன் 
சரணாகதி செய்த நாள் !

இந்திரன் தன்னுடைய
அகம்பாவத்திற்கு பகவான்
ஸ்ரீ க்ருஷ்ணனிடம்
மன்னிப்பு கேட்ட நாள்!


அறிவொன்றுமில்லா ஆய்குலம்
கண்ணனின் மகிமையை
ரஹஸியமாய் பேசின நாள் !


ஸ்ரீ க்ருஷ்ணன்  ஏழு நாள் கழித்து
கோவர்த்தன மலையை 
மீண்டும்
கீழே வைத்த நாள் !


இந்திரன் காமதேனுவை
வைத்துக் கொண்டு
க்ருஷ்ணனுக்கு 
ஆகாச கங்கையினால்
அபிஷேகம் செய்து 
"கோவிந்தா ! கோவிந்தா !"
என்று புலம்பி கண்ணனின்
பாதத்தில் தன்னை
அர்ப்பித்த உன்னதமான நாள் !

 நீயும் உன் அகம்பாவத்தை விட்டு,

கண்ணன் அடியிணையை
பற்றிக் கொள் !

"கோவிந்தா ! கோவிந்தா !"
என்று வாய்விட்டு அலறி
ஆனந்தமாக பாடி ஆடு !


குருஜீ அம்மாவின்
திருவடி த்யானத்தோடு
கண்ணனை களவு செய் !



Read more...

ஞாயிறு, 25 அக்டோபர், 2009

வாழ்ந்தாலே சந்தோஷம் !





ராதேக்ருஷ்ணா

நீ குந்தியைப் போல்
துக்கத்தை வரமாக
கேட்கவேண்டாம் !

வருகின்ற கஷ்டங்களில்
க்ருஷ்ண அனுக்ரஹத்தை
உணர்ந்தாலே போதும் !


நீ திரௌபதியைப் போல்
அவமானப் பட வேண்டாம் !


அவமானங்களில் க்ருஷ்ணன்
கூட இருக்கின்றான் என்று 
மனதில் நம்பிக்கை வைத்தாலே போதும்!


நீ ப்ரஹ்லாதனைப் போல்
பகவானை நிரூபிக்க வேண்டாம் !


எத்தனை பேர் என்ன சொன்னாலும்
உன் க்ருஷ்ணனிடத்தில்
நம்பிக்கை மாறாமலிருந்தாலே போதும் !


நீ துருவன் போலே காட்டிற்குச் 
சென்று தவம் செய்ய வேண்டாம் !

நீ இருக்குமிடத்தில் இருந்து கொண்டு
குரு வார்த்தைப்படி நடந்தாலே போதும்!


நீ மீராவைப்போல் விஷத்தைக்
குடிக்கவேண்டாம் !


க்ருஷ்ணனுக்கு எல்லாம் 
தெரியுமென்று சமாதானமாக
இருந்தாலே போதும் !


நீ இராமானுஜரைப்போல்
சன்னியாசியாக வேண்டாம் !


பைத்தியக்காரத்தனமான
பேராசை, பிடிவாதங்களை
விட்டாலே போதும் !




நீ உன் க்ருஷ்ணனை பிடித்துக்கொண்டு,
விடாமல் நாம ஜபம் செய்துகொண்டு,
உன் கடமைகளை பண்ணிக்கொண்டு,
வருவதை ஏற்றுக்கொண்டு

வாழ்க்கையை
ஒழுங்காக

வாழ்ந்தாலே சந்தோஷம் !



Read more...

சனி, 24 அக்டோபர், 2009

சத்தியமாக இழப்பில்லை !




ராதேக்ருஷ்ணா

தாயை இழந்தால் இழப்பில்லை !
தந்தையை இழந்தால் இழப்பில்லை !
பிள்ளையை இழந்தால் இழப்பில்லை !
பெண்ணை இழந்தால் இழப்பில்லை !
நண்பனை இழந்தால் இழப்பில்லை !
தோழியை இழந்தால் இழப்பில்லை !
கணவனை இழந்தால் இழப்பில்லை !
மனைவியை இழந்தால் இழப்பில்லை !
சகோதரனை இழந்தால் இழப்பில்லை !
சகோதரியை இழந்தால் இழப்பில்லை !
பணத்தை இழந்தால் இழப்பில்லை !
 பதவியை இழந்தால் இழப்பில்லை !
மானத்தை இழந்தால் இழப்பில்லை !
ஆரோக்கியத்தை இழந்தால் இழப்பில்லை !
 மரியாதையை இழந்தால் இழப்பில்லை !
சந்தோஷத்தை இழந்தால் இழப்பில்லை !
 பலத்தை இழந்தால் இழப்பில்லை !
உடல் உறுப்புகளை இழந்தால் இழப்பில்லை !
இளமையை இழந்தால் இழப்பில்லை ! 
தூக்கத்தை இழந்தால் இழப்பில்லை !
சொந்த வீட்டை இழந்தால் இழப்பில்லை ! 
உனக்குப் பிடித்த பொருட்களை 
இழந்தால் இழப்பில்லை ! 
தலைமுடியை இழந்தால் இழப்பில்லை ! 
அழகான துணியை இழந்தால் இழப்பில்லை ! 
உயர்ந்த நகைகளை இழந்தால் இழப்பில்லை!    
 

உலகில் எதுவுமே இழப்பில்லை !

நீ எதையும் இழக்கவில்லை !



க்ருஷ்ணனை இழக்காதவரை
எதுவுமே
சத்தியமாக இழப்பில்லை !








Read more...

வெள்ளி, 23 அக்டோபர், 2009

பாக்கியம் பெற்ற நீ ! ! !




ராதேக்ருஷ்ணா


இன்று காலையில் பூத்து மாலையில்
வாடும் மலர்கள் கூட ஆனந்தமாய்
சிரிக்கின்றன !

உணவு கிடைப்பதைப் பற்றி
நிச்சயமில்லாமல்
பல மைல்கள் பறக்கும்
பறவைகள் கூட
குதூகலமாக இருக்கின்றன !

காட்டில் வாழும் சிங்கத்திடமிருந்து
தன்னைக் காப்பாற்றிக் கொண்டு
வாழவேண்டிய மான்கள் கூட
துள்ளிக் குதித்து இன்று
வாழ்க்கையை ஆரம்பித்துள்ளன !


சில நாட்கள் வாழும்
பட்டாம்பூச்சி கூட 
உற்சாகத்தோடு 
எழுந்து தன் வாழ்க்கையை
வாழ்கின்றன !


எல்லோராலும் விரட்டப்பட்ட
சொறி நாய்கள் கூட
தன் முயற்சியைக்
கைவிடாமல் நம்பிக்கையுடன்
வாழ்கின்றன !


"ராதேக்ருஷ்ணா" என்று சொல்லும்
பாக்கியம் பெற்ற நீ
கலங்கலாமோ ?
அழலாமோ ?
புலம்பலாமோ ?
பரிதவிக்கலாமோ ?
நொந்து போகலாமோ ?
சோர்ந்து விடலாமோ ?
வாழ்க்கையை வெறுக்கலாமோ ?
மற்றவரை குறை கூறலாமோ ?
நம்பிக்கையை இழக்கலாமோ ?
துவண்டு போகலாமோ ?



இனி சமத்தாக இருக்கணும் !




Read more...

வியாழன், 22 அக்டோபர், 2009

நீயே சொல் !



ராதேக்ருஷ்ணா 

எந்த இடம் மிக உன்னதமானது ?

வைகுண்ட லோகமா ?
சொர்க்க லோகமா ?
பூமியா ?
நரக லோகமா ?

வைகுண்ட லோகத்தில் கவலை இல்லை !
பிரச்சனைகள் இல்லை !
சண்டை இல்லை ! துன்பம் இல்லை !
பயம் இல்லை ! கெட்டவர்கள் இல்லை !
இரவு இல்லை ! விடியல் இல்லை !
பசி இல்லை ! ஆகாரம் இல்லை !
விரோதி இல்லை ! மாயை இல்லை !
மயக்கம் இல்லை ! குழப்பம் இல்லை !

ஆனாலும் பகவானுக்கும் சௌலப்யம்   இல்லை !
பக்தனுக்கும் பகவானுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை !

அதனால் வைகுண்ட லோகம் உசத்தி இல்லை !

இந்திரனின் சொர்க்க லோகத்தில் 
உடல் சுகம் கொட்டிக் கிடக்கிறது !
ரம்பா உண்டு,ஊர்வசி உண்டு,
ஆடல் பாடல் உண்டு,
அமிழ்தம் உண்டு,
அசுர பயமும் உண்டு!
நிச்சயம் நிரந்தரம் இல்லை !
ஆனாலும் எப்போது வேண்டுமானாலும்
கீழே தள்ளி விடுவார்கள் !
அதுவும் இல்லாமல் நல்லவர்கள்
யாரும் அங்கே இருப்பதில்லை !
உருப்படுவதற்கு வழியும் இல்லை !

அதனால் சொர்க்கமும் தண்டமே!

நரக லோகம் பயங்கரமானது !
தண்டனைகள் மட்டுமே அதன் பிரயோஜனம் !
84 லக்ஷம் விதமான தண்டனைகள் உண்டு!
பாபிகளும், மகாபாபிகளும் உண்டு !
கொடூரம் உண்டு, பயங்கரம் உண்டு,
துன்பம் உண்டு,உடல் வேதனை பல உண்டு,

ஆனால் தண்டனையினால்
நல்ல புத்தி வரும் ! மனித வாழ்வின்
மகிமை புரியும் !

அதனால் நரக லோகம் நல்லது தான் !

பூமிப்பந்து எல்லாம் கலந்த ஒன்று !
பசி உண்டு, பட்டினி உண்டு ,
அன்பு உண்டு,அறுசுவை உணவு உண்டு,
பயம் உண்டு, குழப்பம் உண்டு ,
இரவு உண்டு, விடியல் உண்டு,
சண்டை உண்டு, சமாதானம் உண்டு,
விரோதி உண்டு, நண்பன் உண்டு,
ஜனனம் உண்டு, மரணம் உண்டு,
நல்லது உண்டு, கெடுதல் உண்டு ,
சிரிப்பு உண்டு, அழுகை உண்டு,
வியாதி உண்டு,மருந்து உண்டு,
இளமை உண்டு,முதுமை உண்டு,
அறியாமை உண்டு,அறிவு உண்டு,
எதிர்பார்ப்பு உண்டு,ஏமாற்றம் உண்டு,
பலகீனம் உண்டு,பலம் உண்டு,
கேள்வி உண்டு,பதில் உண்டு,
பிரிவு உண்டு,சேர்த்தி உண்டு,
ஊனம் உண்டு,உதவி உண்டு,
துரோகம் உண்டு,நம்பிக்கை உண்டு,
தவறுதல் உண்டு, நிவர்த்தி உண்டு,
பாவம் உண்டு,பழி உண்டு,
புண்ணியம் உண்டு,
ஏழ்மை உண்டு,பணம் உண்டு,
கஞ்சத்தனம் உண்டு,தானம் உண்டு,
அகம்பாவம் உண்டு, அழிவு உண்டு,
பஞ்சம் உண்டு,வீணடித்தல் உண்டு,
திமிரு உண்டு,கொலை உண்டு,
கொள்ளை உண்டு, பொய் உண்டு,
நல்லவன் உண்டு,கெட்டவன் உண்டு,
இன்னும் என்னென்னவோ  உண்டு!!!
 
இவை இல்லாமல் 
கோயில் உண்டு,
புண்ணிய நதிகள் உண்டு,
புராணங்கள் உண்டு,
இதிஹாசங்கள் உண்டு,
அவதாரங்கள் உண்டு,
பக்தர்கள் உண்டு,
சத்குரு உண்டு,
பத்தி உண்டு,
நாம ஜபம் உண்டு,
சத்சங்கம் உண்டு,
சரணாகதி உண்டு,
ஆழ்வார்கள் உண்டு,
ராமானுஜர் உண்டு,
ஆண்டாள் உண்டு,
மத்வர் உண்டு,
இராகவேந்திரர் உண்டு,
கிருஷ்ண சைதன்யர் உண்டு,
மீரா உண்டு,
ஜெயதேவர் உண்டு,
துகாராம்  உண்டு, 
அன்னமாச்சார்யா உண்டு,
வேதாந்த தேசிகர் உண்டு,
சாக்கு பாய் உண்டு,
இன்னும் பலர் உண்டு !

ராதிகா உண்டு ! கிச்சா உண்டு !
வ்ருந்தாவனம் உண்டு !
பிரேமை உண்டு!
ராசக்ரீடை  உண்டு !
 
குருஜீ அம்மா உண்டு !
தினம் தினம் ஆனந்தவேதம்  உண்டு !
 
இப்போது நீயே சொல் !



Read more...

புதன், 21 அக்டோபர், 2009

ஜெயிப்பது மிக சுலபம் !





ராதேக்ருஷ்ணா!


உன்னை யாரும் ஏமாற்றவில்லை !


உன் மனதுதான் உன்னை ஏமாற்றுகின்றது !


முதலில் உன் மனதிடம் ஏமாந்த பிறகே நீ
மற்றவர்களிடம் ஏமாறுகின்றாய் !
அதனால் உன் மனதை முதலில்
ஜெயிப்பாயாக !

தன் மனதை யார் ஜெயிக்கின்றார்களோ
அவர்களே உலகத்தை ஜெயிக்கமுடியும் !

உன் மனதை ஜெயிப்பது மிக சுலபம் !


விடாமல் பகவானுடைய நாமத்தை
சொல்லிக் கொண்டிருந்தாலே
உன் மனது தானாக அடங்கிவிடும்.


"ராதேக்ருஷ்ணா ! ராதேக்ருஷ்ணா!"
என்று சொல்லிக்கொண்டேயிரு ! ! ! 


உன் மனதை ஜெயிக்கும் ரஹஸ்யம்
பகவான் க்ருஷ்ணனுக்கு மட்டுமே
தெரியும் ! ! !



Read more...

செவ்வாய், 20 அக்டோபர், 2009

இதுதான் சத்தியம் ! ! !

ராதேக்ருஷ்ணா

ஒவ்வொரு நாளும் க்ருஷ்ணனோடு
கொண்டாட  கோடி விஷயங்களுண்டு !

அல்ப மனிதர்களோடு மனதைக்
கட்டிக்கொண்டு ஏன் குழம்புகிறாய்!

உன் வேலை க்ருஷ்ணனோடு
ஆனந்தத்தை அனுபவிப்பது மட்டும்தான் !

மனதால் ஆனந்தத்தை அனுபவிக்கவே
நேரம் போதவில்லை!

துக்கத்திற்கும் உனக்கும்
ஒட்டில்லை ! ஒரு  உறவுமில்லை !

நீ முடிவில்லாத ஆனந்தத்தின் குழந்தை !
இதுதான் சத்தியம் ! ! ! 


Read more...

திங்கள், 19 அக்டோபர், 2009

இன்று கோவர்தன பூஜை !




ராதேக்ருஷ்ணா


இன்று கோவர்தன பூஜை !


பகவான் ஸ்ரீ க்ருஷ்ணனே 
கோவர்தன பூஜை செய்தான் !


ஆஞ்சனேயரே தூக்கிக் கொண்டு
வந்த உன்னதமான மலை !



இந்திரனின் அகம்பாவத்தை அழிக்க
பகவான் ஸ்ரீ க்ருஷ்ணன் பூஜை
செய்த மலை ! 



சத் சிஷ்யனாக இருக்கவேண்டுமென்று

எல்லோருக்கும் உபதேசிக்கும் மலை!



நந்தகோபரைப் போல் 
பகவான் ஸ்ரீ க்ருஷ்ணனுக்கு
தந்தையாய் இருந்து காத்த மலை !



கோகுலத்திற்கும், ப்ருந்தாவனத்திற்கும்,
நலம் தரும் மலை!




ஸ்ரீ க்ருஷ்ண சைதன்ய மஹாப்ரபு,
ஸ்ரீமான் மாதவேந்திர புரி, 
ஸ்ரீ சனாதன கோஸ்வாமி,
ஸ்ரீ ரூப கோஸ்வாமி,
ஸ்ரீமதி மீரா, போன்ற 
உன்னதமான பக்தர்கள்,
ப்ரதக்ஷிணம் செய்த மலை !




தினம் தினம் உன்னதமான பல
பக்தர்கள் கிரி வலம் செய்யும்
அற்புதமான மலை !



ஸ்வயம் க்ருஷ்ண ஸ்வரூபமாக
விளங்கும் மலை !



யாருக்கு என்ன வேண்டுமோ,
அதை நிறைவேற்றும் மலை !


கோபர்களும், கோபிகைகளும்,
ஆனந்தமாக அனுபவித்த மலை !



ஏழு வயது பாலனான கண்ணன் 
தன் சுண்டு விரலால் தூக்கி
உயரப்பிடித்த மலை !


தேவர்களும் தங்கள் அகம்பாவம்
அழியக் காரணமான மலை !


ராதிகாவும் க்ருஷ்ணனோடு
ஆனந்தமாக விளையாடிய மலை !




எல்லா மலைகளுக்கும் 
ராஜனான
கிரிராஜனான
நம்முடைய
கோவர்த்தன மலை !

கிரிராஜனைக் கொண்டாடி,
கிரிராஜனுக்கு நிவேதனம் செய்து,
கிரிராஜனை வலம் வந்து,
கிரிராஜனை ஸ்மரித்து,
கிரிராஜனின் திருவடிகளில் தொழுது,
கிரிராஜனிடம் ப்ரார்த்தித்து,
கிரிராஜனுக்கு அன்னகூடோத்ஸவம் செய்து,
இன்று கோவர்த்தன பூஜை செய்வோம் !
வாருங்கள் ! வாருங்கள் ! வாருங்கள் !


ஜெய் போலோ கிரிராஜனுக்கு! ஜெய் !
ஜெய் போலோ கிரிதர கோபாலனுக்கு ! ஜெய் !
ஜெய் போலோ ராதேக்ருஷ்ணனுக்கு ! ஜெய் !
ஜெய் போலோ மீரா மாதாவுக்கு ! ஜெய் !
ஜெய் போலோ குருஜீ அம்மாவுக்கு ! ஜெய் !


Read more...

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP