ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 28 பிப்ரவரி, 2013

இது தான் சுகம் ! ! !

 ராதேக்ருஷ்ணா



மனதிலே இப்படி நினைப்பாய்  ! ! !


முதலில் உன்னை
சிறு குழந்தையாக பாவிப்பாய் ! ! !


பிறகு இப்படி நினைப்பாய் ! ! !


க்ருஷ்ணா ! 
 இந்த குழந்தைக்கு
நல்லபுத்தியைக் கொடுப்பாய் ! ! !


க்ருஷ்ணா !
இந்த குழந்தைக்கு
சமாதானம் கொடுப்பாய் ! ! !


க்ருஷ்ணா !
இந்த குழந்தைக்கு
பலம் தருவாய் ! ! !


க்ருஷ்ணா !
இந்த குழந்தையின்
அழுகையை மாற்றுவாய் ! ! !


க்ருஷ்ணா !
இந்த குழந்தைக்கு
நல்ல எண்ணங்களைத் தா ! ! !


க்ருஷ்ணா !
இந்த குழந்தையை
சமத்தாக மாற்று ! ! !


க்ருஷ்ணா !
இந்த குழந்தையின்
முரட்டு சுபாவத்தை மாற்று ! ! !


க்ருஷ்ணா !
இந்த குழந்தைக்கு
நல்ல ஆரோக்கியத்தை அருள் ! ! !


க்ருஷ்ணா !
இந்த குழந்தையை
உன் இஷ்டப்படி வைப்பாய் ! ! !


க்ருஷ்ணா !
இந்த குழந்தைக்கு
உன் அன்பைக் கொடு ! ! !


க்ருஷ்ணா !
இந்த குழந்தைக்கு
உன் தரிசனம் தா ! ! !


க்ருஷ்ணா !
இந்த குழந்தையை
கெட்ட விஷயங்களிலிருந்து மீட்பாய் ! ! !


க்ருஷ்ணா !
இந்த குழந்தையின்
கோபத்தை இல்லாமல் செய்வாய் ! ! !
 
 
க்ருஷ்ணா !
இந்த குழந்தையை
நன்றாக சிந்திக்க வைப்பாய் ! ! !
 
 
க்ருஷ்ணா !
இந்த குழந்தையை
உன் அருகிலேயே வைத்துக்கொள்வாய் ! ! !
 
 
க்ருஷ்ணா !
இந்த குழந்தை
எப்பொழுதும் உன் நாமத்தையே
ஜெபிக்கும்படி செய்வாய் ! ! !
 
 
க்ருஷ்ணா ! ! !
க்ருஷ்ணா ! ! !
க்ருஷ்ணா ! ! !
 
நீயே இந்த குழந்தைக்கு எல்லாம்  ! ! !
 
 
நீ தான் இந்த குழந்தையை
நல்லபடியாக காக்கவேண்டும் ! ! !
 
 
உன்னால் முடியும் க்ருஷ்ணா ! ! !
 
 
இங்கு இவ்வளவு நேரம்
நான் சொன்ன குழந்தை நீ தான் ! ! !
 
இப்படியே நினைப்பாய் ! ! !
 
 
உன்னை நீயே
கிருஷ்ணனுக்கு தத்துக் கொடுக்கிறாய் ! ! !
 
இது தான் சுகம் ! ! !
 
 
செய்து கொண்டே வா ! ! !
நினைத்துக்கொண்டே இரு ! ! !
 
 
நீ க்ருஷ்ண சொத்து
என்பதை உணர்வாய் ! ! !
 
 இந்த பாவம் தான்
பக்தியின் எல்லை நிலை ! ! !
 
 
நீயும் குழந்தை ! ! !
நானும் குழந்தை ! ! !
நாம் எல்லோரும் குழந்தை ! ! !
 
இப்படித்தான் க்ருஷ்ணன்
நம்மைப் பார்க்கிறான் ! ! !
 
புரிந்து கொள் ! ! !
 
 
 

Read more...

திங்கள், 25 பிப்ரவரி, 2013

ஏழு ! ! !

ராதேக்ருஷ்ணா



ஏழு ! ! !



ஏற்றிவிடும் ஏழு ! ! !



ஏற்றம் தரும் ஏழு ! ! !


எல்லாம் தரும் ஏழு ! ! !


என்றும் தரும் ஏழு ! ! !



எழுமைக்கும் நன்மை தரும் ஏழு ! ! !



எல்லாருக்கும் பொதுவான ஏழு ! ! !



எப்பொழுதும் இதம் தரும் ஏழு ! ! !



வாழ்வை மாற்றும் ஏழு ! ! !


வானவரும் மயங்கும் ஏழு ! ! !


இல்லாதவரையும் காக்கும் ஏழு ! ! !



இருப்பவரையும் ஈர்க்கும் ஏழு ! ! !



சிறியவரும் ரசிக்கும் ஏழு ! ! !



இளைஞரையும் இழுக்கும் ஏழு ! ! !



முதியவரும் ஆசைப்படும் ஏழு ! ! !



கோடீஸ்வரனும் கொஞ்சும் ஏழு ! ! !



ஆண்டியும் ஆளும் ஏழு ! ! !



பறவைகளும் ஜபிக்கும் ஏழு ! ! !



புல்லும் தவமிருக்கும் ஏழு ! ! !


பூமியின் நாயகனின் சொந்த ஏழு ! ! !


 வைகுந்த நாதன் வந்திறங்கிய ஏழு ! ! !



அந்த ஏழே எனக்கு வாழ்வு ! ! !


அந்த எழே உனக்கும் வாழ்வு ! ! !


அந்த ஏழு . . . நம் ஏழு மலையே ! ! !


வேங்கடாத்ரி, சேஷாத்ரி,
வேதாத்ரி, கருடாத்ரி, ரிஷபாத்ரி,
அஞ்சனாத்ரி, ஆனந்தாத்ரி . . .


இந்த ஏழு போதுமே ! ! !


எழுமைக்கும் இது போதுமே ! ! !


காலை எழும்போதும்
இந்த ஏழை நினை ! ! !
 உன் ஏழ்மை மாறுமே ! ! !


இரவு துயிலும் முன்
இந்த ஏழை நினை ! ! !
உன் வாழ்க்கை  மாறுமே ! ! !


ஏழே , , , நீயே எனக்கு எல்லாம் ! ! !


 எத்தனை முறை உனை
நினைத்தாலும் இனிமையே ! ! !


வேங்கடாத்ரி, சேஷாத்ரி,
வேதாத்ரி, கருடாத்ரி, ரிஷபாத்ரி,
அஞ்சனாத்ரி, ஆனந்தாத்ரி . . .


எற்றைக்கும் ஏழேழு பிறவிக்கும்,
  இந்த ஏழு நம்மைக் காக்குமே ! ! !

 

Read more...

வெள்ளி, 22 பிப்ரவரி, 2013

உன்னை நம்பி ! ! !

ராதேக்ருஷ்ணா 



என் இந்து தர்மமே ! ! !


நீ வாழ்வாய் ! ! !
நிரந்தரமாக வாழ்வாய் ! ! !


எங்களை வாழவைப்பாய் ! ! !


நீ ஒரு நாளும் தோற்க்கமாட்டாய்  ! ! !


எங்களை தோற்க விடமாட்டாய் ! ! !


நாங்கள் தோற்க மாட்டோம் ! ! !


உன்னிடம் கெஞ்சுகிறேன் ! ! !


உன்னை விட்டுப்  போனவர்களை
நீ தான் திரும்ப மீட்டு
உன் அரவணைப்பில் அவர்களுக்கு
சுகம் தரவேண்டும் ! ! !


உன் பலத்தைக் காட்டு  ! ! ! 


உன் மகிமையைக் காட்டு ! ! !


உன் அன்பைப் புரிய வை ! ! !


உனது தெய்வீகத்தை உணர்த்துவாய் ! ! !


நாங்கள் உன் குழந்தைகள் ! ! !


நீ எங்களின் தாய் ! ! !


நீ எங்களின் தெய்வம் ! ! !


நீ எங்களின் உயிர் ! ! !


நீ எங்களுக்கு உயிரைக்
காட்டிலும் பெரியவள் ! ! !


எங்கள் குடும்பம்
உன்னை நம்பி ! ! !


எங்கள் எதிர்காலம்
உன்னை நம்பி ! ! !


எங்கள் வம்சம்
உன்னை நம்பி  ! ! !
 
 
 
நிச்சயம் நாங்கள் வாழ்வோம் ! ! !


வாழ்ந்து காட்டுவோம் ! ! !


உன் பாலைக் குடித்து
வளர்ந்தவர்கள் நாங்கள் ! ! !


உன் மடியில் தவழ்ந்து
வளர்ந்தவர்கள் நாங்கள் ! ! !


அம்மா ! ! !


உன் மடியில் எல்லோரும்
குழந்தையாய் தவழ ஆசைப்படுகிறேன் ! ! !


அம்மா ! ! !


உன்னைக் கேவலப்படுத்தினவர்
அனைவரும் உன் முன்
மண்டியிட அதை நான் பார்ப்பேன் ! ! !


இது சத்தியம் ! ! !


என் அம்மா உயர்ந்தவள் ! ! !


என் அம்மா தலை நிமிர்ந்தே
நிற்பாள் ! ! !


அம்மா ! ! ! அம்மா ! ! ! அம்மா ! ! !


என் இந்து மாதா ! ! ! !


உன் திருவடியில் விழுவேன் ! ! !


உன் பலத்தினால் இந்த உலகை
மாற்றிக்காட்டுவேன் ! ! !


Read more...

திங்கள், 18 பிப்ரவரி, 2013

உள்ளத்தை அள்ளித்தா ! ! !

ராதேக்ருஷ்ணா 



யாரறிவார் ?


உன்னை உள்ளபடி யாரறிவார் ?


கண்ணனைத் தவிர வேறு யார் தான்
உன்னை உள்ளபடி அறிவார் ?


மற்றவருக்கு எல்லாம்
உனது கோபம் தெரியும் !


மற்றவருக்கு எல்லாம்
உனது பலவீனம் தெரியும் !


மற்றவருக்கு எல்லாம்
உனது பயம் தெரியும் !


மற்றவருக்கு எல்லாம்
உனது அழுகை தெரியும் !


மற்றவருக்கு எல்லாம்
உன் உடலின் உயரம் தெரியும் !


மற்றவருக்கு எல்லாம்
உன் உடலின் அமைப்பு தெரியும் !


மற்றவருக்கு எல்லாம்
உன் முகவரி தெரியும் !


மற்றவருக்கு எல்லாம்
நீ ஆணா பெண்ணா என்பது தெரியும் !


ஆனால் உன் மனது யாருக்கு தெரியும் ?


அதன் ஆழம் யாருக்குத்தான் புரியும் ?


அந்த மனதின் வலிகள்
எத்தனையென்று யாருக்கு புரியும் ?


அந்த மனதின் காயங்கள்
எவ்வளவு என்று யாருக்குத்தான் தெரியும் ?


அந்த மனதின் தாபங்கள்
யாரால் புரிந்து கொள்ளமுடியும் ?


அந்த மனதின் கேள்விகள்
யாருக்குக் கேட்க்கும் ?


அந்த மனதின் புலம்பல்களை
யார் காது கொடுத்து கேட்கிறார்கள் ?
 
 
அந்த மனதின் மொழி
யாருக்குப் புரியும் ?
 
 
அந்த மனதிற்கு யார் தான்
சமாதானம் சொல்லமுடியும் ?
 
 
அந்த மனதிற்கு யார் தான்
நிம்மதி தர முடியும் ?
 
 
மற்றவர் எல்லாம் நம் உடலை
விட்டு வெளியில் இருக்கிறார் ...
 
 
கண்ணன் மட்டுமே நம்முள்
எப்போதும் இருக்கிறான் ! ! !
 
 
உள்ளே இருப்பவனுக்கே
உள்ளே நடக்கும் போராட்டம் தெரியும் ! ! !
 
 
உள்ளே இருப்பவனுக்கே
உள்ளே பேசும் மொழி புரியும் ! ! !
 
 
உள்ளே இருப்பவனுக்கே
உள்ளே அழும் அழுகை தெரியும் ! ! !


உள்ளிருப்பவனே
உள்ளத்தில் உள்ளதை உள்ளபடி
உணர்வான் ! ! !


உன் உள்ளத்தை
உன் உள்ளேயிருப்பவனிடம்
உள்ளபடி ஒப்படைத்துவிடு ! ! !
 
 
உன் உள்ளமும் உருப்படும் !
உன் வாழ்வும் வளம் பெறும் ! !
 
 
 உன் உள்ளத்திற்கு என்றும்
ஒரே சொந்தம் கண்ணனே ! ! !
 
 
அவனே உன்னை
உள்ளன்போடு நேசிக்கிறான் ! ! !
 
 
உள்ளத்தை அள்ளித்தா ! ! !
உள்ளபடி அள்ளித்தா ! ! !
உண்மையாய் அள்ளித்தா ! ! !
உறுதியாய் அள்ளித்தா ! ! !


பிறகு அவன் தன்னையே
உனக்கு அள்ளித்தருவான் ! ! !

சரியாகச் சொன்னால்
அவன் தன்னையே உனக்கு
தந்துவிட்டதை நீ உணர்வாய் ! ! !


Read more...

சனி, 16 பிப்ரவரி, 2013

மிக மிக அருகில் ! ! !

ராதேக்ருஷ்ணா
 
 
 
நஷ்டமெல்லாம் நஷ்டமல்ல !
 
 
துக்கமெல்லாம் துக்கமல்ல !
 
 
பிரச்சனையெல்லாம் பிரச்சனையல்ல !
 
 
அவமானமெல்லாம் அவமானமல்ல !
 
 
தோல்வியெல்லாம் தோல்வியல்ல !
 
 
பயமெல்லாம் பயமல்ல !
 
 
கேள்வியெல்லாம் கேள்வியல்ல !
 
 
குழப்பமெல்லாம் குழப்பமல்ல !
 
 
விட்டுத் தள்ளு . . .
 
 
வாழும் வரை நிம்மதியாய் இரு !
 
 
நடப்பதெல்லாம் நடக்கட்டும் !
 
 
காட்டில் இருக்கும் புழு, பூச்சிக்கும்
எல்லாம் உண்டு ! ! !
 
 
மரம் செடி கொடிக்கும்
எல்லாம் உண்டு ! ! !
 
 
காலம் உனக்கு சிவப்பு
கம்பளம் விரிக்கும் ! ! !
 
 
வாழ்க்கை உனக்கு பச்சைக்
கொடி காட்டும் ! ! !
 
 
உலகம் உன்னை மலர் தூவி
வரவேற்கும் நாள் மிக அருகில் !
 
 
மிக மிக அருகில் ! ! !
 
ஒதுக்கிய உலகம்,
உன் பின்னால் வரும் ! ! !
 
 

Read more...

வியாழன், 14 பிப்ரவரி, 2013

அதெப்படி ? ? ?

ராதேக்ருஷ்ணா
 
 
 
நினைக்கிறேன் !
ஆனால் நினைப்பதில்லை !
 
 
 
பத்மநாபா எப்பொழுதும்
உன்னை நான் நினைப்பதில்லை !
 
எனக்கு தோன்றும்போதுதான்
பத்மநாபா உன்னை நான் நினைக்கிறேன் !
 
 
 
காலையில் எழுந்திருக்கும்போதே
நான் உன்னை நினைப்பதில்லை !
 
சில நாள் படுக்கையிலிருந்து
எழும் போது நான் உன்னை நினைப்பேன் !
 
 
 
இரவு படுக்கப் போகும்போதேல்லாம்
நான் உன்னை நினைப்பதில்லை !
 
பத்மநாபா ! சில இரவுகள் மட்டுமே
உன்னை நான் சும்மா  நினைக்கிறேன் !
 
 
 
எல்லா காரியங்களிலும்
நான் உன்னை நினைப்பதில்லை !
 
சில காரியங்கள் செய்யும்போது
பத்மநாபா நான் உன்னை நினைக்கிறேன் !
 
 

சிரத்தையோடு நான் உன்னை
நினைப்பதில்லை !


ஆசையோடு நான் உன்னை
நினைப்பதில்லை !
 
 
பக்தியோடு நான் உன்னை
நினைப்பதில்லை !
 
 
வினயத்தோடு நான் உன்னை
நினைப்பதில்லை !
 
 
ஆனாலும் சில சமயங்களில்
எனக்குத் தெரியாமலேயே
உன் நினைவு எனக்கு வருகிறது !
 
 
அது எப்படி ? ! ?
 
 
எனக்கு ரொம்ப நாளாக
இந்த விஷயத்தில் சந்தேகம் !
 
 
இன்று புரிந்தது ! ! !
 
அதுதான் சத்தியம் !
அதுதான் நிச்சயம் !
 
 
நான் உன்னை மறந்துவிடுகிறேன் !
 
நான் உன்னை நினைப்பதேயில்லை !
 
ஆனாலும் உன் நினைவு
வருகிறதே அதெப்படி ? ? ?
 
 
நான் உன்னை நினைப்பதேயில்லை,
நீயோ என்னை மறப்பதேயில்லை ! ! !
 
இதான் ரஹஸ்யம் ! ! !
 
 
ஆஹா . . . கண்டுபிடித்துவிட்டேன் !
இல்லை இல்லை ! ! !
பத்மநாபா ! நீயே புரியவைத்தாய் !
 
 
என்னால் இதை தாங்க முடியவில்லை !
 
நீயேன் என்னை நினைக்கிறாய் ?
 
நான் என்ன நம்மாழ்வாரா ?
நான் என்ன திவாகர முனியா ?
நான் என்ன பில்வமங்கள ரிஷியா ?
நான் என்ன ஸ்வாமி இராமானுஜரா ?
நான் என்ன நிகமாந்த தேசிகரா ?
நான் என்ன ஸ்வாதி திருநாளா ?
 
இல்லை...இல்லை...இல்லை...
 
 
 நீ நினைப்பதை எப்பொழுதெல்லாம்,
எனக்கு புரியவைக்கிறாயோ,
அப்பொழுது மட்டுமே
நான் உன்னை நினைக்கிறேன் ! ! !
 
 
ஏதோ உன் கருணை,
நான் உன்னை நினைக்கிறேன் ! ! !
 
இப்படியே நீ என்னை
நினைத்துக்கொண்டிரு ! ! !
 
 
இது தான் நான் கடைத்தேற ஒரே வழி !
 
வேறு வழியே எனக்கு இல்லை !
 
 
அப்பாடா ! ! !
இன்றே எனக்கு நிம்மதி ! ! !  

 என் மனது இன்றே சாந்தி
அடைந்தது ! ! !
 
என் மனது இன்றே நிறைவு
பெற்றது ! ! !
 

Read more...

புதன், 13 பிப்ரவரி, 2013

ஒன்றரை லக்ஷம் கோடி !

ராதேக்ருஷ்ணா
 
 
ஆசை . . . ஆசை . . .
 
 
 பத்மநாபனின் பாதத்தில்
பாதுகையாக இருக்க ஆசை !


பத்மநாபனின் கணுக்காலில்
கொலுசாக இருக்க ஆசை !
 
 
பத்மநாபனின் இடுப்பில்
பீதாம்பரமாக இருக்க ஆசை !
 
 
பத்மநாபனின் நெஞ்சில்
கௌஸ்துபமாக இருக்க ஆசை !
 
 
பத்மநாபனின் உடம்பில்
சந்தனமாக இருக்க ஆசை !
 
 
பத்மநாபனின் தோள்களில்
தோள்வளையாக இருக்க ஆசை !
 
 
பத்மநாபனின் கைகளில்
தாமரையாக இருக்க ஆசை !
 
 
பத்மநாபனின் விரல்களில்
மோதிரமாக இருக்க ஆசை !
 
 
பத்மநாபனின் கழுத்தில்
துளசி மாலையாக இருக்க ஆசை !
 
 
பத்மநாபனின் செம்பவள உதட்டில்
அழுத்தமாய் முத்தமிட ஆசை !
 
 
பத்மநாபனின் மூக்கில்
புல்லாக்காக உரச ஆசை !
 
 
 பத்மநாபனின் கண்களை
விடாமல் பார்க்க ஆசை !
 
 
பத்மநாபனின் நெற்றியில்
கஸ்தூரி திலகமாய் இருக்க ஆசை !
 
 
பத்மநாபனின் காதுகளில்
மகர குண்டலமாக தவழ ஆசை !
 
 
பத்மநாபனின் திருமுடியில்
கிரீடமாக வீற்றிருக்க ஆசை !
 
 
இது போதுமா ? ? ?
 
சத்தியமாய் போதவே போதாது ? ? ?
 
வேறு என்னவெல்லாம் ஆசைகள் ?
 
 
 சொல்லட்டுமா . . .
 
 
பத்மநாபனோடு ரகசியமாய்
காதோடு பேச ஆசை !


பத்மநாபனின் காதலியாய்
ஜீவித்திருக்க எப்பொழுதும் ஆசை !


பத்மநாபனின் மனைவியாய்
நானும் இருக்க ஒரு பேராசை !


பத்மநாபனின் பிள்ளையை
என் மணி வயிற்றில் சுமக்க ஆசை !


பத்மநாபனுக்கு விதவிதமாய்
சமைத்துப் போட ஆசை !


பத்மநாபனுக்கு எண்ணை
தேய்த்துக் குளிப்பாட்டிவிட ஆசை !


பத்மநாபனின் வஸ்திரங்களை
அழகாக தோய்த்து அலச ஆசை !


பத்மநாபனை மடியில் போட்டுக்கொண்டு
தாயாக பால் கொடுக்க ஆசை !


பத்மநாபனுக்கு அறிவுரை சொல்லும்
தந்தையாக ஆட்சி செய்ய ஆசை !


பத்மநாபனை தம்பியாக பாவித்து
அண்ணனாய் பொறுப்பாக இருக்க ஆசை !
 
 
பத்மநாபனை அண்ணனாய் ஏற்று
அவன் சொல்படி நடக்க ஆசை !
 
 
 பத்மநாபனுக்கு மாமனாக இருந்து
அவன் கேட்பதெல்லாம் வாங்கித்தர ஆசை !
 
 
பத்மநாபனுக்கு சகோதரியாய்
கார்த்திகை சீர் வாங்க ஆசை !
 
 
பத்மநாபனுக்கு பேரனாய் இருந்து
அவன் தோளில் சவாரி செய்ய ஆசை !
 
 
பத்மநாபனோடு நண்பனாக
கடற்கரை மணலில் காலாற நடக்க ஆசை !
 
 
 பத்மநாபனின் மந்திரியாக
உத்தவன் போல் தூது செல்ல ஆசை !
 
 
பத்மநாபனின் சிஷ்யனாக
அர்ஜுனன் போல் கீதை கேட்க ஆசை !
 
 
பத்மநாபனின் கோயிலில் பூஜை
செய்யும் போத்தியாக ஆக ஆசை !
 
 
பத்மநாபனை தரிசிக்கும்
திருவிதாங்கூர் ராஜனாக வாழ ஆசை !
 
 
பத்மநாபனுக்கு கைங்கர்யம்
செய்யும் ஒருவனாக இருக்க ஆசை !
 
 
பத்மநாபனின் கோயிலில்
தீபமாக வெளிச்சம் தர ஆசை !
 
 
பத்மநாபா . . .
இன்னும் கோடி ஆசைகள் உண்டு !
 
 
சரியாக சொல்லப்போனால்,
ஒன்றரை லக்ஷம் கோடி ஆசைகள் !
 
அது இல்லாமல் இன்னமும் உண்டு !
 
 
உனக்குத்தான் தெரியுமே . . .
 
 
எனக்கு அவசரமே இல்லை !
நிதானமாக ஒவ்வொரு ஜன்மாவாகக் கொடு !
 
 
நான் இருந்து அனுபவிப்பேன் !
 
 
இப்பொழுது கோபாலவல்லியாய்
அனுபவித்துக் கொள்கிறேன் ! ! !
 
 
மற்ற ஆசைகள் ஒவ்வொரு ஜன்மாவாக !
 
 
நீ மறக்காதே !
 
அப்போதைக்கு இப்போதே
சொல்லி வைத்தேன் அனந்தபுர அழகனே !
 
 

Read more...

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP