ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி
அனந்தபுர நகரம் புகுதுமின்றே !

Search This Blog

Monday, March 8, 2010

மரியாதை . . .

ராதேக்ருஷ்ணா

மரியாதை . . . 
எல்லோரும் தேடும் ஒன்று . . .
வாழ்வில் பலமான ஒன்று . . .
எல்லோரையும் கேட்கும் ஒன்று . . .

ஆனால் எதனால் எதற்கு மரியாதை ?

ஆச்சரியமான ஓர் ஆய்வு செய்வோம் !


அவலக்ஷணத்தினால்
லக்ஷணத்திற்கு மரியாதை !

தோல்வியினால்
வெற்றிக்கு மரியாதை !

இருட்டினால்
வெளிச்சத்திற்கு மரியாதை !

பசியினால்
ஆகாரத்திற்கு மரியாதை !

அசுத்தத்தினால்
சுத்தத்திற்கு மரியாதை !

பலவீனத்தால்
பலத்திற்கு மரியாதை !

நோயினால்
ஆரோக்கியத்திற்கு மரியாதை !

ஏழ்மையினால்
தனத்திற்கு மரியாதை !

தாகத்தினால்
தண்ணீருக்கு மரியாதை !

காட்டுச்செடிகளால்
நல்ல செடிகளுக்கு மரியாதை !

சோம்பேறித்தனத்தால்
சுறுசுறுப்பிற்கு மரியாதை !

துன்பத்தினால்
இன்பத்திற்கு மரியாதை !

தகரத்தினால்
தங்கத்திற்கு மரியாதை !

மலட்டுத்தனத்தால்
தாய்மைக்கு மரியாதை !

அநீதியினால்
நீதிக்கு மரியாதை !

ஹிம்சையினால்
அஹிம்சைக்கு மரியாதை !

அவசரத்தினால்
நிதானத்திற்கு மரியாதை !

நாஸ்தீகத்தினால்
ஆஸ்தீகத்திற்கு மரியாதை !

விரோதத்தினால்
அன்பிற்கு மரியாதை !

பயத்தினால்
தைரியத்திற்கு மரியாதை !

முதுமையினால்
இளமைக்கு மரியாதை !

மரணத்தினால்
ஜனனத்திற்கு மரியாதை !

கோழைத்தனத்தால்
வீரத்திற்கு மரியாதை !

பொய்யினால்
சத்தியத்திற்கு மரியாதை !

நஷ்டத்தினால்
லாபத்திற்கு மரியாதை !

பிரிவினால்
சேர்க்கைக்கு மரியாதை !

கோடையினால்
குளிருக்கு மரியாதை !

குளிரினால்
வெப்பத்திற்கு மரியாதை !

வெய்யிலினால்
நிழலுக்கு மரியாதை !

வறட்சியினால்
பசுமைக்கு மரியாதை !

கூட்டத்தினால்
தனிமைக்கு மரியாதை !

தனிமையினால்
பந்துக்களுக்கு மரியாதை !

சஞ்சலத்தினால்
சாந்திக்கு மரியாதை !

சண்டையினால்
சமாதானத்திற்கு மரியாதை !

வெறுப்பினால்
பாசத்திற்கு மரியாதை !

வெட்டித்தனத்தால்
உழைப்பிற்கு மரியாதை !

அநியாயத்தால்
நியாத்திற்கு மரியாதை !

திருட்டுத்தனத்தினால்
நேர்மைக்கு மரியாதை !

சுயநலத்தினால்
பொதுநலத்திற்கு மரியாதை !

அமாவாசையினால்
பௌர்ணமிக்கு மரியாதை !

பௌர்ணமியால்
அமாவாசைக்கு மரியாதை !

பஞ்சத்தால்
மழைக்கு மரியாதை !

ப்ரும்மசர்யத்தால்
குடும்பத்திற்கு மரியாதை !

குடும்பத்தினால்
சன்னியாசத்திற்கு மரியாதை !

அசிங்கத்தினால்
அழகிற்கு மரியாதை !

குடிசையினால்
மாளிகைக்கு மரியாதை !

கந்தலினால்
நல்ல துணிக்கு மரியாதை !

கஞ்சத்தனத்தினால்
தானத்திற்கு மரியாதை !

அதர்மத்தினால்
தர்மத்திற்கு மரியாதை !

அஞ்ஞானத்தால்
ஞானத்திற்கு மரியாதை !

அகம்பாவத்தால்
வினயத்திற்கு மரியாதை !

கோபத்தினால்
சாந்தத்திற்கு மரியாதை !

குழப்பத்தினால்
தெளிவிற்கு மரியாதை !

மன உளைச்சளினால்
தியானத்திற்கு மரியாதை !

சாக்கடையினால்
நல்ல தண்ணீருக்கு மரியாதை !

அங்கஹீனத்தால்
அங்கங்களுக்கு மரியாதை !

சப்தத்தினால்
நிசப்தத்திற்கு மரியாதை !

பட்டினியினால்
அன்னதானத்திற்கு மரியாதை !

இரவினால்
நக்ஷத்திரங்களுக்கு மரியாதை !

முள்ளினால்
புற்களுக்கு மரியாதை !

துஷ்ட மிருகங்களினால்
சாது மிருகங்களுக்கு மரியாதை !

வியர்வையினால்
காற்றிற்கு மரியாதை !

துஷ்டர்களினால்
சாதுக்களுக்கு மரியாதை !

வலியினால்
நிவாரணத்திற்கு மரியாதை !

மழையினால்
மேகத்திற்கு மரியாதை !

உயரத்தினால்
மலைக்கு மரியாதை !

ஆழத்தினால்
கடலுக்கு மரியாதை !

மாலையினால்
நாருக்கு மரியாதை !

பனியினால்
மார்கழிக்கு மரியாதை !

குழப்பத்தினால்
தெளிவிற்கு மரியாதை !

வியாதியினால்
வைத்தியருக்கு மரியாதை !

ரஹஸ்யமாய் இருப்பதால்
மனதிற்கு மரியாதை !

பழையதால்
புதியதிற்கு மரியாதை !

ருசியினால்
சமையலுக்கு மரியாதை !

புயலினால்
தென்றலுக்கு மரியாதை !

அளவற்றதால்
ஆகாசத்திற்கு மரியாதை !

கல்லாமையினால்
கல்விக்கு மரியாதை !

நீயே யோசி !
இன்னும் யோசி !
நிறைய யோசி !
தொடர்ந்து யோசி !
விடாமல் யோசி !

உனக்கு எதனால் மரியாதை ! ?

நாமம் ஜபித்தால் மரியாதை . .
க்ருஷ்ண பக்தி செய்தால் மரியாதை . . .
சரணாகதி செய்தால் மரியாதை . . .
க்ருஷ்ணனிஷ்டப்படி வாழ்ந்தால் மரியாதை !

எப்படி உன் இஷ்டம் . . .?

உன் மரியாதையைக் காப்பாற்றிக்கொள் !

பல கோடி ஜன்மாக்கள்
உன் மரியாதையைக் காப்பாற்றாததினால்
இந்த ஜன்மாவை எடுத்தாய் !

இனியாவது ஒழுங்கு மரியாதையாக
வாழ வழி தேடிக்கொள் !

வழியும் இருக்கிறது !
அதில் ஒழுங்கு மரியாதையாக
பயணம் செய் !

அப்பொழுது உனக்கே
க்ருஷ்ணனிடம்
முதல் மரியாதை . . .

0 comments:

About


Radhekrishna Sath Sangam . . .The Secured Sacred Spiritual Journey towards salvation . . .Founded by HER HOLINESS POOJYA SHREE SHREE AMMA . . .

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP