ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி
அனந்தபுர நகரம் புகுதுமின்றே !

Search This Blog

Sunday, March 14, 2010

ஆளுக்கொரு உலகம் !

ராதேக்ருஷ்ணா

உலகம் . . .

பகவான் க்ருஷ்ணனின்
ஒரு பார்வையில்
ஸ்ருஷ்டிக்கப்பட்ட ஒன்று . . .

ப்ரும்மதேவரின்
கடமையாக இன்று வரை
தொடரும் அதிசயம் . . .

சிறிய எறும்பு முதல்
பெரிய கோடீஸ்வரன் வரை
ஒரே பூமிப்பந்தில்
வாழும் அற்புதம் . . .

ஏழையும் அதே பூமியில் . . .
தனவானும் இதே பூமியில் . . .

அறிவாளியும் அதே பூமியில் . . .
முட்டாளும் இதே பூமியில் . . .

அழகும் இதே பூமியில் . . .
அசிங்கமும் அதே பூமியில் . . .

அஞ்ஞானியும் இதே பூமியில் . . .
ஞானியும் அதே பூமியில் . . .

பலவானும் அதே பூமியில் . . .
பலஹீனனும் இதே பூமியில் . . .

நல்லவனும் இதே பூமியில் . . .
கெட்டவனும் அதே பூமியில் . . .

இருப்பதோ ஒரு உலகம் . . .
ஆனால் இதற்குள் பலகோடி உலகம் . . .

அம்மம்மா !
எத்தனை விதமான உலகங்கள் !
வா !
தெரிந்து கொள் !
நீ இருக்கும் உலகைப் பற்றி !
ஆனால் உனக்குத் தெரியாத
உலகத்தைப் பற்றி !

குழந்தைகளுக்கு என்று ஒரு உலகம் !

பெற்றோருக்கு என்று ஒரு உலகம் !

குடிகாரர்களுக்கு என்று ஒரு உலகம் !

ஞானிகளுக்கு என்று ஒரு உலகம் !

அஞ்ஞானிகளுக்கு என்று ஒரு உலகம் !

கோழைகளுக்கு என்று ஒரு உலகம் !

தைரியசாலிகளுக்கு என்று ஒரு உலகம் !

பைத்தியக்காரர்களுக்கு என்று ஒரு உலகம் !

முட்டாள்களுக்கு என்று ஒரு உலகம் !

அறிவாளிகளுக்கு என்று ஒரு உலகம் !

சோம்பேறிகளுக்கு என்று ஒரு உலகம் !

உழைப்பாளிகளுக்கு என்று ஒரு உலகம் !

திருடர்களுக்கு என்று ஒரு உலகம் !

கைதிகளுக்கு என்று ஒரு உலகம் !

இளைஞர்களுக்கு என்று ஒரு உலகம் !

முதியோர்களுக்கு என்று ஒரு உலகம் !

நோயாளிகளுக்கு என்று ஒரு உலகம் !

வேலைக்காரர்களுக்கு என்று ஒரு உலகம் !

முதலாளிகளுக்கு என்று ஒரு உலகம் !

சுயநலவாதிகளுக்கு என்று ஒரு உலகம் !

பொதுநலவாதிகளுக்கு என்று ஒரு உலகம் !

அழுபவர்களுக்கு என்று ஒரு உலகம் !

சிரிப்பவர்களுக்கு என்று ஒரு உலகம் !

சிந்திப்பவர்களுக்கு என்று ஒரு உலகம் !

உதவுபவர்களுக்கு என்று ஒரு உலகம் !

சண்டைக்காரர்களுக்கு என்று ஒரு உலகம் !

அகம்பாவிகளுக்கு என்று ஒரு உலகம் !

பொறாமைக்காரர்களுக்கு என்று ஒரு உலகம் !

பொறுமைசாலிகளுக்கு என்று ஒரு உலகம் !

அவசரக்காரர்களுக்கு என்று ஒரு உலகம் !

ஆண்களுக்கு என்று ஒரு உலகம் !

பெண்களுக்கு என்று ஒரு உலகம் !

கணவனுக்கு என்று ஒரு உலகம் !

மனைவிக்கு என்று ஒரு உலகம் !

பதவியிலிருப்பவர்களுக்கு என்று ஒரு உலகம் !

பட்டினியிலிருப்பவர்களுக்கு என்று ஒரு உலகம் !

கவிஞர்களுக்கு என்று ஒரு உலகம் !

ரசிகர்களுக்கு என்று ஒரு உலகம் !

சாப்பிடுபவர்களுக்கு என்று ஒரு உலகம் !

விற்பவர்களுக்கு என்று ஒரு உலகம் !

வாங்குபவர்களுக்கு என்று ஒரு உலகம் !


கொலைகாரர்களுக்கு என்று ஒரு உலகம் !

சுமைதாங்கிகளுக்கு என்று ஒரு உலகம் !

பேசுபவர்களுக்கு என்று ஒரு உலகம் !

கேட்பவர்களுக்கு என்று ஒரு உலகம் !

எழுதுபவர்களுக்கு என்று ஒரு உலகம் !

கடனாளிகளுக்கு என்று ஒரு உலகம் !

இது போல் மனதின் தன்மைக்கு
ஏற்றவாறு பல உலகங்கள் !

வாழ்வின் தன்மைக்கு
ஏற்றவாறு பல உலகங்கள் !

நீயும் பல உலகங்களில்
சஞ்சரித்தாய் !
சஞ்சரித்துக்கொண்டிருக்கிறாய் !

பல கோடி ஜன்மாவாக
பல்லாயிரம் கோடி உலகில்
வாழ்ந்துவிட்டாய் . . .

நீ குழந்தையாய் இருந்த போது 
பொம்மை உலகில் சஞ்சரித்தாய் !

படிக்கும் வயதில்
புத்தக உலகில் சஞ்சரித்தாய் !

பயந்து நடுங்கினபோது
பய உலகில் சஞ்சரித்தாய் !

பலபேரை கேவலப்படுத்தியபோது
அகம்பாவ உலகில் சஞ்சரித்தாய் !

உன்னைப் பற்றி மட்டுமே யோசித்தபோது
சுயநல உலகில் சஞ்சரித்தாய் !

கோபத்தில் உன்னை மறந்தபோது
முட்டாள் உலகில் சஞ்சரித்தாய் !

கடமைகளை செய்யாதபோது
சோம்பேறி உலகில் சஞ்சரித்தாய் !

தெய்வத்தை மறக்கின்ற போது
நாஸ்தீக உலகில் சஞ்சரித்தாய் !

துன்பத்தில் துவளும் போது
அழுகை உலகில் சஞ்சரிக்கின்றாய் !

நினைத்தது நடந்தபோது
ஆனந்த உலகில் சஞ்சரிக்கின்றாய் !

வியாதியால் நொந்தபோது
நோய் உலகில் சஞ்சரித்தாய் !

இளமை வந்தவுடன்
காம உலகில் சஞ்சரித்தாய் !

காமத்தில்
கனவு உலகில் சஞ்சரித்தாய் !

கனவுலகில்
கற்பனையில் சஞ்சரிக்கின்றாய் !

ஆகமொத்தத்தில்
ஏதோ ஒரு உலகில்
சஞ்சரித்தாய் . . . 
சஞ்சரிக்கின்றாய் . . .
சஞ்சரிக்கபோகிறாய் . . .

கொஞ்சம் இனி
ஞான உலகில் சஞ்சரிப்பாய் . . .
பக்தி உலகில் சஞ்சரிப்பாய் . . .
பணிவு உலகில் சஞ்சரிப்பாய் . . .
நிம்மதி உலகில் சஞ்சரிப்பாய் . . .
நிதான உலகில் சஞ்சரிப்பாய் . . .
தெளிந்த உலகில் சஞ்சரிப்பாய் . . .
சுத்தமான உலகில் சஞ்சரிப்பாய் . . .
பஜனை உலகில் சஞ்சரிப்பாய் . . .
சத்சங்க உலகில் சஞ்சரிப்பாய் . . .
பக்தர்களின் உலகில் சஞ்சரிப்பாய் . . .
சத்திய உலகில் சஞ்சரிப்பாய் . . .
தைரிய உலகில் சஞ்சரிப்பாய் . . .
சமாதான உலகில் சஞ்சரிப்பாய் . . .
சாந்தி உலகில் சஞ்சரிப்பாய் . . .
க்ருஷ்ணனோடு சஞ்சரிப்பாய் . . .
ராதிகா உலகில் உன் க்ருஷ்ணனோடு
சஞ்சரிப்பாய் . . .
 
ப்ரேமை உலகில் சஞ்சரிப்பாய் . . .
ராதாக்ருஷ்ண ப்ரேமை உலகில்
சஞ்சரிப்பாய் . . .
 
 
க்ருஷ்ண சைதன்யரின் நாம
சங்கீர்த்தன உலகில் சஞ்சரிப்பாய் . . .
 
ஸ்வாமி ராமானுஜரின்
சரணாகதி உலகில் சஞ்சரிப்பாய் . . .

மீரா மாதாவின்
பஜனை உலகில் சஞ்சரிப்பாய் . . .
 
ஆண்டாளின்
திருப்பாவை உலகில் சஞ்சரிப்பாய் . . .

மதுரகவியாழ்வாரின்
சத்குரு சடகோப உலகில் சஞ்சரிப்பாய் . . .

சந்த் துகாராமின்
அபங்க உலகில் சஞ்சரிப்பாய் . . .
 
பெரியாழ்வாரின்
மாலா கைங்கர்ய உலகில் சஞ்சரிப்பாய் . . .
 
 பராசர பட்டரின்
ஸ்ரீரங்கநாத உலகில் சஞ்சரிப்பாய் . . .
 
 கோபிகைகளின்
ப்ரேம விரஹ உலகில் சஞ்சரிப்பாய் . . .
சூரதாசரின்
க்ருஷ்ண பைத்திய உலகில் சஞ்சரிப்பாய் . . .

குலசேகரரின்
திருமலை உலகில் சஞ்சரிப்பாய் . . .

ஆஞ்சனேயரின்
ராம உலகில் சஞ்சரிப்பாய் . . .

ப்ரஹ்லாதனின்
நரசிம்ம உலகில் சஞ்சரிப்பாய் . . .

மஹாபலியின்
வாமன உலகில் சஞ்சரிப்பாய் . . .

பரீக்ஷித்தின்
ஸ்ரீ மத் பாகவத உலகில் சஞ்சரிப்பாய் . . .

நாராயண பட்டத்ரியின்
ஸ்ரீமன் நாராயணீய உலகில் சஞ்சரிப்பாய் . . .
 
 சத்ரபதி சிவாஜியின்
இந்துதர்ம ஸ்தாபன உலகில் சஞ்சரிப்பாய் . . .

சதாசிவ ப்ரும்மேந்திரரின்
யோக உலகில் சஞ்சரிப்பாய் . . .

ஜனக மஹாராஜாவின்
விதேஹ உலகில் சஞ்சரிப்பாய் . . .

ஸ்வாமி நம்மாழ்வாரின்
தியான உலகில் சஞ்சரிப்பாய் . . .

யசோதா மாதாவின்
வாத்சல்ய உலகில் சஞ்சரிப்பாய் . . .

அர்ஜுனனின்
ஸ்ரீமத் பகவத் கீதா உலகில் சஞ்சரிப்பாய் . . .

வேடுவச்சி சபரியின்
காத்திருக்கும் உலகில் சஞ்சரிப்பாய் . . .

சனாதன கோஸ்வாமியின்
ப்ருந்தாவன உலகில் சஞ்சரிப்பாய் . . .
 
க்ருஷ்ணனின்
ராதிகா உலகில் சஞ்சரிப்பாய் . . .
 
ராதிகாவின்
க்ருஷ்ண உலகில் சஞ்சரிப்பாய் . . .

மஹான்களின் ஆசீர்வாதம் உண்டு . . .
 
என்னுடைய ஆசீர்வாதமும் உண்டு !
 

0 comments:

About


Radhekrishna Sath Sangam . . .The Secured Sacred Spiritual Journey towards salvation . . .Founded by HER HOLINESS POOJYA SHREE SHREE AMMA . . .

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP