ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 26 ஜூலை, 2010

என் உலகம் !

ராதேக்ருஷ்ணா

எல்லோருக்கும் ஒரு உலகம் உண்டு !

எனக்கும் ஒரு உலகம் உண்டு !

என் உலகத்தைப் பற்றி
தெரிந்துகொள்ள ஆசையா ? ! ?

வா... சொல்கிறேன் !

என் உலகம் ஆனந்தமயமானது . . .
அங்கே துக்கமே கிடையாது !

என் உலகம் அழகானது . . .
அங்கே அவலக்ஷணமே கிடையாது !

என் உலகம் ஞானமயமானது . . .
அங்கே அஞ்ஞானமே கிடையாது !

என் உலகம் அன்பு மயமானது . . .
அங்கே விரோதமே கிடையாது !

என் உலகம் வெற்றியின் இருப்பிடம் . . .
அங்கே தோல்விகளே கிடையாது !

என் உலகில் குறும்புகளுக்கு குறைவில்லை . . .
அங்கே குற்றங்களுக்கு இடமில்லை !

என் உலகம் செல்வச்செழிப்பானது . . .
அங்கே ஏழ்மையில்லை !

என் உலகம் வீரம் நிறைந்தது  . . .
அங்கே பயம் வாழ வழியில்லை !

என் உலகம் மங்களகரமானது . . .
அங்கே அமங்களங்களே கிடையாது !

என் உலகம் சுகந்தமானது . . .
அங்கே துர்கந்தமே கிடையாது !

என் உலகில் சிரிப்பிற்க்கு பஞ்சமில்லை . . .
அங்கே ஆனந்த அழுகையுமுண்டு !

என் உலகில் சோம்பேறித்தனமே கிடையாது !
அங்கே எப்பொழுதும் கர்மயோகம் தான் !

என் உலகில் தனிமையில்லை . . .
அங்கே எப்பொழுதும் கொண்டாட்டம்தான் !

என் உலகில் பஞ்சமில்லை . . .
அங்கே எல்லா வளமும் என்றுமுண்டு !

என் உலகில் பொறாமையில்லை . . .
அங்கே எல்லோருக்கும் எல்லாம் உண்டு !

என் உலகில் பாரபட்சமில்லை . . .
அங்கே எல்லோரும் சமமே !

என் உலகில் காமம் இல்லை . . .
அங்கே ப்ரேமைக்கு மட்டுமே இடம் உண்டு !

என் உலகில் தயக்கமில்லை . . .
அங்கே உரிமைதான் மிக முக்கியம் !

என் உலகில் எதிர்பார்ப்பில்லை . . .
அங்கே அதனால் ஏமாற்றமில்லை !

என் உலகம் பரிவானது . . .
அங்கே கடுமையே கிடையாது !

என் உலகம் அத்ருஷ்ட மயமானது . . .
அங்கே துரத்ருஷ்டமே கிடையாது !

என் உலகில் கனவுகளே கிடையாது . . .
அங்கே விழிப்புதான் உண்டு !

என் உலகில் இருட்டே கிடையாது . . .
அது எப்பொழுதும் ஜொலித்துக்கொண்டுதான் இருக்கும் !

என் உலகம் தூங்குவதே கிடையாது . . .
அது எப்பொழுதும் நன்மையே சிந்திக்கிறது !

என் உலகில் பேய்,பிசாசுகளே கிடையாது . . .
அங்கே பக்தியும்,முக்தியும்தான் உண்டு !

என் உலகில் பொய்யுண்டு . . .
என் உலகில் மற்றவர் பொய் சொல்ல முடியாது !

என் உலகம் சத்தியமானது . . .
அதனால் எப்பொழுதும் நிரந்தரமானது !

என் உலகை உள்ளபடி வர்ணிக்க
யாராலும் முடியாது . . .
வேதமே தோற்றுப்போகும் ஓரிடம் . . .
என் உலகம் . . .

அந்த உலகம் என்னை எப்பொழுதும்
தாங்கிக்கொண்டேயிருக்கும் . . .

இன்னும் கோடி விதமாய் சொன்னாலும்
உனக்குப் புரியாது . . .
ஏனெனில் வார்த்தைகளே தேவையில்லாத
ஓரிடம் என் உலகம் . . .

உனக்குப் புரியும்படியாக
ஒரு வார்த்தையில்
சொல்லட்டுமா ? ! ?

என் உலகை ஆள்பவர் யார் தெரியுமா ?
ப்ரேம ஸ்வரூபிணி ராதிகா ராணி . . .

இப்பொழுது கண்டுபிடித்தாயா ?
இருந்தாலும் நானே சொல்கிறேன் . . .

என் உலகம்..... க்ருஷ்ணன் . . .
க்ருஷ்ணன் . . . என் உலகம் . . .
இப்பொழுது உனக்குப் புரிந்திருக்குமே !

மீண்டும் ஆரம்பத்திலிருந்துப்
படித்துப் பார் !

நன்றாகத் தெளிவாகப் புரியும் !

க்ருஷ்ணனே என் உலகம் . . .
க்ருஷ்ணனே உன் உலகம் . . .
க்ருஷ்ணனே நம் உலகம் . . .

க்ருஷ்ணனை உலகாகப் பார் . . .
உலகை க்ருஷ்ணனாகப் பார் . . .

உலகம் . . .க்ருஷ்ணன் . . .உலகம் !
க்ருஷ்ணன் . . . உலகம் . . . க்ருஷ்ணன் !


0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP