ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி
அனந்தபுர நகரம் புகுதுமின்றே !

Search This Blog

Wednesday, December 9, 2009

பயப்படாதே !

ராதேக்ருஷ்ணா


பயப்படாதே !

எதற்கும் பயப்படாதே !


நீ பயப்படாதே !
வாழ்க்கையைப் பற்றிப்
பயப்படாதே !


எதிர்காலத்தைப் பற்றிப்
பயப்படாதே !


கெடுதல் நடக்குமோ என்று
பயப்படாதே !


நல்லது நடக்காதோ என்று
பயப்படாதே !


வியாதி வந்து விடுமோ என்று
பயப்படாதே !


வியாதி சரியாகாதோ என்று
பயப்படாதே !


நாளை அனாதையாகி விடுவோமோ
என்று பயப்படாதே !


பேய், பிசாசு பிடிக்குமோ
என்று பயப்படாதே !


யாராவது பில்லி சூனியம்
வைத்திருப்பார்களோ என்று
பயப்படாதே !


உன்னை ஏமாற்றிவிடுவார்களோ
என்று பயப்படாதே !


எதிர்காலம் என்னவாகுமோ
என்று பயப்படாதே !


வேலை போய் விடுமோ
என்று பயப்படாதே !


வியாபாரத்தில் தோற்றுவிடுவோமோ
என்று பயப்படாதே !
உன் வீட்டில் திருடு போய்விடுமோ
என்று பயப்படாதே !


உன்னை நாய் கடித்துவிடுமோ
என்று பயப்படாதே !


இருட்டைக் கண்டு யாராவது
அங்கு ஒளிந்திருக்கிறார்களோ
என்று பயப்படாதே !


பகவான் உன்னைக் காப்பாற்ற
மாட்டானோ என்று
பயப்படாதே !


உன் வாழ்க்கையில்
ஜெயிக்கமாட்டாயோ
என்று பயப்படாதே !


உன் குழந்தைகளின்
வாழ்க்கை எப்படியிருக்குமோ
என்று பயப்படாதே !


எதிர்காலத்தில் ஏழ்மை
வந்துவிடுமோ
என்று பயப்படாதே !


உனக்கு படிப்பு வராதோ
என்று பயப்படாதே !


உன்னால் படிக்க முடியாதோ
என்று பயப்படாதே !


உன் கூட வேலை செய்பவர்கள்
உன்னை கவிழ்த்துவிடுவார்களோ
என்று பயப்படாதே !நீ சேர்த்து வைத்த
சொத்தெல்லாம்
போய்விடுமோ
என்று பயப்படாதே !


யாருக்கோ நடந்த விஷயங்கள்
உன் வாழ்க்கையில்
நடந்துவிடுமோ
என்று பயப்படாதே !
நாளை உலகில்
மிகப்பெரிய அவமானம்
வந்துவிடுமோ
என்று பயப்படாதே !


உனக்கு யாராவது
நம்பிக்கை துரோகம்
செய்துவிடுவார்களோ
என்று பயப்படாதே !
 


எதற்காக உன்
மனதை அலட்டிக்கொள்கிறாய்...


நீ பயந்து என்னவாகப்போகிறது . . .

நீ எதை நினைத்துப் பயப்படுகிறாயோ
அதுவே உன் மனதில் பதிந்துவிடும் . . .


எது உன் மனதில் ஆழமாகப்
பதிகிறதோ
அதுவே நடந்து விடும்...


அதனால் நீ பயப்படுவதே
உன் வாழ்க்கையில் நடந்துவிடும் . . .

இது தேவையா ?

நல்லதை மட்டுமே நினை !

மஹாபாபிகளை 
நினைத்துப் பயப்படாதே !
உன் கணவனை
நினைத்துப் பயப்படாதே !
உன் மனைவியை
நினைத்துப் பயப்படாதே !
உன் குழந்தையை
நினைத்துப் பயப்படாதே !
உன் முதலாளியை
நினைத்துப் பயப்படாதே !
உன் கூட வேலை செய்பவர்களை
நினைத்துப் பயப்படாதே !
பக்கத்து வீட்டுக் காரர்களை
நினைத்துப் பயப்படாதே !
மந்திரவாதிகளை
நினைத்துப் பயப்படாதே !
உன்னைப் பற்றி அவதூறு பேசுபவர்களை
நினைத்துப் பயப்படாதே !
உனக்குத் துரோகம் செய்ய நினைப்பவர்களை
நினைத்துப் பயப்படாதே !
நீ வேலை செய்யுமிடத்தில் தரும்
வேலைப் பளுவை
நினைத்துப் பயப்படாதே !
வீட்டுக்காரியங்களை
நினைத்துப் பயப்படாதே !
முன்பின் அறிமுகமில்லாதவர்களை
நினைத்துப் பயப்படாதே !
உனக்குப் பிடித்தவர்களின்
உடல் நிலையை 
நினைத்துப் பயப்படாதே !

 உன் க்ருஷ்ணனிடம்
பயத்தைக் கொடுத்துவிடு !


உன் க்ருஷ்ணனிடம்
தைரியத்தைக் கேள் !


பகவானிடமும் 
பயப்படாதே !


உம்மாச்சி உன்னை ஒன்றும்
செய்யாது . . .இப்பொழுதிலிருந்து 
பயப்படுவதற்கு
பயப்படு . . .
0 comments:

About


Radhekrishna Sath Sangam . . .The Secured Sacred Spiritual Journey towards salvation . . .Founded by HER HOLINESS POOJYA SHREE SHREE AMMA . . .

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP