கடமையைச் செய்!
ராதேக்ருஷ்ணா
உன் பெற்றோருக்குச்
செய்ய வேண்டிய கடமையைச் செய்!
உன் குடும்பத்திற்குச்
செய்ய வேண்டிய கடமையைச் செய்!
உன் மனைவிக்குச்
செய்ய வெண்டிய கடமையைச் செய்!
உன் கணவனுக்குச்
செய்ய வெண்டிய கடமையைச் செய்!
உன் குழந்தைகளுக்குச்
செய்ய வெண்டிய கடமையைச் செய்!
உன் உடன்பிறந்தோருக்குச்
செய்ய வெண்டிய கடமையைச் செய்!
உன் மூதாதையருக்குச்
செய்ய வெண்டிய கடமையைச் செய்!
உன் அலுவலகத்தில்
செய்ய வெண்டிய கடமையைச் செய்!
உன் வீட்டிற்கு
செய்ய வெண்டிய கடமையைச் செய்!
உன் வியாபாரத்தில்
செய்ய வெண்டிய கடமையைச் செய்!
உன் வம்சத்திற்கு
செய்ய வெண்டிய கடமையைச் செய்!
பிற உயிர்களுக்கு
செய்ய வெண்டிய கடமையைச் செய்!
உன் தேசத்திற்கு
செய்ய வெண்டிய கடமையைச் செய்!
உனக்கு நீ
செய்ய வெண்டிய கடமையைச் செய்!
பக்தர்களுக்கு
செய்ய வெண்டிய கடமையைச் செய்!
ஹிந்து தர்மத்திற்கு
செய்ய வெண்டிய கடமையைச் செய்!
உலகத்திற்கு
செய்ய வெண்டிய கடமையைச் செய்!
உன் குருவுக்குச்
செய்ய வெண்டிய கடமையைச் செய்!
பல பேருடைய
தவறான அபிப்ராயம்
பக்தி செய்வது
கடமையிலிருந்து தப்பிப்பதற்காக !
சத்தியமாக இல்லை !
உன் கடமையை இன்னும்,
ஒழுங்காக,நேர்த்தியாக,அழகாக,
சரியாக,அற்புதமாக,நுணுக்கமாக,
செய்வதற்காகத்தான் பக்தி !
ஜனகர் கடமையினால்தான்
சீதையைப் பெண்ணாகவும்,
ராமனை மாப்பிள்ளையாகவும்
அடைந்தார் !
விதுரர் கடமையினால்தான்
தன்னுடைய கடைசி காலத்தில்
ஸ்ரீ மத் பாகவதத்தைக்
கேட்டார் !
மாலாகாரர் கடமையினால்தான்
தன்னுடைய வீட்டிற்கே
ஸ்ரீ க்ருஷ்ணனை
வரவழைத்தார் !
புண்டலீகன் தன் பெற்றோருக்குச்
செய்த கடமையினால் தான்
அவரிடத்திற்கே
பாண்டுரங்கன் தானே வந்தான் !
இன்னும் கோடி உதாரணங்கள்
சத்தியமாகச்
சொல்ல முடியும் !
நீயும் உன் கடமையைச் செய் !
பக்தியோடு செய் !
வினயத்தோடு செய் !
சந்தோஷமாகச் செய்!
ஆத்மார்த்தமாகச் செய்!
சிரத்தையோடு செய்!
தைரியமாகச் செய்!
எதிர்பார்ப்பில்லாமல் செய்!
நாமஜபத்தோடு செய்!
உன் ஆத்மா ப்ரசன்னமாகும்படி செய்!
உன் க்ருஷ்ணனுக்காகச் செய் !
உன் குரு கட்டளைப் படி செய்!
அதன் பிறகு
நீயே அதிசயிப்பாய் !
கடமையைச் செய்வது
எத்தனை சுகம் !
கடமையைச் செய்வது
எத்தனை சுலபம் !
கடமையைச் செய்வது
எத்தனை அவசியம் !
எறும்பும் தன் கடமையைச்
சரியாகச் செய்கிறது !
பறவைகளும் தன் கடமையைச்
ஒழுங்காகச் செய்கிறது !
மிருகங்களும் தன் கடமையைச்
சமத்தாகச் செய்கிறது !
மரம்,செடி,கொடிகளும் தன் கடமையைச்
சரிவரச் செய்கிறது !
இவை எதுவும் தன் கடமையிலிருந்து
ஒரு நாளும்
தப்பிக்க முயற்சித்ததில்லை !
தன் கடமையைப் பண்ணித்
தொலைக்க வேண்டியிருக்கிறதே
என்று மூக்கால் அழவில்லை !
தன் கடமையைச் செய்ததற்கு
ப்ரதிபலனாக
எதையும் எதிர்ப்பார்ப்பதில்லை !
தன் கடமையைச் செய்ததற்கு
எல்லோரும் தன்னைக்
கொண்டாடவேண்டும் என்று
ஆசைப்படவில்லை !
ஹே ஆறறிவுள்ள
மனித ஜந்துவே
நீ மட்டும் ஏன் இத்தனை
மட்டமாக இருக்கிறாய் . . .
சீ...சீ....
நீயும் உன் தற்பெருமையும்,,,
நீயும் உன் தப்பிக்கும் மனப்பான்மையும்,,,
நீயும் உன் நொண்டிச்சாக்கும்,,,
நீயும் உன் திமிரும்,,,
நீயும் உன் எதிர்ப்பார்ப்பும்,,,
நினைத்தாலே வயிற்றைப்
பிரட்டி வாந்திதான் வருகிறது...
எது கடமை,
எது ஆசை,
எது சுமை,
எது பைத்தியக்காரத்தனமென்று
புரியவில்லையா ?
விடாமல் நாம ஜபம் செய்...
கடமையைச் செய்தால்
மனதில் ஒருநாளும்
குற்ற உணர்ச்சி வராது...
ஒரேயொரு உதாரணம்
சொல்கிறேன் ...
இதுவரை உன் வாழ்க்கையில்
நீ பல தடவை
மல மூத்திரம் போயிருக்கிறாய்...
ஆனால் ஒரு தடவை கூட
மல மூத்திரத்தை வெளியில்
தள்ளிய பிறகு
உனக்கு குற்ற உணர்ச்சி
வந்ததே கிடையாது . . .
இதுபோல் நீயே சிந்தித்துப் பார்...
தெளிவாகப் புரியும் !
விடாமல் நாமஜபம் செய் !
சரியாக வழி கிடைக்கும் !
இனியாவது மனிதனாக இரு....
0 கருத்துகள்:
கருத்துரையிடுக