ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 14 செப்டம்பர், 2010

எனக்கு ஒரு குறைவில்லை !

ராதேக்ருஷ்ணா

குறை சொல்லாதே . . .

ஒரு போதும் புலம்பாதே . . .

எனக்கு ஒரு குறையுமில்லை
என்று சொல் . . .

நமக்கு என்ன குறை ?

க்ருஷ்ணன் நமக்கு வாழ
வாழ்க்கையைக் கொடுத்திருக்கிறான் !

க்ருஷ்ணன் நமக்கு உலகை
அனுபவிக்க மனித உடலைத் தந்திருக்கிறான் !

க்ருஷ்ணன் நாம் தூங்குவதற்கு
இரவைத் தந்திருக்கிறான் !

க்ருஷ்ணன் நாம் உழைப்பதற்கு
பகலைத் தந்திருக்கிறான் !

க்ருஷ்ணன் உலகைப் பார்க்க
நமக்குக் கண்களைத் தந்திருக்கிறான் !

க்ருஷ்ணன் சப்தத்தைக் கேட்க்க
நமக்குக் காதுகளைத் தந்திருக்கிறான் !

க்ருஷ்ணன் வாசனைகளை அனுபவிக்க
நமக்கு மூக்கைத் தந்திருக்கிறான் !

க்ருஷ்ணன் நாமத்தை ஜபிக்க
நமக்கு வாயைத் தந்திருக்கிறான் !

க்ருஷ்ணன் ப்ரசாதத்தை ருசிக்க
நமக்கு நாக்கைத் தந்திருக்கிறான் !

க்ருஷ்ணன் வேலைகளை செய்ய
நமக்கு கைகளைத் தந்திருக்கிறான் !

க்ருஷ்ணன் நாம் நடப்பதற்கு
கால்களைத் தந்திருக்கிறான் !

க்ருஷ்ணன் நாம் யோசிப்பதற்கு
அழகான மூளையைத் தந்திருக்கிறான் !


க்ருஷ்ணன் நாம் சிந்திப்பதற்கு
அற்புதமான மனதைத் தந்திருக்கிறான் !


வாய் நிறைய சொல்வதற்கு
க்ருஷ்ண நாம ஜபம் தந்திருக்கிறான் !


நமக்குச் சாப்பிட சுவையான
அன்னத்தைத் தந்திருக்கிறான் !


நாம் சுவாசித்து ஜீவிக்க
காற்றைப் படைத்திருக்கிறான் !


நம் தாகம் தீர நல்ல
தண்ணீரை படைத்திருக்கிறான் !


நம்மை வாழவைக்க வெப்பம் தரும்
சூரியனைப் படைத்திருக்கிறான் !


நம்மை வசீகரிக்க அழகான
சந்திரனைப் படைத்திருக்கிறான் !


வானவெளியில் மின்னி நம்மை
கொள்ளையடிக்க நக்ஷத்திரங்களைத்
தந்திருக்கிறான் !


அழகில் நாம் மயங்கவும்,
அவனுக்கு அர்ச்சனை செய்யவும்,
அற்புதமான மலர்களை
ஸ்ருஷ்டித்திருக்கிறான் !


நம்மை கர்ப்பத்தில் சுமக்க
தாயைத் தந்திருக்கிறான் !


நம் தேவைகளை பூர்த்தி செய்ய
தந்தையைத் தந்திருக்கிறான் !


நாம் ருசியாய் அனுபவிக்க
எத்தனை காய்கறிகளை தந்திருக்கிறான் !


நாம் ரசித்து ருசிக்க எவ்வளவு
விதமான பழங்களைத் தந்திருக்கிறான் !


நமக்கு உதவி செய்ய
எத்தனை நல்ல இதயங்களை
நம்மை சுற்றி வாழவைத்திருக்கிறான் !


நம் மானத்தைக் காப்பாற்ற
எத்தனை விதமான துணிகளைத்
தந்திருக்கிறான் !


நாம் பேசி மகிழ உலகில்
எத்தனை மொழிகளைப் படைத்திருக்கிறான் !


நாம் ரசித்து மகிழ
எவ்வளவு அதிசயமான சப்தங்களை
ஒவ்வொரு விதமாக படைத்திருக்கிறான் !


நாம் கொண்டாடி மகிழ
எத்தனை பண்டிகைகளைத் தந்திருக்கிறான் !


நம் இளமைக்கு எத்தனை
பலத்தையும்,அழகையும் தந்திருக்கிறான் !


நம்மை வழிநடத்த,உரிமையோடு
கண்டிக்க நம் வீட்டில் பெரியவர்களைத்
தந்திருக்கிறான் !


நாம் சம்பாதிக்க எத்தனை
நல்ல வழிகளைத் தந்திருக்கிறான் !


நம்மை அலங்கரித்துக்கொள்ள
எத்தனை பொருட்களைத் தந்திருக்கிறான் !


நமக்கு ஆனந்தத்தை அள்ளித்தர
குழந்தைகளை தந்திருக்கிறான் !


நாம் வாழ்வில் முன்னேற
சத்சங்கத்தைத் தந்திருக்கிறான் !


நம்மை வழிநடத்த சத்குருவை
தந்திருக்கிறான் !


இன்னும் என்னென்னவோ
குறைவில்லாமல் தந்திருக்கிறான் !


ஒவ்வொரு நிமிஷமும்
நம்மை அத்தனை ஜாக்கிரதையாகப்
பார்த்துக்கொண்டிருக்கிறான் !


நம் தேவைகள் அனைத்தையும்
மிக அற்புதமாக கவனித்துக்கொள்கிறான் !


நமது மனம் சோர்ந்துபோகும்போதெல்லாம்
எத்தனை நம்பிக்கைத் தருகிறான் !


அதனால் எனக்கு ஒரு குறைவில்லை . . .


நான் மிக மிக சந்தோஷமாக இருக்கிறேன் !


எனக்கு ஒரு கவலையில்லை !


எனக்கு ஒரு பயமில்லை !


எனக்கு ஒரு சந்தேகமில்லை !


எனக்கு ஒரு தேவையில்லை !


எனக்கு ஒரு யோசனையில்லை !


எனக்கு ஒரு குழப்பமில்லை !


எனக்கு ஒரு துன்பமில்லை !


நீயும் ஆனந்தமாக இரு !


க்ருஷ்ணன் தந்ததை அநுபவித்துக்கொண்டு
நிம்மதியாயிரு . . .



0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP