ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

என்ன கைமாறு செய்வேன் ?


ராதேக்ருஷ்ணா


ஸ்ரீ இராகவேந்திராய நம:

ஸ்வாமி இராகவேந்திரரின் கருணைக்கு
என்ன கைமாறு செய்வேன் ?

இந்த ஏழையை அவரின்
புண்ணியகதையை சொல்ல வைத்ததற்கு
என்ன கைமாறு செய்வேன் ?

வேங்கடநாதன் என்ற அவருடைய
திருநாமத்தை பலதடவை சொல்ல வைத்ததற்கு
என்ன கைமாறு செய்வேன் ?

பல ஊர்களில் அவருடைய
ம்ருத்திகா ப்ருந்தாவனத்தில்
அவர் வைபவத்தைச் சொல்ல வைத்ததற்கு
என்ன கைமாறு செய்வேன் ?

துங்கபத்ரா நதிக்கரையில்
ஸ்வாமி இராகவேந்திரருடைய ஜீவசமாதி
இருக்கும் மந்த்ராலயத்தில்
அடியேனை அனுமதித்ததற்கு
என்ன கைமாறு செய்வேன் ?

மந்த்ராலயத்தில் தன்னிருப்பிடத்தில்
என்னை நிற்கவைத்ததற்கு
என்ன கைமாறு செய்வேன் ?

உடலில் பலம் கொடுத்து,
உள்ளத்தில் ஆசையைக் கொடுத்து,
அவரை ப்ரதக்ஷிணம் செய்ய வைத்ததற்கு
என்ன கைமாறு செய்வேன் ?

இந்த அதம ஜீவனுக்கும்,
கருணையோடு ப்ரசாதம் கொடுத்த,
அந்த நடமாடும் மனித தெய்வத்திற்கு
என்ன கைமாறு செய்வேன் ?

உடலெங்கும் களைப்பு விளையாடினாலும்,
தனியான ஒரு தெய்வபலம் தந்து,
இந்த அடியேனையும் மந்த்ராலயத்தில்,
சிறிது நேரம் வாழவைத்த,
ஸ்வாமி இராகவேந்திரருக்கு
எத்தனை ஜன்மத்தில்,
என்ன கைமாறு செய்வேன் ?

 ஒரு கைமாறும் ஒரு ஜன்மாவிலும்,
சத்தியமாக செய்யமுடியாது என்பதே உண்மை . . .

ஸ்வாமி இராகவேந்திரரே . . .
 இந்த ஏழைக்கும் மந்த்ராலயத்தில்
ஒரு கைங்கர்யம் தாரும் . . .

கேட்க்கும் அருகதையில்லை . . .
உம்மைத்தவிர யாரிடம் போய் கேட்ப்பேன் . . .

நீர் மனித தெய்வம் . . .
 நீர் ப்ரஹ்லாதனின் அவதாரம் . . .
நீரே கலியுக ரக்ஷகன் . . .

மூடனையும் படிக்கவைத்த புண்ணியவான் நீ . . .
முகம்மதியனையும் இந்து தெய்வத்தை நம்பவைத்த
உத்தம பக்தன் நீ . . .
 உலகிற்காக இளவயது மனைவியையும்,
சிறுவயது குழந்தையையும் தியாகம் செய்த
தியாகசிகாமணி நீ . . .
 திமிர் பிடித்த ஆங்கில துரைக்கும் காட்சி தந்து,
மந்த்ராலய பலத்தை நிரூபித்த உன்னத
மஹாத்மா நீ . . .

இன்றும் பலரின் ப்ரத்யக்ஷ தெய்வம் நீ . . .

என் வம்சமே உனக்கு கடன்பட்டிருக்கிறது . . .

ஐயோ ? என்ன கைமாறு செய்வேன் !


நீயே சொல் . . .
நீயே முடிவுசெய் . . .


இந்த ஏழை உனக்கு என்ன கைமாறு
செய்யவேண்டுமென்று . . .


  
 

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP