ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி
அனந்தபுர நகரம் புகுதுமின்றே !

Search This Blog

Sunday, October 3, 2010

முத்தம் . . .

ராதேக்ருஷ்ணா

முத்தம் . . .
வாழ்வில் சுகமான ஒரு அனுபவம் !

வாழ்வில் மறக்கமுடியாத சுகம் !

ஒவ்வொருவரும் வாழ்வில்
ஆசைப்படும் ஒரு வரம் !

ஒவ்வொரு வயதிலும் விதவிதமான
ஆனந்தத்தைத் தரும் ஒரு
அனுபவம் !

எல்லா வயதினரும் ரசிக்கும் ஒரு
வினோத விஷயம் !

முத்தத்தில் வாஞ்சை உண்டு . . .
முத்தத்தில் அன்பு உண்டு . . .
முத்தத்தில் உரிமை உண்டு . . .
முத்தத்தில் ஆசை உண்டு . . .
முத்தத்தில் காதல் உண்டு . . .
முத்தத்தில் நன்றி உண்டு . . .
 முத்தத்தில் ஆசிர்வாதம் உண்டு . . .
முத்தத்தில் தானம் உண்டு . . .
முத்தத்தில் ஏக்கம் உண்டு . . .
முத்தத்தில் பிணைப்பு உண்டு . . .
முத்தத்தில் அதிர்வு உண்டு . . .
முத்தத்தில் உணர்வு உண்டு . . .
முத்தத்தில் முடிவு இல்லை . . .

முத்தத்தில் பக்தியும் உண்டு . . . 

முத்தம் பலம் தரும் . . .
முத்தம் பிணக்கைத் தீர்க்கும் . . .
முத்தம் அன்பைப் பறிமாறும் . . .
முத்தம் வாழ்த்தைத் தரும் . . .
முத்தம் கோபத்தை மாற்றும் . . .
முத்தம் மனதை சமாதானப்படுத்தும் . . .
முத்தம் வாழ்வை ரசமாக்கும் . . .
 முத்தம் ஆயுளை நீட்டிக்கும் . . .
முத்தம் குதூகலம் தரும் . . . 
  
 முத்தம் ஞானமும் தரும் . . .
முத்தம் வைராக்யமும் தரும் . . .
முத்தம் சாந்தமும் தரும் . . .

இன்னும் என்னவெல்லாம் தரும் . . .
இன்னும் என்னவெல்லாம் செய்யும் . . .

முத்தத்திற்காகக் காத்திரு . . . 

 இதுவரை எத்தனையோ
முத்தத்தை அனுபவித்திருப்பாய் . . .

இதுவரை எத்தனையோ
முத்தத்தில் திளைத்திருப்பாய் . . .

இதுவரை எத்தனையோ
முத்தங்களை கொடுத்திருப்பாய் . . .

இனி இப்படியும் முத்தம் கொடு . . .

க்ருஷ்ணனின் உதடுகளில் ஒரு முத்தம் !

ராதிகாவின் திருவடி தூசிக்கு ஒரு முத்தம் !

கோபிகைகளின் பானைக்கு ஒரு முத்தம் !

யசோதை கட்டின தாம்புக்கயிற்றுக்கு ஒரு முத்தம் !

க்ருஷ்ணனோடு விளையாடின கன்றுக்குட்டிக்கு
ஒரு முத்தம் !

க்ருஷ்ணனுக்கு பாலூட்டின பசுவிற்கு ஒரு முத்தம் !

க்ருஷ்ணன் தூக்கின கோவர்தனகிரிக்கு ஒரு முத்தம் !

க்ருஷ்ணனின் கால் சலங்கைக்கு ஒரு முத்தம் !
  
க்ருஷ்ணனின் கோமணத்திற்கு ஒரு முத்தம் !

க்ருஷ்ணனின் அதராம்ருதத்தைக் குடிக்கும்
வேணுவுக்கு ஒரு முத்தம் !

க்ருஷ்ணனின் கைகளில் விளையாடும்
வளையல்களுக்கு ஒரு முத்தம் !


 க்ருஷ்ணனின் தலையிலிருக்கும் மயில்பீலிக்கு
ஒரு முத்தம் !

 இன்னும் நிறைய முத்தங்கள் பாக்கி உண்டு . . .

பாண்டுரங்கனின் திருவடிகளைத் தாங்கும்
செங்கல்லுக்கு ஒரு நமஸ்காரம் !

பார்த்தசாரதியின் முறுக்கு மீசைக்கு
ஒரு முத்தம் !

உடுப்பி க்ருஷ்ணனின் கையிலிருக்கும்
மத்திற்கு ஒரு முத்தம் !

உன்னி க்ருஷ்ணன் குருவாயூரப்பனின்
கோமணத்திற்கு ஒரு முத்தம் !

மல்லூர் க்ருஷ்ணனின் ப்ருஷ்ட
பாகத்திற்கு ஒரு முத்தம் !

காஞ்சி வரதராஜனின் புன்னகை
பூத்த திருமுகத்திற்கு ஒரு முத்தம் !

திருப்பதி ஸ்ரீநிவாசனின்
குலசேகர படிக்கு ஒரு முத்தம் !

திருக்குறுங்குடி சுந்தர பரிபூரண
நம்பியின் செங்கனி வாய்க்கு ஒரு
அழுத்தமான முத்தம் !

ஸ்ரீரங்கராஜனை சுமக்கும்
ஆதிசேஷனுக்கு ஒரு முத்தம் !

திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாளின்
மரக்காலுக்கு ஒரு முத்தம் !

ஸ்வாமி நம்மாழ்வாரைச் 32 வருஷங்கள் சுமந்த
திருப்புளியாழ்வாருக்கு ஒரு முத்தம் !

திருமங்கையாழ்வாரின் திருக்கைகளிலிருக்கும்
வேலுக்கு ஒரு முத்தம் !

பெரியாழ்வாரின் திருக்கையிலிருக்கும்
பூக்குடலைக்கு ஒரு முத்தம் !

எங்கள் நாச்சியார் ராஜாத்தி ஆண்டாள்
சூடிக்களைந்த மாலைக்கு ஒரு முத்தம் !

குலசேகர ஆழ்வார் பரமபதித்த
மன்னார் கோவிலுக்கு ஒரு முத்தம் ! 

கோயில்களில் சுகமாய்,சுதந்திரமாய்
வசிக்கும் பூனைகளுக்கு ஒரு முத்தம் !

 இன்னும் பல முத்தங்கள் தரவேண்டியுள்ளது !

ஸ்வாமி இராமானுஜரின் த்ரிதண்டத்திற்கு
ஒரு முத்தம் !

ஸ்ரீ க்ருஷ்ண சைதன்யரின் காவிவஸ்திரத்திற்கு
ஒரு முத்தம் !

ஸ்வாமி இராகவேந்திரரின் பாதுகைகளுக்கு
ஒரு முத்தம் !

மீரா மாதாவின் கையிலிருக்கும்
சப்லாகட்டைக்கு ஒரு முத்தம் !

தியாகராஜரின் திருக்கைகளில்
விளையாடும் தம்பூராவிற்கு ஒரு முத்தம் !

திருப்பதி ஸ்ரீநிவாசனின் முகத்தைப்
பதம் பார்த்த ஸ்ரீ அனந்தாழ்வானின்
கடப்பாறைக்கு ஒரு முத்தம் !

 ஸ்ரீ ஜயதேவரின்
கீதகோவிந்தத்திற்கு ஒரு முத்தம் !

சுகப்ரும்மம் ஸ்ரீ மத் பாகவதம்
சொன்ன இடத்திற்கு ஒரு முத்தம் !

எங்கள் பாரத மாதாவின்
திருவடிகளுக்கு ஒரு முத்தம் !

எங்கள் இந்து மாதாவின்
சரணதூளிக்கு ஒரு முத்தம் !

இன்னும் நிறைய முத்தங்கள்
இப்படி எல்லாம் தந்து பார் ! ! !

வாழ்வே சுகமாயிருக்கும்....


0 comments:

About


Radhekrishna Sath Sangam . . .The Secured Sacred Spiritual Journey towards salvation . . .Founded by HER HOLINESS POOJYA SHREE SHREE AMMA . . .

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP