ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 10 அக்டோபர், 2010

சரணாகதி !

ராதேக்ருஷ்ணா

கதி இல்லாதவர்களுக்கு
ஒரே கதி
சரணாகதி . . .

உலகில் மிகச் சுலபமான
ஒரு வழி
சரணாகதி . . .

எல்லோராலும் செய்ய முடிந்த 
ஒரு உபாயம்
சரணாகதி . . .

எந்த இடத்திலும், எந்த சமயத்திலும்
நிச்சயம் பலன் தரும்
சரணாகதி . . .

நிச்சயம் எல்லா விஷயங்களிலும்
நன்மை மட்டுமே செய்யும்
பலமுடையது சரணாகதி . . .

எனக்கு ஒன்றும் தெரியாது
என்று பகவான் க்ருஷ்ணனிடம்
ஒத்துக்கொள்வதே சரணாகதி . . .

உன்னை பரிபூரணமாக
நம்புகிறேன் என்று பகவான் க்ருஷ்ணனிடம்
நம்மை ஒப்படைப்பதே
சரணாகதி . . .

இன்னும் தெளிவாகச் சொல்லுவேன் . . .
காத்திரு . . .

ஒரு குழந்தை தன்னை எப்படி
பூரணமாகத் தாயினிடத்தில் ஒப்படைக்குமோ
அது போலே பகவான் க்ருஷ்ணனிடத்தில்
உன்னை ஒப்படைப்பதே
சரணாகதி !

ஒரு பதிவிரதை எப்படி தன்னுடைய
எல்லா தேவைகளுக்கும் தன் கணவனையே
சார்ந்திருப்பாளோ அதுபோலே
பகவான் க்ருஷ்ணனை மட்டுமே
எல்லாவற்றிற்கும் சார்ந்திருத்தலே
சரணாகதி !

எப்படி ஒரு நாற்காலியில்
உட்காரும்போது அதை திடமாக
நம்புகிறோமோ அதுபோலே,
க்ருஷ்ணனை திடமாக நம்புவதே
சரணாகதி !

உலகில் நீ எத்தனை நம்பிக்கை,
யார்யாரிடம் வைக்கிறாயோ,
அதையெல்லாம் சேர்த்து,
அதைவிட பலமடங்கு ஸ்ரீக்ருஷ்ணனிடம்
நம்பிக்கை வைப்பதே
சரணாகதி !

எதைப்பற்றியும் கவலைப்படாமல்
இருக்கவே சரணாகதி !

எதிர்கால கவலையில்லாமல்
வாழவே சரணாகதி !

பூர்வ ஜன்ம கர்மவினையை
நினைத்துப் பயப்படாமல்
வாழவே சரணாகதி !

மனதில் ஒரு பாரமில்லாமல்,
எப்பொழுதும் ஆனந்தமாக
இருப்பதற்கே சரணாகதி !

பால்ய வயதில் எப்படி
எந்த ஒரு கவலையுமில்லாமல்
வாழ்ந்தோமோ அதுபோலே
எப்பொழுதும் இருக்கவே
சரணாகதி !

நமக்கு க்ருஷ்ணனைத் தவிர
வேறு யாரும் நெருங்கிய பந்துயில்லை
என்பதை உணர்ந்து,
அவனிடம் நம் வாழ்க்கையின்
பொறுப்பைக் கொடுப்பதே
சரணாகதி !

எது நடந்தாலும்,எது வந்தாலும்,
எல்லாம் என் க்ருஷ்ணனுக்குத் தெரியும்;
அவன் என்னை நிச்சயம் காப்பாற்றுவான்;
எதற்காகவும் என்னைக் கைவிடமாட்டான்
என்று மனதில் விசுவாசம் கொள்வதே
சரணாகதி !

என் வாழ்க்கையைப் பற்றி
எனக்கு ஒரு குழப்பமில்லை !
எனக்கு ஒரு கவலையில்லை !
எனக்கு ஒரு சிந்தனையில்லை !
எனக்கு ஒரு பயமுமில்லை !
என்று ஸ்ரீஹரியான க்ருஷ்ணனை
நம்முடைய நலம்விரும்பியாக
ஏற்றுக்கொள்வதே சரணாகதி !

ஒரு சட்டையோ,கைகடிகாரமோ,
செருப்போ அல்லது வேறு ஏதேனும்
நம்முடைய பொருளோ, தனக்கென்று
ஒரு இஷ்டத்தை வைத்துக்கொள்ளாமல்,
எஜமானனின் இஷ்டப்படி இருப்பதுபோல்,
நாமும் நம் எஜமானாக க்ருஷ்ணனை ஏற்று,
அவனிஷ்டப்படி இருப்பதே சரணாகதி !




சரணாகதி செய்து பார் . . .
உன் வாழ்க்கை ஸ்வாரஸ்யமாகயிருக்கும் !
உன் வாழ்க்கை நிம்மதியாயிருக்கும் !
உன் வாழ்க்கை பத்திரமாயிருக்கும் !
உன் வாழ்க்கை குதூகலமாயிருக்கும் !
உன் வாழ்க்கை உனக்குப் பிடிக்கும் !
உன் க்ருஷ்ணனிடம் மட்டும் சரணாகதி செய் !
 வேறு எவரிடம் செய்தாலும் வம்புதான்  . . .




0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP