ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி
அனந்தபுர நகரம் புகுதுமின்றே !

Search This Blog

Friday, November 5, 2010

தீபாவளியா ? ? ?

ராதேக்ருஷ்ணா


தீபாவளியா ? ? ?

உண்மையாகவே நீ
தீபாவளி கொண்டாடுகிறாயா ?  ?  ?

உன்னுடைய சுயநலம்
என்ற முராசுரன்
முழுவதுமாக அழிந்தானா ?

உன் பேராசைகளை
அழித்து சமாதானம் தர
க்ருஷ்ணன் வந்தானா ?

உன் இருப்பிடத்திற்கு
க்ருஷ்ணனோடு சத்யபாமா
ஆனந்தமாய் வந்தாளா ?

உன்னுள் இருந்த
அகம்பாவம் என்னும்
நரகாசுரன் அழிந்தானா ?

ப்ராக்ஜ்யோதிஷபுரம் என்னும்
உன்னுடைய சரீரம்
க்ருஷ்ணனின் கட்டுப்பாட்டில்
வந்துவிட்டதா ?

உன் மனதில் உள்ள
பலவித [16100] ஆசைகளும்,
எதிர்ப்பார்ப்புகளும்
க்ருஷ்ணனையே கதியாக,
ஏற்றுக்கொண்டனவா ?

பக்தி என்னும் கங்கையில்
ஆனந்தமாகக் குள்ளக்குளிர
நீந்தி விளையாடினாயா ?

ஞானம் என்னும் புத்தாடையை
அழகாக உடுத்திக்கொண்டாயா ? 

உன் பைத்தியக்காரத்தனங்கள்
பட்டாசு போல் வெடித்து
சிதறினதா ?

வைராக்யம் என்னும் பக்ஷணத்தை
ஆசை தீர உண்டாயா ?

அன்பு என்னும் ஆனந்த
வெள்ளத்தில் எல்லோரோடும்
நீந்திக் களித்தாயா ?

யாரையும் கேவலப்படுத்தாமல்,
யார் மனதையும் நோகப்படுத்தாமல்,
எல்லோரோடும் கலந்து பழகினாயா ?

ஏழை எளியோரின் வீட்டில்,
உதவி என்னும் தீபத்தை ஏற்றினாயா ?

ஏழைக்குழந்தைகளின் முகத்தில்
சந்தோஷ மத்தாப்புகள் என்னும்
சிரிப்பு முத்துக்கள் சிதற,
அவர்களோடு கலந்து பழகினாயா ?

இத்தனையும் செய்திருந்தால்
நிச்சயம் நீ
தீபாவளிதான் கொண்டாடுகின்றாய் . . .

இதுவரை இப்படிக் கொண்டாடவில்லை
எனில் இந்தத் தீபாவளியை
இவ்வாறு கொண்டாடு . . .

இதுவே தீபாவளி . . .


0 comments:

About


Radhekrishna Sath Sangam . . .The Secured Sacred Spiritual Journey towards salvation . . .Founded by HER HOLINESS POOJYA SHREE SHREE AMMA . . .

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP