ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 13 நவம்பர், 2010

வில்லேந்தி ஒருவன் . . .

ராதேக்ருஷ்ணா




அடி வந்தாண்டி வந்தாண்டி
வில்லேந்தி ஒருவன் . . .
என் மீது அம்பெய்யவே . . .
அது யாரோடி ? யாரோடி ?
சொல்லேண்டி என் தோழியே . . .
அவன் மீது நான் அம்பெய்யவே . . . 


அடி வந்தாண்டி வந்தாண்டி
அழகான ஒருவன் . . .
என்னை வசீகரிக்கவே . . .
அது யாரோடி ? யாரோடி ?
சொல்லேண்டி என் தோழியே . . .
அவனை நான் வசீகரிக்கவே . . . 


அடி வந்தாண்டி வந்தாண்டி
இளங்காளை ஒருவன் . . .
என் இளமையைத் திருடவே . . .
அது யாரோடி ? யாரோடி ?
சொல்லேண்டி என் தோழியே . . .
அவன் இளமையை நான் திருடவே. . .
  
அடி வந்தாண்டி வந்தாண்டி
 உத்தமமான திருடன் . . .
என் உள்ளத்தை கொள்ளையிடவே . . .
அது யாரோடி ? யாரோடி ?
சொல்லேண்டி என் தோழியே . . .
 அவன் உள்ளத்தை நான் கொள்ளையிடவே . . .


 அடி வந்தாண்டி வந்தாண்டி
அன்பின் உருவாக ஒருவன் . . .
என்னை அன்பில் திளைக்கவைக்கவே . . .
அது யாரோடி ? யாரோடி ?
சொல்லேண்டி என் தோழியே . . .
 அவன் அன்பை நான் அனுபவிக்கவே . . .


அடி வந்தாண்டி வந்தாண்டி
சந்திரன் போன்று சிரிப்பவன் . . .
என்னை காதலில் சிக்கவைக்கவே . . .
அது யாரோடி ? யாரோடி ?
சொல்லேண்டி என் தோழியே . . .
அவனை நான் காதலில் அழவைக்கவே . . .


 அடி வந்தாண்டி வந்தாண்டி
கார் மேகம் போலொருவன் . . .
என்னை ஆனந்தத்தில் மூழ்கடிக்கவே . . .
அது யாரோடி ? யாரோடி ?
சொல்லேண்டி என் தோழியே . . .
அவனுள் நான் மூழ்கவே . . .


அடி வந்தாண்டி வந்தாண்டி
ராஜாதி ராஜன் ஒருவன் . . .
என்னை அவனுக்கு அடிமையாக்கிடவே . . .
அது யாரோடி ? யாரோடி ?
சொல்லேண்டி என் தோழியே . . .
அவனை நான் அடிமையாக்கவே . . .


அடி வந்தாண்டி வந்தாண்டி
துளியும் குறையேதுமில்லாத ஒருவன் . . .
என்னை பைத்தியமாக்கிடவே . . .
அது யாரோடி ? யாரோடி ?
சொல்லேண்டி என் தோழியே . . .
அவனை நான் பைத்தியமாக்கிடவே . . .


அடி வந்தாண்டி வந்தாண்டி
வேட்டைக்காரன் ஒருவன் . . .
என் பாபத்தை வேட்டையாடவே . . .
அது யாரோடி ? யாரோடி ?
சொல்லேண்டி என் தோழியே . . .அவன் வேட்டையில் நான் சிக்கவே . . .


அடி வந்தாண்டி வந்தாண்டி
இருவரோடு ஒருவன் . . .
என் இதயத்தை விலை கேட்கவே . . .
அது யாரோடி ? யாரோடி ?
சொல்லேண்டி என் தோழியே . . .
அவன் இதயத்தில் நான் குடியேறவே . . .

அடி வந்தாண்டி வந்தாண்டி
அமைதியாக ஒருவன் . . .
எல்லோரும் பார்த்திருக்கும் பொழுதே . . .
அது யாரோடி ? யாரோடி ?
சொல்லேண்டி என் தோழியே . . .
நான் அவனைப் பார்த்திருக்கிறேனா ? ? ?

அடி வந்தாண்டி வந்தாண்டி
அனந்தபத்மநாபன் . . .
திருவனந்தபுரவீதிகளிலே . . .
அது அவனோடி அவனோடி
சொன்னாயே என் தோழியே . . .
அவன் வில்லேந்திய அழகனாயிற்றே . . .

அடி போனாண்டி போனாண்டி
என் பத்மநாபன் என்னை ஏங்கவிட்டே . . .
அவனை அழைத்துவாயேண்டி என் தோழியே !
அடி வருவாண்டி வருவாண்டி
என் அருமைத் தோழியே . . .
நாளை ஆராட்டிற்க்கு வீதியார
வருவாண்டி வருவாண்டி
என் அழகுத் தோழியே . . .

அஞ்சாதே . . .கலங்காதே . . .புலம்பாதே
என் செல்லத் தோழியே . . .
நாளை அவனோடு சங்குமுகத்தில்
குளிரக் குளிர நீராடலாம் . . .

அதுவரை 
பொறுத்திரு...நினைத்திரு...
திருவனந்தபுர அழகனையே . . .

வருவாண்டி வருவாண்டி
உன்னிடமே . . .
கவலை வேண்டாமடி வேண்டாமடி
என் இனிய தோழியே . . .

அதுவரை
பத்மநாபா பத்மநாபா என்றே சொல்வாயடி . . .

நாளை ஆராட்டில் அனுபவிப்போமடி . . .


0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP