ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 18 செப்டம்பர், 2012

மன்னிக்க வேண்டுகிறேன் !

ராதேக்ருஷ்ணா
 
 
மன்னிக்க வேண்டுகிறேன் !
 
 
இத்தனை நாள் ஆனந்தவேதம்
எழுதாமலிருந்ததற்கு
மன்னிக்க வேண்டுகிறேன் !
 
 
பக்தர்களிடம், பாகவதர்களிடம்,
உன்னதமான ஆத்ம பந்துக்களிடமும்
மன்னிப்பு கேட்கலாம் !
 
 
ஆனந்தவேதத்தை வாசிப்பவர்
யாராயினும் அவர்கள் என்
ஆத்மபந்துவே !
 
 
 க்ருஷ்ணன் தானே நம் இருவருக்கும்
இடையே ரஹஸ்யமாய்
தொடர்பில் இருக்கிறான் !
 
 
வெகு சிலரே இந்த ஆனந்தவேதத்தை
என்னை அறிந்து கொண்டு
வாசிக்கிறார்கள் !
 
 
பலருக்கு நான் யாரென்று தெரியாது . . .
ஆயினும் க்ருஷ்ணனின் விஷயம்,
பக்தி விஷயம் என்பதால்
என்னிடம் முகம் காட்டாமல்,
தன்னைப் பற்றிச் சொல்லாமல்,
இந்த ஆனந்தவேதத்தை படிக்கிறீரே !
 
 
நீரெல்லாம் என் ஆத்மபந்துவே ! ! !
 
 
சில சமயங்களில் க்ருஷ்ணன்
என்னைத் தனிமையில்
இருக்கச் சொல்கிறான் !
 
 
சில சமயங்களில் க்ருஷ்ணன்
என்னைத் தன்னோடு
ரஹஸ்யமாய் வைத்துக்கொள்கிறான் !
 
 
சில சமயங்களில் என்னை
ஆனந்தவேதம் எழுத வைக்கிறான் !
 
 
சில சமயங்களில் என்னை
ஒன்றுமே செய்யவிடாமல்
அமைதியாய் இருக்கச் சொல்கிறான் !
 
 
சில சமயங்களில் ஊர் ஊராய்
அவனுடைய வித விதமான
மூர்த்திகளை பல விதமான
கோயில்களில் என்னை
அனுபவிக்கவைக்கிறான் !
 
 
 சில சமயங்களில் எனக்கு
கட்டாய ஓய்வு கொடுத்து
நாம ஜபம் செய்யச்சொல்கிறான் !
 
 
அதனால் தான் இத்தனை நாள்
என்னால் ஆனந்த வேதம்
எழுதமுடியவில்லை !
 
 
இனி விடாமல் எழுதவைப்பான்
என்று நம்புகிறேன் !
 
 
மீண்டும் நாம் ஆனந்தவேதத்தில்
கூடியிருந்து குளிர்வோம் !
 
 
நிறைய கோயில்களுக்கெல்லாம்
க்ருஷ்ணன் என்னை அழைத்துப்
போயிருந்தான் . . .
 
 
எல்லாவற்றையும் உங்களோடு
பகிர்ந்துகொள்வதில் ஒரு
அலாதியான ஆனந்தம் . . .
 
 
 
அதுதானே ஆனந்தவேதம் . . .
 
 
 
உமக்கும் எமக்கும் ஆனந்தவேதம்
ஒரு ஆனந்தபந்தமல்லவா . . .
 
 
 
அடுத்த ஆனந்தவேதத்தை
எழுதி உங்களோடு பகிர
நான் ஆசையாய் காத்திருக்கிறேன் !
 
 
 

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP