இது ஒரு தர்மயுத்தம் !
ராதேக்ருஷ்ணா
நான் ஜெயிப்பேன் . . .
எல்லோரையும் ஜெயிப்பேன் . . .
எல்லா விஷயத்திலும் ஜெயிப்பேன் . . .
நிச்சயம் ஜெயிப்பேன் . . .
என்னைப் பற்றித் தவறாக
நினைத்தவரை ஜெயிப்பேன் !
என்னைப் பற்றித் தவறாக
பேசுபவரை ஜெயிப்பேன் !
என்னைப் பற்றித் தவறாக
பிரசாரம் செய்பவரை ஜெயிப்பேன் !
என்னை சந்தேகமாகப்
பார்ப்பவரை,நினைப்பவரை
ஜெயித்தே தீருவேன் !
நான் தோற்பேன் என்று
கனவு காண்பவர் முன்
ஜெயித்தே தீருவேன் !
என்னை அவமதிக்கக் காத்திருப்பவர்
முன் சத்தியமாக ஜெயிப்பேன் !
என்னைப் பற்றித் தெரியாமல்
என்னை அசிங்கமாய் பேசுபவர்
முன் ஜெயித்து வாழ்ந்து காட்டுவேன் !
என் தோல்விகளினால்
நான் அழிந்தேன் என்று நினைத்தவர்
தலை குனியும் படி ஜெயிப்பேன் !
என் அழிவை நினைத்துக்
காத்திருப்பவர் முன் அவர்
என்னைக் கொண்டாடும்படி
ஜெயித்தே தீருவேன் !
என்னவோ நான் ஒரு பாபி
என்று சிலர் நினைத்துவிட்டனர் !
என்னவோ நான் ஒரு துரோகி
என்று சிலர் நினைத்துவிட்டனர் !
என்னவோ நான் ஒரு வேஷக்காரன்
என்று சிலர் நினைத்துவிட்டனர் !
என்னவோ நான் ஒரு முட்டாள்
என்று சிலர் நினைத்துவிட்டனர் !
என்னவோ நான் ஒரு ஏமாற்றுக்காரன்
என்று சிலர் முடிவுகட்டிவிட்டனர் !
நான் வாயைமூடிக்கொண்டிருப்பதால்
நான் சரியில்லை என்று சிலர்
தீர்மானம் செய்துவிட்டனர் . . .
நிச்சயம் என் எதிர்காலம் பதில் சொல்லும் !
நிச்சயம் என் க்ருஷ்ணன் பதில் சொல்வான் !
நான் யார் என்று நீருபிக்காமல்
நான் இந்த உடலை விட்டு,
உலகை விட்டு செல்லமாட்டேன் !
பார்ப்போம் . . .
என் க்ருஷ்ணன் இருக்கிறான் !
நான் க்ருஷ்ண பக்தன் !
நான் வென்றே தீருவேன் !
நான் வென்று காட்டுவேன் !
இது ஒரு தர்மயுத்தம் . . .
என்னிடம் தர்மமும் உண்டு !
என்னிடம் க்ருஷ்ணனும் உண்டு !
என்னிடம் மஹாத்மாக்களின் பலம் உண்டு !
பார்க்கிறேன் ஒரு கை !
க்ருஷ்ணா . . . உன் பக்தரின்
யுத்தத்திற்கு நீயே சாரதி . . .
நீ நாராயணன் . . .
நான் நரன் . . .
எல்லா பழி பாவங்களிலிருந்து
உன் பக்தர்களை காப்பவன் நீயே !
உலகில் எத்தனையோ
பக்தர்கள் இன்று கஷ்டப்படுகிறார் !
நீ தான் உன் பக்தர்களை
நிரூபணம் செய்யவேண்டும் !
இல்லையென்றால் உனக்குத் தான்
அவமானம் . . .
உன் பக்தரை நீயே காப்பாற்று !
இது தான் க்ருஷ்ண பக்தர்களின்
அவமரியாதைகளில் மனோ நிலை !
க்ருஷ்ணன் சொல்லியிருக்கிறான்;
" அர்ஜுனா ! என் பக்தர்
அழிவதில்லை என்று நான்
சத்தியம் செய்கிறேன் "
க்ருஷ்ணன் வாக்கு பொய்த்ததில்லை !
க்ருஷ்ண பக்தர் தோற்றதில்லை !
க்ருஷ்ண பக்தர் ஜெயிப்பர் . . .
இது தான் க்ருஷ்ண பக்தர்களின்
அவமரியாதைகளில் மனோ நிலை !
க்ருஷ்ணன் சொல்லியிருக்கிறான்;
" அர்ஜுனா ! என் பக்தர்
அழிவதில்லை என்று நான்
சத்தியம் செய்கிறேன் "
க்ருஷ்ணன் வாக்கு பொய்த்ததில்லை !
க்ருஷ்ண பக்தர் தோற்றதில்லை !
க்ருஷ்ண பக்தர் ஜெயிப்பர் . . .
0 கருத்துகள்:
கருத்துரையிடுக