ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

Search This Blog

Wednesday, September 26, 2012

தூப்புள் பிள்ளை !

ராதேக்ருஷ்ணா

இன்று நம் தேசிகரின்
பிறந்த நாள் !

நிகமாந்த மஹாதேசிகரின்
பிறந்த நாள் !

வேதாந்த தேசிகரின் பிறந்த நாள் !

புரட்டாசி மாதமே நீ செய்த
தவம் என்னவோ ?

திருவோண நக்ஷத்திரமே
நீ செய்த புண்ணியம் என்னவோ ?

எங்கள் சர்வ தந்த்ர ஸ்வதந்திரரைப்
பெற்ற தூப்புல் கிராமமே, நீ தான்
108 திவ்ய தேசங்களின் அஸ்திவாரமோ ?

ஸ்ரீ அனந்தசூரி, ஸ்ரீமதி தோதாரம்மா
இவர்கள் தான் ஸ்ரீ வைஷ்ணவம் செய்த
பெரும் புண்ணியமோ ?

திருமலை நாதனின் நாதமான
திருமணியே அடைந்ததோ
கலியுகத்தில் விசேஷ அவதாரம் ?

ஹயக்ரீவர் தவம் பண்ணி
ஆசை ஆசையாய் பெற்ற
தவப் பிள்ளையோ எங்கள் தூப்புல் பிள்ளை ?

நடாதூர் அம்மாள் தேடிக்
கண்டெடுத்த வைஷ்ணவ ரத்தினமோ
எங்கள் ராமானுஜ தயா பாத்ரம் ?

கருடாழ்வார் தனக்கென விசேஷமாய்
தடுத்தாட்கொண்ட சத்சிஷ்யனோ
எங்கள் ஞான வைராக்ய பூஷணம் ?

ஸ்ரீ ரங்கநாதனின் பாதுகைகள்
தானே கண்டெடுத்த பரதனோ
 நம் வேதாந்தாசார்யன் ?

காஞ்சி பேரருளாளன் தன்னைப்
பற்றி வாயாரப் பாட மீண்டும்
வரவழைத்த இராமானுஜனோ ?


திருவயிந்திரபுரம் தெய்வநாயகன்
தன் தெய்வீகத்தால் ஸ்ருஷ்டித்த
கவிதார்க்கிக ஸிம்ஹமோ ?

அத்வைத த்வைத சர்ச்சைகளுக்கு
நடு நாயகமாய் வந்த தலைவனோ
எங்கள் நிகமாந்த மஹா தேசிகன் ?

க்ருஷ்ணனின் கருணையே தனம் என
எல்லோருக்கும் புரிய வைக்க வந்த
உத்தம வேத சுதாமாவோ ?

 ரங்க நாயகியின் கருணை
ரங்கனின் கருணையை விட உசத்தி
என நிரூபித்த ஸ்ரீ ஸ்துதி குழந்தையோ ?

சுதர்சன சக்கரத்தின் பலத்தை
பாமர ஜனங்களுக்கும் புரிய வைத்த
 13வது ஆழ்வாரோ ?நிகமாந்த மஹா தேசிகரே !
வேதாந்த தேசிகரே !
சர்வ தந்த்ர ஸ்வதந்தரரே !
வேதாந்தாசார்யரே !
தூப்புள் பிள்ளையே !இன்னும் ஒரு நூறாண்டிரும் !

இல்லை . . . இல்லை . . .
போதவே போதாது !
இன்னும் ஒரு ஆயிரமாண்டிரும் !0 comments:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP