ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 31 ஜனவரி, 2016

உன் வார்த்தை...

ராதேக்ருஷ்ணா !!!
உன் வார்த்தைக்கு கண்ணன் மதிப்பு தருகிறான்...
உன் வார்த்தையை கண்ணன் ரசிக்கிறான்...
உன் வார்த்தையை கண்ணன் கூர்ந்து கவனிக்கிறான்...
உன் வார்த்தையை கண்ணன் ஞாபகம் வைத்துக்கொள்கிறான்...
உன் வார்த்தைக்கு கண்ணன் எதையும் செய்வான்...
உன் வார்த்தையை மனிதரிடன் வீணடிக்காதே...
உன் வார்த்தையை மனிதரிடம் தந்து ஏமாறாதே...
உன் வார்த்தை உன் கண்ணனுக்கு மட்டுமே...
உன் வார்த்தையின் மதிப்பை உணர்ந்து கொள்...
உன் ஒவ்வொரு வார்த்தையும் உன் வாழ்வில் பிரதிபலிக்கிறது...

சனி, 30 ஜனவரி, 2016

உன் உரிமை

ராதேக்ருஷ்ணா !!!

உன் உரிமை க்ருஷ்ண பக்தி செய்வது !

உன் உரிமை க்ருஷ்ண நாமம் சொல்வது !

உன் உரிமை க்ருஷ்ண சிந்தனையில் இருப்பது !

உன் உரிமை க்ருஷ்ண தியானத்தில் திளைப்பது !

உன் உரிமை க்ருஷ்ண க்ருபையை அனுபவிப்பது !

உன் உரிமை க்ருஷ்ண லீலையில் மயங்குவது !

உன் உரிமை க்ருஷ்ண மாயையை ஜெயிப்பது !

உன் உரிமை க்ருஷ்ண அன்பில் அழுவது !

உன் உரிமை க்ருஷ்ணனோடு பேசுவது !

உன் உரிமை க்ருஷ்ணனோடு ஆடுவது !

உன் உரிமை க்ருஷ்ணனோடு அலைவது !

உன் உரிமை க்ருஷ்ணனோடு வாழ்வது !

உன் உரிமையைத் தடுக்கக் கண்ணனுக்கே அதிகாரமில்லை !!!

மற்றவர் சொல்ல என்ன இருக்கிறது ???

பொய்யாய் வாழ்ந்தது போதும் !!!
பொய்யாய் ஏமாந்தது போதும் !!!

வா... எல்லாம் உடைத்து வெளியில் வா !!!

உனக்காக உன் கண்ணன் இதோ காத்திருக்கிறான் ....

உன் உரிமை உன் க்ருஷ்ணன்...

ஸ்ரீ கூரத்தாழ்வான்




ஸ்ரீவைஷ்ணவத்திற்கு
கூரம் தந்த வரம்
நம் கூரத்தாழ்வான் !

ஹஸ்த நக்ஷத்திரத்திற்கு
தை மாதம் தந்த வரம்
நம் கூரத்தாழ்வான் !

ஸ்வாமி ராமானுஜருக்கு
வரதராஜன் தந்த வரம்
நம் கூரத்தாழ்வான் !

கலைவாணிக்கு
ஸ்ரீபாஷ்யம் தந்த வரம்
நம் கூரத்தாழ்வான் !

பராசர பட்டருக்கு
ரங்கராஜன் தந்த வரம்
நம் கூரத்தாழ்வான் !

நாலூரானுக்கு
ராமானுஜர் தந்த வரம்
நம் கூரத்தாழ்வான் !

வைகுந்தத்துக்கு
ஸ்ரீவைஷ்ணவம் தந்த வரம்
நம் கூரத்தாழ்வான் !

சுயநல சம்சாரிகளுக்கு
கலியுகம் தந்த வரம்
நம் கூரத்தாழ்வான் !

கூரத்தாழ்வானே...
உம்மைப் போல் ராமானுஜருக்கு
பிடித்தாற் போல் வாழ
எம்மை ஆசீர்வதியும் !!!

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP