ஆதலால் காதல் செய்வீர் !
ராதேக்ருஷ்ணா...
காதல்...
அழகான தெய்வீக மொழி...
அன்பென்னும் மொழி...
ஆனால் காதல் என்னும்
வார்த்தையை ஏன் இள வயது
ஆணும் பெண்ணும் மட்டுமே பேச வேண்டும் ?!?
அது தவறல்லவா !?!
அன்பு எதிர்பார்ப்பு இல்லாததே ...
எதையும் எதிர்பார்க்காமல்
நம்மை காதலோடு சுமப்பவள்
நம் அன்னையல்லவா...
ஆதலால் காதல் செய்வீர் உம் அன்னையை....
நம் வாழ்வின் எதிர்காலத்தை
நமக்கு முன்னாடியே காதலோடு
யோசிப்பது நம் தகப்பனல்லவா...
ஆதலால் காதல் செய்வீர் உம்
தந்தையை....
நம்மோடு உறவு இல்லையெனிலும்,
நம்மிடம் காதலோடு பால பாடம் சொல்லித்தந்தது நம் ஆசிரியரல்லவா...
ஆதலால் காதல் செய்வீர் உம்
ஆசிரியர்களை...
நாம் எது செய்தாலும் நம்மிடம்
கோபமே கொள்ளாமல் நம்மைக்
காதலோடு அருளுவது தெய்வமல்லவா...
ஆதலால் காதல் செய்வீர் க்ருஷ்ணனை...
நம் மீது அக்கறை கொண்டு
நம்மைத் திருத்திப் பணிகொள்ளும்
காதல் மிகுந்தவர் நம் குருவல்லவா...
ஆதலால் காதல் செய்வீர் உம் குருவை...
நம்மை யாரென்றே தெரியாமல்,
தன் குடும்பத்தை விட்டு, தேசத்தின்
மீது காதலோடு காப்பவர் நம் ராணுவ வீரர்களல்லவா...
ஆதலால் காதல் செய்வீர் நம் வீரர்களை...
நம்மை சுமப்பதே சுகம் என்று
காதலோடு சுற்றி நம்மை வாழவைப்பது
நம் பூமித்தாய் அல்லவா...
ஆதலால் காதல் செய்வீர் நம் பூமித்தாயை...
நம்மை நமக்காக நேசிக்கும்
காதல் நம் தோழர்களுக்குத் தானே...
ஆதலால் காதல் செய்வீர் உம்
தோழர்களை...
நம் ஜாதி மதம் வயது எல்லாவற்றையும்
கடந்து நம்மை உண்மையாய்
காதல் செய்வது குழந்தைகள் தானே...
ஆதலால் காதல் செய்வீர் எல்லாக் குழந்தைகளையும்...
ஆதலால் காதல் செய்வீர்...
ஆதலால் காதல் செய்வோம்...
உலகையே காதலால் வசப்படுத்துவோம்...