வரும்...போகும்...
காரணம் எதுவாயினும்
தற்கொலை தவறே !
தற்கொலை
தியாகமல்ல !
தற்கொலை
தீர்வல்ல !
தற்கொலை
அறிவு சார்ந்ததல்ல !
தற்கொலை
நியாயமல்ல !
யார் செய்தாலும்,
தற்கொலை ஒரு
முட்டாள்தனமே !
எதற்காக தற்கொலை
செய்துகொண்டாலும்,
அது பைத்தியக்காரத்தனமே !
படிக்காதவர் செய்தாலும்,
படித்தவர் செய்தாலும்,
தற்கொலை அசிங்கமே !
படிப்பிற்காகத் தூக்கிட்டு உயிரை விட்டாலும்...
இனத்திற்காக தீக்குளித்து உயிரை விட்டாலும்...
மொழிக்காக
விஷமறிந்து உயிரை விட்டாலும்,
அவமானத்திற்காக கீழே குதித்து உயிரை விட்டாலும்,
காதலுக்காக ஜோடியாய் கடலில் வீழ்ந்தாலும்,
பரீட்சையில் தோல்விக்காக கழுத்தில் சுருக்கிட்டுக் கொண்டாலும்...
தற்கொலை மிகக்கேவலமான செயலே...
கொடுமையான மனோவியாதியே !
இதைவிடக் கொடுமை...
தற்கொலை செய்து கொண்டவரை தியாகியாய் பேசுவதே !
அவர்களை எதிர்கால
சந்ததிக்கான விதையாய் கொண்டாடுவதே !
இங்கே தற்கொலைகள் செய்துகொள்பவர்களை கொண்டாடுவதே பிழைப்பாயிற்றே !!!
என்ன பயங்கரம் இது !!!
நல்லவேளை இன்னும்
இணைய விளையாட்டில் தற்கொலை செய்பவரை வீரராய்
கொண்டாடாதவரை நாம் பாக்கியம் செய்தோம் !!!
அழகான வாழ்க்கைக்கு ஆயிரம் அர்த்தங்கள் !
அந்த வாழ்க்கையில் வாழ
கோடி விஷயங்கள் உண்டு !
ஒரு சில தோல்விகள்...
ஒரு சில ஏமாற்றங்கள்...
ஒரு சில நஷ்டங்கள்...
ஒரு சில அவமானங்கள்...
இவையெல்லாம் வாழ்வில் வரும்...போகும்...
உயிரைவிட உலகில் இவை பெரியதோ ?!?
மெத்தப் படித்த சமுதாயம் என்று
நினைப்பவரெல்லாம்,
தற்கொலையை நியாயப்படுத்துவதே
அபத்தம்...விபரீதம்...
கல்லால் அடித்து விரட்டப்பட்ட நிலையிலும்,
சொறி பிடித்த தெரு நாய்
தற்கொலைக்கு முயலவில்லை !!!
மரங்களை எல்லாம் வெட்டி காட்டை பலைவனமாய் மாற்றிய பின்னும், பறவைகள் தற்கொலையை நினைக்கவில்லை !!!
காட்டிலிருந்து தன் இனத்திடமிருந்து பிரித்து கூண்டில் அடைத்தபோதும், மிருகங்கள் தற்கொலைக்கு யோசிக்கவில்லை !!!
தன்னை அழிக்க உலகமே ஓயாமல் முயற்சி செய்துகொண்டிருந்தாலும், கொசுக்கள் கூட தற்கொலைக்கு ஆசைப்படவில்லை !!!
பெற்ற பிள்ளைகளே முதியோர் இல்லத்தில் வீசிவிட்ட பிறகும், வயதானவர்கள் தற்கொலைக்கு சிந்திக்கவில்லை !
கைகால் இல்லாதவர்,
கண்ணில்லாதவர்,
விபத்தில் கழுத்திற்கு கீழே உணர்ச்சி இழந்தோர்...
இப்படிப் பலரும் ஏதோ ஒரு நற்செயலை செய்து இங்கே மற்றவருக்காய் வாழ்கின்றனர்...
ஆனால் படித்த முட்டாள்கள் சிலரே தற்கொலை செய்து கொண்டு, வாழ்வை அபத்தமாக்குகின்றனர்...
தற்கொலை செய்துகொள்பவர், தீவிரவாதியை விட பயங்கரமானவர்கள்...
ஹே மானிடா !
தற்கொலை செய்பவரின் முகத்தில் காரி உமிழக் கற்றுக்கொள் !!!
தற்கொலை செய்தவரை அருவருப்பாய் பார்க்க பழகிக்கொள் !!!
அப்போதுதான் நாளைய சமுதாயம் உருப்படும் !!!