659. தீபாவளி
🛕👣💥✨🪔🐚🕉️🔥🌟📿
659. தீபாவளி 🔥
தந்தையின் வாக்கைக் காத்து,
ராமனும் 14வருஷம் கழித்து அயோத்தியா வந்த தெய்வீக தினம் தீபாவளி !
பரதனின் தவமும், பாதுகையின் தவமும், பலித்து, ராமதரிசனம் கிடைத்த நாள் தீபாவளி !
பரத்வாஜரின் ஆஸ்ரமத்தில், ஆஞ்சநேயனும், ராமனோடு ஓரிலையில் ஆகாரம் உண்ட நாள் தீபாவளி !
க்ருஷ்ணனும் துஷ்ட சங்கத்தால் தவறிழைத்த நரகாசுரனை வதம் செய்த நாள் தீபாவளி !
16100 கன்னிகைகளுக்கு, கோடி மன்மத அழகோடு கண்ணன் காட்சி கொடுத்த நாள் தீபாவளி !
16100 கன்னிகைகளும் கண்ணனை தங்கள் மணாளனாக வரித்த நாள் தீபாவளி !
பூதேவியும் கண்ணனை, தாமரைக்கண்ணா, தாமரைக்கையா, தாமரைப்பாதா, உந்திபூத்த உத்தமா என்று தோத்திரம் செய்த நாள் தீபாவளி !
நரகனிடம் இழந்த தன் குடையை வருணனும், தன் குண்டலங்களை அதிதி தேவியும், மீண்டும் பெற்ற நாள் தீபாவளி !
சொர்க்கலோகத்து அதிபதி இந்திரனை வென்று, பாரிஜாத மரத்தை கண்ணன் துவாரகைக்கு கொணர்ந்த நாள் தீபாவளி !
லக்ஷ்மி தேவியும் நம்மைத் தேடி நம் வீட்டிற்கு வந்து, நம்மோடு இருந்து நம்க்கு அருளும் நாள் தீபாவளி !
கங்கையும் நம் வீட்டுத் தண்ணீரில் ஆவிர் பவித்து, நம்மை பவித்திரமாக்கும் நாள் தீபாவளி !
ராம நாமம் ஜபிப்போம் பரதனைப் போல்....
ராம கைங்கரியம் செய்வோம் ஹனுமனைப் போல்....
க்ருஷ்ணனிடம் சரணடைவோம் 16100 கன்னிகைகள் போல்....
இந்த தீபாவளி நமது அகம்பாவத்தை அழிக்கும் தீபாவளி...
இந்த தீபாவளி நமது தற்பெருமையை அழிக்கும் தீபாவளி...
இந்த தீபாவளி குரு மஹிமையை நமக்குப் புரியவைக்கும் தீபாவளி....
இந்த தீபாவளி புதிய வாழ்வைத் தரும் தீபாவளி....
தீபாவளி....
நம்மை நமக்கு புதியதாய் மாற்றித்தரும் தீபாவளி....
தீபாவளி வாழ்த்துகள்...
©குருஜீ கோபாலவல்லிதாஸன்
3.11.21, தீபாவளி...
📿🔥🌟🕉️🐚🪔✨💥👣