660. வாய்ப்பு
🙏🏼🇮🇳🛕🕉️👣📿🐚🪔🔥
🌱 *ஆனந்தவேதம்* 💐
_660. வாய்ப்பு !_
உலகில் ஜனனமும் மரணமும்
தினசரி நிகழ்வு !
நீயும் நானும் அப்படியே
பிறந்து வாழ்கிறோம் !
ஆனால் சிலரோ ஜனிப்பது,
நம்மை நெறிபடுத்தவே !
அந்தச் சிலரில், யாரோ ஒருவர் சாகாவரம் பெற்றவர் !
அந்த சாகாவரம் பெற்ற
ஒருவனே என் பாரதி !
எட்டயபுரம் தந்த
தமிழ்ப்பித்தன் பாரதி !
காசி அனுபவித்த
ஞானக்கிறுக்கன் பாரதி !
பாண்டிச்சேரி அடைந்த
கவிதைச்சிற்பி பாரதி !
கடையம் பெற்ற
கடவுளின் துகள் பாரதி !
திருவல்லிக்கேணி கண்ட
சாரதிதாசன் பாரதி !
காலனை மிரட்டினவன் பாரதி !
கண்ணனை சேவகனாக்கியவன் பாரதி !
காளியை கேள்விகேட்டவன் பாரதி !
நெஞ்சுரம் கொண்டவன் பாரதி !
ரௌத்திரம் புரிந்தவன் பாரதி !
ஆங்கிலேயரின் சிம்மசொப்பனம் பாரதி !
மொழிகளையும், தேசத்தையும்
ரசித்தவன் பாரதி !
வாழ்வே தவமாய்
வாழ்ந்தவன் பாரதி !
அவனுக்கு இணை
அவன் மட்டுமே !
பாரதியால் தமிழும்,
பாரதியால் பக்தியும்,
பாரதியால் தேசமும்,
புத்துணர்ச்சி பெற்றது !
பாரதி...
இந்தச் சொல்....
தமிழ் போதை தரும்...
தேச பக்தி தரும்...
உலகை ரசிக்க வைக்கும்...
கண்ணனை காதலிக்க வைக்கும்...
நல்லனவெல்லாம் தரும் ஒரு கற்பகவிருட்சம் என் பாரதி....
பாரதி...
உன் தோளோடு உரசி,
உன் சிரிப்பொலியில் சிலிர்த்து,
உன்னோடு தமிழ் குடித்து,
உன்னோடு இயற்கையை ரசித்து,
உன்னோடு கோபத்தீயில் ஜொலித்து,
உன்னோடு காடு மலை கடலெல்லாம் பார்த்து,
உன்னோடு உண்டு,
உன்னோடு தூங்கி,
உன்னோடு எழுந்து,
உன்னருகே ஒரு தோழனாக வாழ...
ஒரு வாய்ப்பு தா....
©குருஜீ கோபாலவல்லிதாஸன்
பாரதி பிறந்த நாள் !
11.12.21, சனிக்கிழமை
🙏🏼🔥🪔🐚📿👣🕉️🛕🇮🇳