ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி
அனந்தபுர நகரம் புகுதுமின்றே !

Search This Blog

Saturday, February 6, 2010

உலகம் எப்போது அழியும் !ராதேக்ருஷ்ணா

 உலகம் எப்போது அழியும் !

உலகில் மிக முக்கியமான
ஒரு சர்ச்சை !

பலரும் பலவிதமாய்
புலம்பும் ஒரு விஷயம் !

பொய்யர்கள் பலர்
தன் கூட்டத்தை அதிகப்படுத்தவும்,
ஜனங்களை குழப்பவும்,
வைத்திருக்கும் ஒரு ஆயுதம் !

வாழ்வின் முடிவை மட்டுமே
யோசிக்கும் முட்டாள்களின்
தீவிரமான யோசனை இதுவே !


தன் கடமைகளிலிருந்துத்
தப்பித்து, நெறிமுறை இல்லாத
வாழ்க்கையை வாழ விரும்பும்,
சோம்பேறிகளின் கனவு இதுவே !


மனித சமுதாயத்தைப் பயமுறுத்தி,
அதன் மேல் தன்னுடைய ஆதிக்கத்தை
நிலைநாட்டத் துடிக்கும்
கொடூரமானவர்களின் வஞ்சகம் இது !


வாழ வழி சொல்லாமல்,
அழிவைப் பற்றிப் பேசி,
இருக்கும் நிம்மதியைக் குலைப்பதனால்
என்ன ப்ரயோஜனம் ?


உலகத்தின் அழிவைப் பற்றி
யாரும் யோசிக்கவே வேண்டாம் !


உலகம் நிலையில்லாதது என்பது
சத்தியமான உண்மை !


இந்த உலகில் யாரும்,எதுவும்
நிரந்தரமில்லை !


இந்த உலகின் இயக்கம்
ரஹஸ்யமானது !


இந்த உலகின் சூக்ஷ்மம்
பகவானிடத்தில் உள்ளது !


அதனால் ஹே ஜனங்களே !
இனி உலகம் சில வருஷங்களில்
அழியும் என்று யாராவது சொன்னால்,
அவர்கள் பைத்தியம் என்பதை
திடமாக நம்புங்கள் !


பலமுறை "உலகம் அழியப்போகிறது"
என்று சொல்லி தன் பக்கம்
ஜனங்களை இழுப்பதே வேலையாகக்
கொண்ட ஒரு சூழ்ச்சிக் கூட்டத்தின்
பொய் ப்ரசாரம் இது !


எல்லோரையும் பாவிகளாகப்
பாவிக்கும் பாவக்கூட்டத்தின்
பரிதாபமான அலறல் இது !

இதற்கு சில விஞ்ஞானிகளின்
ஆய்வும் ஒத்து ஊதுகிறது !


அவரவர் பார்வையில்,
அவரவர் புத்தியைக்கொண்டு
எதையெதையோ
சொல்கிறார்கள் !


நடக்கலாம்,
வாய்ப்பிருக்கிறது,
என்றெல்லாம் வாய்ப்பந்தல்
போடுபவர்களின் வார்த்தையை
மதிக்காதிருப்பதே உத்தமம் !


1950 ல் உலகம் அழியும் என்றார்கள் !
1975 ல் உலகம் அழியும் என்றார்கள் !
2000 ல் உலகம் அழியும் என்றார்கள் !

இப்போதோ
2012ல் உலகம் அழியும் என்கிறார்கள் !


ஆனால் உலகம் இத்தனை வருடங்களில்
பல முன்னேற்றங்களையும்,
அற்புதங்களையும் கண்டிருப்பதுதான்
சத்தியம் !


இந்து தர்மத்தின் எந்த ஒரு
மஹாத்மாவும் இது போல்
குழப்பவேயில்லை !


நாம் இருப்பது கலியுகம் !
மொத்தம் 4,32,000 வருஷங்கள்
கொண்டது கலியுகம் !
இன்னும் 5200 வருடங்கள் கூட
முடியவில்லை !
அதற்கு இன்னும்
4,26,000 வருஷங்களுக்கு மேலே
இருக்கிறது !
இந்த யுகத்தின் முடிவில் தான்
உலகம் மாறும் !

அது கூட அழிவில்லை !
உலகம் தானே தன்னை
சுத்திகரித்துக் கொண்டு மீண்டு எழும் !
அதுதான் இயற்கையின் ரஹஸ்யம் !

போதும் !
இனி வீணர்களின் பேச்சைச்
செவி மடுத்துக் கேட்காதீர்கள் !


நாம்
அழியாத 
அமரத்துவத்தின் 
குழந்தைகள் !
இதை புரிந்துகொள்ளுங்கள் !


அழிவைப் பற்றி மட்டுமே
யோசிப்பவர்கள்
வாழ்வில் உருப்பட்டதில்லை !


நாம் உருப்படுவோம் !


உலகத்தின் எஜமானன் பகவான் !
உலகைப் பற்றிய கவலை க்ருஷ்ணனுக்கு !
நம் கடமை வாழ்வதே !


2012ல் உலகம் அழியும்
என்று உளருகின்றவர்கள்
எத்தனை பேர் அதுவரை
உயிரோடிருக்கப் போகிறார்கள் ! உலகம் இப்போதைக்கு அழியாது !


அதனால் நாம் நம் கடமையைச்
செய்வோம் !
நிறைய நாம ஜபம் செய்வோம் !
ஒற்றுமையாய் வாழ்வோம் !
நிமமதியாய் வாழ்வோம் !


இதன் தொடர்ச்சி
2012ல் எழுதுவேன் !
நீயும் வாசிப்பாய் !
நமக்கு அதுவரை ஆயுள்
இருக்கும் பக்ஷத்தில் இது சாத்தியமே !
க்ருஷ்ணன் மட்டுமே அறிவான் !


அப்பொழுது இந்த முட்டாள்கள்
என்ன சொல்கிறார்கள் என்பதையும்
பார்ப்போம் . . .


அதுவரை க்ருஷ்ணா என்று சொல் !
அதுவரை க்ருஷ்ணனை நினை !
அதுவரை சத்சங்கம் கேள் !


2012க்குள் உலகில்
பல உன்னதமான மாற்றங்கள்
நிகழப்போகிறது !


2012ல் உலகில்
நிச்சயம்
ஒரு விடியல் வரும் . . .


அந்த விடியலில்
பொய்யர்களின் முகத்திரை கிழியும் !
மஹாத்மாக்களின் பலம் புரியும் !


ராதேக்ருஷ்ணா !


ஹிந்து மாதாவிற்கு ஜெய் !0 comments:

About


Radhekrishna Sath Sangam . . .The Secured Sacred Spiritual Journey towards salvation . . .Founded by HER HOLINESS POOJYA SHREE SHREE AMMA . . .

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP