ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

Search This Blog

Tuesday, June 8, 2010

தொலைத்துவிடாதே !

ராதேக்ருஷ்ணா

வம்பு !

உலகின் மிகப்பெரிய கிருமி !
அடுத்தவரை அழவைக்கும் கிருமி !
பேசுபவரை அழிக்கும் கிருமி !

யாரைப் பற்றியும் வம்பு பேச

யாருக்கும் உரிமை இல்லை !

யார் வேண்டுமானாலும் எப்படி

வேண்டுமானாலும் இருந்துவிட்டுப்
போகட்டும் !
உன்னிடம் யார் கேட்டார்கள் . . .?
க்ருஷ்ணன் உன்னைக் கேட்டானா ?

யார் வேண்டுமானாலும் எதை

வேண்டுமானாலும் செய்யட்டும் !
உன்னை யார் கவனிக்கச்சொன்னார்கள் . . .?
க்ருஷ்ணன் உன்னை நியமித்தானா ?

எங்கு வேண்டுமானாலும் என்ன

வேண்டுமானாலும் நடக்கட்டும் !
உன்னை யார் பார்க்கச் சொன்னார்கள் . . .?
க்ருஷ்ணன் உன்னைப் பார்க்கச்சொன்னானா ?

யாருக்கும் யாரோடு வேண்டுமானாலும்

சண்டை இருக்கட்டும் !
நீ சண்டை போட்டதேயில்லையா . . .?
க்ருஷ்ணன் உன்னைப் பரப்பச்சொன்னானா ?

யாருக்கும் யாரோடு வேண்டுமானாலும்

என்ன உறவு வேண்டுமானாலும்
இருக்கட்டும் !
நீ ரொம்ப ஒழுங்கோ . . .?
க்ருஷ்ணன் உன்னை தூதுபோகச்சொன்னானா ?

யாருக்கு என்ன பொருள்

வேண்டுமானாலும் நஷ்டமாகட்டும் !
உனக்கு என்ன பெரிய வருத்தம் . . .?
க்ருஷ்ணன் உன்னை சரிசெய்யச் சொன்னானா ?

யாருக்கோ எதோ வியாதி

வரட்டும் !
உனக்கு வியாதியே இல்லையா. . .?
க்ருஷ்ணன் உன்னை கஷ்டப்படுத்தினானா ?

எந்தக் குடும்பத்திலும் எது வேண்டுமானாலும்

நடக்கட்டும் !
உன் குடும்பத்தில் எல்லாம் சரியோ . . .?
க்ருஷ்ணன் உன்னை திட்டினானா ?

யார் வேண்டுமானாலும் எவ்வளவு

பொய் வேண்டுமானாலும் பேசட்டும் !
நீ என்ன ஹரிச்சந்திரனா . . .?
க்ருஷ்ணன் உன்னிடம் கணக்கு கேட்டானா ?

யார் வேண்டுமானாலும் யாரிடமும்

ஏமாறட்டும் !
நீ என்ன ஏமாந்ததே இல்லையா . . .?
க்ருஷ்ணன் உன்னை கேட்க்கச் சொன்னானா ?

யாரும் எந்த சமயத்திலும், எப்படி

வேண்டுமானாலும் தூங்கட்டும் !
நீ என்ன தூக்கத்தை ஜெயித்துவிட்டாயோ . . .?
க்ருஷ்ணன் உன் தூக்கத்தைப் பறித்தானா ?

யார் வேண்டுமானாலும்,யாரோடும்,

எங்கோ,என்ன வேண்டுமானாலும்
சாப்பிடட்டும் !
நீ யாரோடும் சாப்பிட்டதே இல்லையா . . .?
க்ருஷ்ணன் உன் சாப்பாட்டைக் கெடுத்தானா ?

யாரோ, யாரிடமோ

அவமானப்படட்டும் !
நீ யாரையும் அவமானப்படுத்தியதே இல்லையா . . .?
க்ருஷ்ணன் உன்னை அவமானப்படுத்தினானா ?

யார் வீட்டு குழந்தைகளும்

என்ன தவறு வேண்டுமானாலும் செய்யட்டும் !
உன் குழந்தைகள் மிகவும் சமத்தோ . . .?
க்ருஷ்ணன் உன் குடும்பத்தைக் கெடுத்தானா ?

எவருடைய மனைவி எப்படி

வேண்டுமானாலும் வாழட்டும் !
உன் கணவனிடம் நீ ஒழுங்காக இருக்கிறாயோ . . . ?
க்ருஷ்ணன் உன் கணவனைக் குழப்பினானா ?

யாருடைய கணவன் எவ்வளவு

மோசமாக வேண்டுமானாலும் இருக்கட்டும் !
உன் கணவன் என்ன மிகவும் உத்தமனோ . . . ?
க்ருஷ்ணன் உன் மனதைக் கெடுத்தானா ?

போதும் ...

இதற்கு மேல் சொல்ல எனக்குப் பிடிக்கவில்லை ...
நீ யார் ? உன் வேலை என்ன ?
அதைப் பார் !

ஒவ்வொரு நிமிடமும்

உன்னை உயர்த்திக்கொள் !
ஒவ்வொரு நிமிடமும்
உன் குடும்பத்திற்காக ப்ரார்த்தனை செய் !
ஒவ்வொரு நிமிடமும்
உன்னை சரிசெய்து கொள் !

தயவு செய்து

வம்பிற்கு மயங்கி
நீ வம்பில் மாட்டிக்கொள்ளாதே !

உன் வாழ்க்கையை தொலைத்துவிடாதே !

0 comments:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP