ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 25 ஜூன், 2010

நினைத்தாலே சிலிர்க்கும் !

ராதேக்ருஷ்ணா


வாழ்க்கையின் மிகப்பெரிய
வரப்ரசாதம் நினைவுகள் !


வாழ்க்கையின் மிகப்பெரிய
துன்பமும் நினைவுகள்தான் !


வாழ்க்கையின் ஆதாரம் நினைவுகள் ! 


ஒவ்வொரு நாளும்,
நிச்சயம் ஏதோ நினைவுகளின்
தாக்கத்தில் தான் வாழ்கிறோம் !


நினைவுகள் பாரமாகவும் இருக்கும் !
நினைவுகள் பயங்கரமாகவும் இருக்கும் !
நினைவுகள் சுகமாகவும் இருக்கும் !
நினைவுகள் கசப்பாகவும் இருக்கும் !
நினைவுகள் இனிப்பாகவும் இருக்கும் !
நினைவுகள் ஆதரவாகவும் இருக்கும் !
நினைவுகள் பலவீனமாகவும் மாற்றும் !
நினைவுகள் நிறைய பலத்தையும் தரும் !
நினைவுகள் இன்றைய பொழுதை சுகமாக்கலாம் !
நினைவுகள் இன்றைய பொழுதை சுமையாக்கலாம் !
நினைவுகள் உன்னை சமாதானப்படுத்தும் !
நினைவுகள் உன்னை பயமுறுத்தும் !
நினைவுகள் உன்னை குழப்பலாம் !
நினைவுகள் உனக்குத் தெளிவையும் தரலாம் !


ஆகமொத்தத்தில் நினைவுகள்,
நம் வாழ்க்கையின் ஜீவாதாரமாக இருக்கிறது !


நீ எதை நினைக்கிறாயோ,
அதையே அடைகின்றாய்
என்று கண்ணன் கீதையில் கூறுகிறான் !


எப்படியும் எதையோ நினைக்கப்போகிறோம் !
நல்லதாக நினைத்துப் பார்க்கலாமே !


ஒவ்வொரு நாளும் எத்தனையோ
விஷயங்களைப் பார்த்துக்கொண்டேயிருக்கிறோம் !


அதில் ஒளிந்திருக்கும் ரஹஸ்யங்களை
சொல்கிறேன்...கேள் !



ஆலமரத்தைப் பார்த்தால்,
ஆலிலைக் கண்ணனை நினைத்துக்கொள் !

வேப்பமரத்தைப் பார்த்தால்
ஸ்ரீ க்ருஷ்ண சைதன்யரை நினைத்துக்கொள் !

புறாக்களைப் பார்த்தால்
திருக்கோஷ்டியூர் நம்பியை நினைத்துக்கொள் !

பூனைக்குடும்பத்தைப் பார்த்தால்
ராகா கும்பரை நினைத்துக்கொள் !

மயிலைப் பார்த்தால்
உன் க்ருஷ்ணனை நினைத்துக்கொள் !

துளசியைப் பார்த்தால்
ப்ருந்தாவனத்தை நினைத்துக்கொள் !

மானைப் பார்த்தால்
சீதாபிராட்டியை நினைத்துக்கொள் !

மலையைப் பார்த்தால்
திருப்பதி ஏழுமலையை நினைத்துக்கொள் !

பானைகளைப் பார்த்தால்
கோராகும்பரை நினைத்துக்கொள் !

விசிறியைப் பார்த்தால்
திருக்கச்சி நம்பியை நினைத்துக்கொள் !

புளிய மரத்தைப் பார்த்தால்
ஸ்வாமி நம்மாழ்வாரை நினைத்துக்கொள் !

பாலத்தைப் பார்த்தால்
அணில்களை நினைத்துக்கொள் !

கழுதையைப் பார்த்தால்
ஏகநாதரை நினைத்துக்கொள் !

புடவையைப் பார்த்தால்
த்ரௌபதியை நினைத்துக்கொள் !

அவலைப் பார்த்தால்
குசேலரின் பத்னி சுசீலாவை நினைத்துக்கொள் !

நாயைப் பார்த்தால்
திருக்கண்ணமங்கை ஆண்டானை நினைத்துக்கொள் !

காகத்தைப் பார்த்தால்
ஸ்ரீராமனை நினைத்துக்கொள் !

மழைமேகங்களைப் பார்த்தால்
ஸ்ரீ ஜயதேவரை நினைத்துக்கொள் !

பாம்பைப் பார்த்தால்
ஆதிசேஷனை நினைத்துக்கொள் !

குதிரையைப் பார்த்தால்
கள்ளழகரை நினைத்துக்கொள் !

கரும்பைப் பார்த்தால்
சந்த் துகாராமை நினைத்துக்கொள் !

வெண்ணையைப் பார்த்தால்
கோபிகளை நினைத்துக்கொள் !

செருப்பைப் பார்த்தால்
பரதனை நினைத்துக்கொள் !

கிளியைப் பார்த்தால்
சுகப்ரும்ம மஹரிஷியை நினைத்துக்கொள் !

கழுகைப் பார்த்தால்
ஜடாயுவை நினைத்துக்கொள் !

தாமரையைப் பார்த்தால்
ஸ்ரீ அனந்தபத்ம நாபரை நினைத்துக்கொள் !

யானையைப் பார்த்தால்
கஜேந்திரனை நினைத்துக்கொள் !

செங்கல்லைப் பார்த்தால்
பாண்டுரங்கனை நினைத்துக்கொள் !

மீசையைப் பார்த்தால்
பார்த்தசாரதியை நினைத்துக்கொள் !

தாடியைப் பார்த்தால்
கூரத்தாழ்வானை நினைத்துக்கொள் !

மழையைப் பார்த்தால்
ப்ரேமநிதியை நினைத்துக்கொள் ! 

ஓடத்தைப் பார்த்தால்
குகனை நினைத்துக்கொள் !

தம்பூராவைப் பார்த்தால்
மீராவை நினைத்துக்கொள் ! 

குந்துமணியைப் பார்த்தால்
குருவாயூரப்பனை நினைத்துக்கொள் !

 தயிர்கடையும் மத்தைப் பார்த்தால்
உடுப்பி க்ருஷ்ணனை நினைத்துக்கொள் !

நாவல் பழத்தைப் பார்த்தால்
முதலியாண்டானை நினைத்துக்கொள் !

மாங்காயைப் பார்த்தால்
பில்வமங்களரை நினைத்துக்கொள் !

வாழைப்பழத்தைப் பார்த்தால்
விதுரபத்னியை நினைத்துக்கொள் !

வில்லைப் பார்த்தால்
 அர்ஜுனனை நினைத்துக்கொள் !

பாம்புப்புற்றைப் பார்த்தால்
வால்மீகி மஹரிஷியை நினைத்துக்கொள் !

கல்லைப் பார்த்தால்
அகலிகையை நினைத்துக்கொள் !

மணலைப் பார்த்தால்
அணில்களை நினைத்துக்கொள் !

சமுத்திரக்கரையைப் பார்த்தால்
விபீஷணரை நினைத்துக்கொள் ! 

தாம்புக்கயிற்றைப் பார்த்தால்
யசோதா மாதாவை நினைத்துக்கொள் !

தொட்டிலைப் பார்த்தால்
பெரியாழ்வாரை நினைத்துக்கொள் ! 

கட்டிலைப் பார்த்தால்
மாமா ப்ரயாக தாஸரை நினைத்துக்கொள் !

பூமாலையைப் பார்த்தால்
ஆண்டாளை நினைத்துக்கொள் !

நந்தவனத்தைப் பார்த்தால்
தொண்டரடிப்பொடி ஆழ்வாரை நினைத்துக்கொள் !

கடப்பாரையைப் பார்த்தால்
திருமலை அனந்தாழ்வானை நினைத்துக்கொள் !

 எருமையைப் பார்த்தால்
ஞானேஸ்வரரை நினைத்துக்கொள் !

துடைப்பத்தைப் பார்த்தால்
பூரி ஜகந்நாதனை நினைத்துக்கொள் ! 

தூணைப் பார்த்தால்
நரசிம்மரை நினைத்துக்கொள் !

 கிணற்றைப் பார்த்தால்
கூபா கும்பரை நினைத்துக்கொள் !

வாளைப் பார்த்தால்
திருமங்கையாழ்வாரை நினைத்துக்கொள் !

பழங்களைப் பார்த்தால்
க்ருஷ்ணனுக்கு பழம்தந்த பழக்காரியை நினைத்துக்கொள் !

மொட்டைத்தலையைப் பார்த்தால்
திருப்பதி பெருமாளை நினைத்துக்கொள் !

மூக்குத்தியைப் பார்த்தால்
புரந்தரதாஸரின் மனைவி சரஸ்வதியை நினைத்துக்கொள் !

தம்பூராவைப் பார்த்தால்
தியாகராஜரை நினைத்துக்கொள் !

தராசைப் பார்த்தால்
த்வாரகா ராமதாஸரை நினைத்துக்கொள் !

காய்கறிகளைப் பார்த்தால்
சாருகாதாஸரை நினைத்துக்கொள் !

முடியைப் பார்த்தால்
சேனா நாவிதரை நினைத்துக்கொள் !

கிழிந்த உடையைப் பார்த்தால்
குசேலரை நினைத்துக்கொள் !

சாவியைப் பார்த்தால்
மன்னார்குடி ராஜகோபாலனை நினைத்துக்கொள் !

சந்தனத்தைப் பார்த்தால்
ஸ்ரீமன் மாதவேந்திரபுரியை நினைத்துக்கொள் !

அரிசையைப் பார்த்தால்
ஸ்ரீ க்ருஷ்ண சைதன்யரின் மனைவி
ஸ்ரீமதி விஷ்ணு ப்ரியா தேவியை நினைத்துக்கொள் !

குத்துவிளக்கைப் பார்த்தால்
திருவிளக்குப்பிச்சனை நினைத்துக்கொள் !

பாலைப் பார்த்தால்
வடுகநம்பியை நினைத்துக்கொள் !

நாமக்கட்டியைப் பார்த்தால்
திருக்குறுங்குடி நம்பியை நினைத்துக்கொள் !

குடையைப் பார்த்தால்
கோவர்தன மலையை நினைத்துக்கொள் !

ஜன்னலைப் பார்த்தால்
கனகதாசரை நினைத்துக்கொள் !

சிறையைப் பார்த்தால்
தேவகி,வசுதேவரை நினைத்துக்கொள் !

அழுக்குத் துணிகளைப் பார்த்தால்
நம் பெருமாள் என்று சொன்ன வண்ணானை நினைத்துக்கொள் !

உப்பைப் பார்த்தால்
ஒப்பிலியப்பனை நினைத்துக்கொள் !

கோமணத்தைப் பார்த்தால்
குரூரம்மையை நினைத்துக்கொள் !

காதைப் பார்த்தால்
குரு உனக்குத் தந்த 
மந்திர உபதேசத்தை நினைத்துக்கொள் !

மோதிரத்தைப் பார்த்தால்
பூரி ஜகந்நாதனின் 
பூக்காரியை நினைத்துக்கொள் !

மாம்பழங்களைப் பார்த்தால்
ஸ்ரீநாத்ஜீயை நினைத்துக்கொள் !

படுக்கையைப் பார்த்தால்
 எம்பார் கோவிந்தரை நினைத்துக்கொள் !

தோள்களைப் பார்த்தால்
பிள்ளை உறங்காவில்லிதாஸரை 
நினைத்துக்கொள் !

ஏர்கலப்பையைப் பார்த்தால்
பலராமரை நினைத்துக்கொள் !

இன்னும் இதுபோல்
உன் வாழ்க்கையில்
அன்றாடம் பார்க்கும்
நிகழ்ச்சிகளில் பக்தி பூர்வமான
கோடி கோடி விஷயங்கள்
பின்னிப் பினைந்துகிடக்கிறது !

நான் சொன்னது
பெரிய கடலில் ஒரு துளியே !

இப்படியே நினைத்துக்கொண்டிருந்தாலே,
ஒரு நாள் சத்தியமாக,
உனக்கு க்ருஷ்ணனின் தரிசனமும்,
மஹா பாகவதர்களின் தரிசனமும்
நிச்சயம் கிடைக்கும் !

விடா முயற்சி செய் !
நிச்சயம் உன்னால் முடியும் !
வீண் போகவே போகாது !

நீ என்னிடம் கூட சொல்லவேண்டாம் !
நீ அனுபவித்தாலே எனக்குப் போதும் !

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP