ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 31 டிசம்பர், 2010

திருமலையே நீ வாழ்க !

ராதேக்ருஷ்ணா . . .

திருமலையே நீ வாழ்க !

ஸ்ரீ வராஹ மூர்த்தியின் சொத்தே . . .
திருமலையே நீ வாழ்க !

ஸ்ரீ ஸ்ரீநிவாஸனின் வாசஸ்தலமே . . .
திருமலையே நீ வாழ்க !

பாபங்களை நாசமாக்கும் வேங்கடாத்ரி . . .
திருமலையே நீ வாழ்க !

ஆதிசேஷனாய் இருக்கும் சேஷாத்ரி . . .
திருமலையே நீ வாழ்க !

வேதங்களே மலையான வேதாத்ரி . . .
திருமலையே நீ வாழ்க !

கருடன் கொண்டு வந்த கருடாத்ரி . . .
திருமலையே நீ வாழ்க !

வ்ருஷபனுக்கு மோக்ஷம் கிடைத்த வ்ருஷபாத்ரி . . .
திருமலையே நீ வாழ்க !

அஞ்சனாதேவி தவமிருந்த அஞ்சனாத்ரி . . .
திருமலையே நீ வாழ்க !

பரமானந்தத்தின் இருப்பிடம் ஆனந்தாத்ரி . . .
திருமலையே நீ வாழ்க !

ஏழுமலையே . . .திருவேங்கட மலையே . . .
திருமலையே நீ வாழ்க !

பக்தர்களை வசீகரித்து,பக்தியைத் தரும்
திருமலையே நீ வாழ்க !

வைகுந்தவாசன் தன் திருவடி பதித்த
ஸ்ரீவாரி பாதம் தாங்கும்
திருமலையே நீ வாழ்க !

குலசேகர ஆழ்வாரும் ஏதேனுமாக
ஆசைப்பட்ட திருமலையே நீ வாழ்க !


குரவநம்பி சதா சர்வதா ஸ்மரித்த
திருமலையே நீ வாழ்க !


அன்னமாச்சார்யார் பாடி அனுபவித்த
அற்புத திருமலையே நீ வாழ்க !


ஸ்வாமி இராமானுஜரும் முழங்காலால் ஏறிய
பவித்ரமான திருமலையே நீ வாழ்க !


திருமலையாழ்வாரே உன்னை பணிந்தேன் !


எனக்கு பெரிய பக்தியில்லை !
எனக்கு நல்ல சிரத்தையில்லை !
எனக்கு திடமான புத்தியில்லை !
எனக்கு கர்ம யோகம் தெரியாது !
எனக்கு ஞானம் புரியாது !


திருமலையாழ்வாரே நீரே எனக்கு கதி !
ஸ்ரீநிவாசனே உன் மேலிருக்கிறார் . . .
நீ என்னை உன் குழந்தையாக
ஏற்றுக்கொள் . . .

நிச்சயம் ஸ்ரீநிவாசன் என்னை ஏற்றுக்கொள்வார் . . .

ஏற்றுக்கொள்வாயா . . .?
இந்த முட்டாள் குழந்தையை . . .?

திருமலையாழ்வாரே . . .
நீர் மிகவும் பெரியவர் . . .
நானோ மிகப்பெரிய பாபி . . .

தயவு செய்து இந்தப் பாபிக்கு
மோக்ஷம் தாரும் . . .

அகலகில்லேன் இறையுமென்று
அலர்மேல் மங்கை உறை மார்பனின்
சிம்மாசனமாகிய திருமலையே . . .

உன் திருமுடியில் பாலாஜிக்கு இடம்தந்தாய் . . .
உன் திருவடியில் இந்த ஏழைக்கு இடம் தா . . .

அதற்கு நான் என்ன கைமாறு செய்வேன் ?

உன்னை வாயார,மனதார,நாத்தழும்பேற
எல்லா ஜன்மங்களிலும் வாழ்த்துவேன் . . .

திருமலையே நீ வாழ்க . . .

 

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP