ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 16 ஜனவரி, 2011

நானும் ,கண்ணனும் . . .

ராதேக்ருஷ்ணா

நான் : கண்ணா . . .
மாடு மேய்க்கப் போகிறாயா ?

கண்ணன் : ஆமாம் . . .
நீயும் வருகிறாயா ?



நான் : கண்ணா . . .
எனக்கு மாடு மேய்க்கத் தெரியாதே ?

கண்ணன் : கவலை வேண்டாம் . . .
நான் உனக்குச் சொல்லித் தருகிறேன் !



நான் : கண்ணா . . .
எனக்கு பயமாயிருக்கிறதே . . .

கண்ணன் : கவலையே வேண்டாம் . . .
நான் உன்னோடு கூடவே இருக்கின்றேன் !



நான் : கண்ணா . . .
எப்பொழுதும் கூட இருப்பாயா ?

கண்ணன் : [சிரித்துக்கொண்டே]
இதில் என்ன சந்தேகம் ?



நான் : தெரியவில்லை . . .
நீ இருப்பது புரியவில்லை . . .?

கண்ணன் : உனக்குத் தெரிகிறதோ இல்லையோ ?
உனக்குப் புரிகிறதோ இல்லையோ ?
ஆனால் நான் உன்னோடு இருப்பது சத்தியம் . . .



நான் : ஒரு வேளை நான் உன்னை
மறந்துவிட்டால் போய்விடுவாயா?

கண்ணன் : நீயே என்னைத் துரத்தினாலும்
நான் உன்னை விட்டுப் போகமுடியாது . . .



நான் : ஏன் அப்படி ?

கண்ணன் : அது அப்படித்தான்  , , , 
 
 
நான் : அதான்...ஏன் அப்படி ?

கண்ணன் : அது என் சுபாவம் . . .
என்னால் யாரையும் விட்டு விலகமுடியாது . . .



நான் : நான் மிகவும் மோசமானவன் . . .

கண்ணன் : உன்னை நான் சரி செய்வேன் . . .



நான் : என்று நான் சரியாக இருப்பேன் . . .

கண்ணன் : அந்தக் கவலை உனக்கெதற்கு ?



நான் : என்னைப் பற்றி நான் கவலைப்படாமல்
வேறு யார் கவலைப்படுவார்கள் ? ? ?

கண்ணன் : அதற்குத் தான் நானிருக்கிறேனே . . .
உன்னைப் பற்றிக் கவலைப்படவும்,
உன்னைக் காப்பாற்றவும்,
உனது தேவைகளை கவனிக்கவும் நானிருக்க
உனக்கென்ன கவலை . . .


நான் : ஆனாலும் . . . 

கண்ணன் : போதும் உன் அகம்பாவம் . . .
அதை நிறுத்து . . .
நான் இருக்கிறேன் . . .
உன்னைக் காப்பாற்ற . . .

இனி கவலையில்லாமல் இரு . . .


நான் :  {கண்ணீரில் கரைகிறேன்}
இது போதும் கண்ணா . . .
இந்த வார்த்தைக்காகத் தான் ஏங்கினேன்  . . .

கண்ணன் : {என் தோளில் கைபோட்டு}
சரி . . சரி . .வா. . 
மாடு மேய்க்கப் போகலாம் . . .

நான் : {மனதிற்க்குள்}
கண்ணா  . . .என்றும் நீயே கதி எனக்கு . . .

  
 

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP