ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 24 டிசம்பர், 2011

கரையேற்றுவீராக . . .

ராதேக்ருஷ்ணா
 
தவறி விழுந்தால் . . .
வாழ்க்கையில்
நல்ல பாதையிலிருந்து
தவறி விழுந்துவிட்டால் . . .
 
மீண்டும் அந்தப் பாதையை
அடைய முடியுமா ?
 
அதற்குத் தானே பக்தி . . .
 
பக்தி செய்பவர் வாழ்வில்
தவறு செய்து விட்டால் . . .
அவர்கள் மீண்டும்
வாழ்வில் ஜெயிக்க முடியுமா ?
அதற்குத் தானே பகவான் . . .
 
பெண்ணாசையில் வீணாய்
போய்விட்டால் ?

அவர்களால் மீண்டும்
உலகில் தலை நிமிரமுடியுமா ?

சத்தியமாய் முடியும் . . .

யாரேனும் அப்படி உண்டா . . .

ஆமாம் . . .

நம்முடைய
தொண்டரடிப்பொடி ஆழ்வார் உண்டு . . .

வாழ்வில் பெண்ணாசையினால்
வீணாகித் தவறி விழுந்து
ரங்கனின் கருணையினால்
அவனை அடைந்த
நம் தொண்டரடிப்பொடி உண்டு . . .

மார்கழி கேட்டையான இன்று
அவதரித்த தொண்டரடிப்பொடியே,
என்னையும் வாழ்வில்
தலை நிமிர வைப்பீராக . . .

திருமாலை அடைய திருமாலை
சொன்னவரே . . .
எனக்காக ரங்கனிடம் சிபாரிசு செய்வீரா ? ! ?

திருப்பள்ளியெழுச்சியால் ரங்கனை
பள்ளியுணர்த்தினவரே . . .
எனக்காக ரங்கனிடம் கொஞ்சம் பேசுவீரோ ? ! ?

இந்த வாழ்வில் விழுந்தவனை
தயவு செய்து காப்பாற்றும் . . .
ஊரிலேன் காணியில்லை . . .
உறவும் யாருமில்லை . . .
கண்ணனின் திருவடியும் அருகிலில்லை . . .
பக்தியோ துளியுமில்லை . . .
வைராக்யம் இல்லவேயில்லை . . .

அதனால் விப்ரநாராயணா . . .
தொண்டர் அடிப் பொடியே . . .

உனக்குப் புரியும் என் நிலைமை . . .

கரையேற்றுவீராக . . .
சம்சார சாகரத்திலிருந்து
கரையேற்றுவீராக . . .



0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP