வா . . . கற்போம் !
ராதேக்ருஷ்ணா
நிழலின் அருமை,
வெயிலில் தெரியும் !
வெயிலின் அருமை,
குளிரில் தெரியும் !
நீரின் அருமை,
தாகத்தில் தெரியும் !
வெளிச்சத்தின் அருமை
இருட்டில் தெரியும் !
ஆரோக்கியத்தின் அருமை
நோயில் தெரியும் !
உணவின் அருமை
பசியில் தெரியும் !
இளமையின் அருமை
முதுமையில் தெரியும் !
நேற்றின் அருமை
நாளை தெரியும் !
அன்பின் அருமை
பிரிவில் தெரியும் !
பெற்றோரின் அருமை
இழப்பில் தெரியும் !
பணத்தின் அருமை
ஏழ்மையில் தெரியும் !
மழையின் அருமை
பஞ்சத்தில் தெரியும் !
வாழ்வின் அருமை
மரணத்தில் தெரியும் !
சுத்தத்தின் அருமை
அசுத்தத்தில் தெரியும் !
மெய்யின் அருமை
பொய்யில் தெரியும் !
தைரியத்தின் அருமை
பயத்தில் தெரியும் !
கிராமத்தின் அருமை
நகரத்தில் தெரியும் !
அன்பின் அருமை
தவிப்பில் தெரியும் !
அமைதியின் அருமை
சத்தத்தில் தெரியும் !
தேசத்தின் அருமை
வெளிநாட்டில் தெரியும் !
கடவுளின் அருமை
கஷ்டத்தில் தெரியும் !
குருவின் அருமை
குழப்பத்தில் தெரியும் !
நாமஜபத்தின் அருமை
சிரமத்தில் தெரியும் !
சத்சங்கத்தின் அருமை
சம்சாரத்தில் தெரியும் !
கோயிலின் அருமை
அழுகையில் தெரியும் !
இதுபோல் பல விஷயங்கள்
விதவிதமாய்
அருமையாய் தெரியும் ! ! !
உலகைக் கொஞ்சம் பார் . . .
உள்ளபடி பார் . . .
ஒழுங்காகப் பார் . . .
உனக்கு அறிவுரை
சொல்வதாக உலகைப் பார் . . .
இன்னும் நீயும், நானும்
கற்றுக்கொள்ள வேண்டியது
நிறையவே உள்ளது . . .
உலகம் ஒரு சர்வகலாசாலை . . .
அது நாளும் நமக்கு
புதியதாய் ஒன்றை
சொல்லிக் கொடுத்துக்கொண்டே இருக்கும் . . .
வா . . .
மீண்டும் கற்க ஆரம்பிப்போம் . . .
வா . . .
வாழ்வை கற்போம் . . .
வா . . .
நம்மைக் கற்போம் . . .
வா . . .
புதியதாய் கற்போம் . . .
வா . . .
குழந்தையாய் கற்போம் . . .
வா . . .
நாளும் கற்போம் . . .
வா. . . .
வாழ்நாள் முழுவதும் கற்போம் . . .
0 கருத்துகள்:
கருத்துரையிடுக