ராஜகோபாலனும்...வெண்ணை தாழியும்
ராஜகோபாலா...
மன்னார்குடி ராஜகோபாலா....
ராஜகோபாலா.... சொல்லுடா....
வெண்ணையின் மீது ஏனடா உனக்கு இத்தனை மோகம் ?!?!
கோபிகைகள் கடைந்ததாலோ ?!?!
ராஜகோபாலா.... சொல்லுடா....
வெண்ணைத்தாழியின் மீது ஏனடா உனக்கு இத்தனை ஆசை ?!?!
கோபிகைகள் இடுப்பில் சுமந்ததாலோ ?!?!
ராஜகோபாலா..... சொல்லுடா.....
வெண்ணையை உன் மீது வீசினால்
ஏனடா உனக்கு இத்தனை குதூகலம்?!?!
நீ கோபர்களோடு வீசி விளையாடினதாலோ ?!?!
ராஜகோபாலா..... சொல்லுடா....
வெண்ணை மீது கொண்ட
காதலை என் மீது கொஞ்சம்
வைக்கக்கூடாதா ?!?!
ராஜகோபாலா...... சொல்லுடா....
பதில் சொல்லடா.....
என்னை வெண்ணையாய் விழுங்கமாட்டாயா ?!?!!
ராஜகோபாலா..... சொல்லுடா.....
வெண்ணைத்தாழியைக் கட்டிக்கொண்டதைப் போல்
என்னையும் கட்டிக்கொள்வாயா ?!?!
ராஜகோபாலன் சொன்னான்....
வெண்ணையாய் உன் பக்தி ஆகட்டும்...
நானே உரிமையோடு எடுத்துக்கொள்வேன்....
உன் உடல் என்னும் பானயில்,
உன் மனம் என்னும் தயிரை
குரு என்னும் கோபி,
நாம ஜபம் என்னும் மத்தினால்
கடைய பக்தி என்னும் வெண்ணை
அழகாய் உண்டாகும்.....
அப்போது நானே அதை திருடுவேன்....
குருவைப் பிடி...
குரு சொல்வதைக் கேள்...
குரு உன்னை உகந்தால்,
உன் உடலும், மனமும், வாழ்வும்
என்றுமே எனக்கு வெண்ணையே....
இன்றோ வெண்ணை தாழி உத்சவம்,
என்னுடைய மன்னார்குடியில்....
விழுங்கட்டுமா...உன்னை முழுசாக...
உன்னை விழுங்க நான் தயார்....
நீ வெண்ணையாய் மாறிவிட்டால்.....
உன் குரு நீ வெண்ணை என்று சொல்லட்டும்...
அன்றே உன்னை உள்ளபடி நான் அனுபவிப்பேன்...முழுதும் அளந்து, ரசித்து, ருசித்து, என் இஷ்டப்படி உன்னை விழுங்கியே தீருவேன்....
0 கருத்துகள்:
கருத்துரையிடுக