ஆரோக்கியம் !
ஆரோக்கியம் !
உலகில் நீ எதை இழந்தாலும்,
ஆரோக்கியத்தை மட்டும் இழந்துவிடாதே !
உலகில் நீ யாரை
மதிக்காவிட்டாலும்
ஆரோக்கியத்திற்கு
மரியாதை கொடு !
உன்னோடு கடைசி
வரை யாரும்
இருக்கப்போவதில்லை,
உன் உடலைத் தவிர !
யாரை நீ வெறுத்தாலும்,
உடல் ஆரோக்கியத்தை
மட்டும் வெறுக்காதே !
ஆரோக்கியம் இருந்தால்,
இங்கே பிச்சை எடுத்தாவது
வாழ்ந்துவிடலாம் !
ஆரோக்கியத்தை இழந்தால்
பணமும், பதவியும், குடும்பமும்,
தொழிலும், எதுவும் பலனில்லை !
உலகமே உன்னை ஒதுக்கினாலும்,
ஆரோக்கியமாய் உள்ள வரை
நீ நிம்மதியாய் வாழலாம் !
ஆரோக்கியத்தை இழந்தால்
நீ இங்கே செல்லா காசு !
நீ எல்லோருக்கும் பாரம் !
ஆரோக்கியம் இல்லை என்றால்
கணவனும் விரோதியே !
மனைவியும் பாரமே !
பிள்ளைகளும் வழிப்போக்கரே !
உற்றாரும் வசைபாடிகளே !
உன் படிப்பை விட,
உன் பதவியை விட,
உன் பணத்தை விட,
உன் குடும்பத்தை விட,
உன் ஆசையை விட,
உன் லக்ஷியத்தை விட,
உன் ஜாதியை விட,
உன் குலத்தை விட,
உன் ஆரோக்கியம் உயர்ந்ததே !!!
எவ்வளவு நெருங்கின உறவானாலும்,
யாருக்காகவும், எதற்காகவும்
ஆரோக்கியத்தை விட்டுக்கொடுக்காதே !
உடல்...
உன் க்ருஷ்ணன் உனக்கென
விசேஷமாய் தந்தது !
அதுவே அவனை அடைய
ஒரே உயர்ந்த வழி !
உன் மூச்சுக்காற்று
உள்ளவரை உன் உடலை
ஜாக்கிரயையாய்
பார்த்துக்கொள் !
உடலை அபிமானிக்காதே
என்று தான் சொன்னார்களே
ஒழிய, ஆரோக்கியத்தை
கவனிக்காதே என்று சொல்லவில்லை !
நீ ஆரோக்கியமாய்
இருந்தால் தானே
திவ்யதேச யாத்திரை போகலாம் !
மஹாத்மாக்களை சேவிக்கலாம் !
சத்சங்கம் கேட்கலாம் !
பஜனை பாடலாம் !
நர்த்தனம் ஆடலாம் !
கண்ணனைப் பார்க்கலாம் !
கைகளால் கண்ணனைத் தொடலாம் !
வாயால் கண்ணனை முத்தமிடலாம் !
குருவிற்கு கைங்கரியம் பண்ணலாம் !
இன்னும் நிறைய செய்யலாம்...
உன்னிடம் எனக்கு
இது ஒன்று தான் பிரார்த்தனை !
தயவு செய்து உன்
ஆரோக்கியத்தில் கவனம் வை !
கண்ணனுக்காக ...
உன்னுள் உறையும் கண்ணன்,
நீ ஆரோக்கியமாய் இருந்தால் தானே
சந்தோஷமாய் இருப்பான் ...
உன் உடல் கண்ணன் உறையும் கோயில் !!!
கோயிலை நன்றாய் வைப்பாயா !?!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக