ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 5 ஜனவரி, 2011

துவண்டு போகாதே . . .

ராதேக்ருஷ்ணா

துவண்டு போகாதே . . .
துன்பங்களைக் கண்டு துவண்டு போகாதே . . .

துவண்டு போனால் நீ
விதியின் முன் கோழையாகி விடுவாய் . . .

துவண்டு போனால் நீ
மற்றவரின் தயவுக்காக ஏங்குவாய் . . .

துவண்டு போனால் நீ
உன் முன்னே அவமானப்படுவாய் . . .

துவண்டு போனால் நீ
நிகழ்வுகளுக்கு அடிமையாகி விடுவாய் . . .

துவண்டு போனால் நீ
இயற்கையின் விதியை மீறிவிடுவாய் . . .

துவண்டு போனால் நீ
சூழ்நிலைக் கைதியாகி விடுவாய் . . .

துவண்டு போனால் நீ
முட்டாளாகி விடுவாய் . . .

துவண்டு போனால் நீ
எல்லோரிடமும் தோற்றுவிடுவாய் . . .

 துவண்டு போனால் நீ
கொசுவை விட சிறியதாகிவிடுவாய் . . .

துவண்டு போனால் நீ
சிறு தூசிக்கும் பயப்படுவாய் . . .

துவண்டு போனால் நீ
பகவானின் கருணையை அறியமாட்டாய் . . .

துவண்டு போனால் நீ
உன் வாழ்க்கையை ரசிக்கமாட்டாய் . . .

துவண்டு போனால் நீ
உன்னையே வெறுத்துவிடுவாய் . . .

துவண்டு போனால் நீ
உனக்கு வரும் நன்மைகளை தடுத்துவிடுவாய் . . .

துவண்டு போனால் நீ
உன்னையே இழந்துவிடுவாய் . . .

அதனால்
துவண்டு போகாதே . . .
எந்த நிலையிலும் துவண்டு போகாதே . . .
எதற்க்கும் துவண்டு போகாதே . . .

நீ உன் வாழ்க்கையை வாழாமல்
துவண்டு போனால்,
உன் வாழ்க்கை அழும் . . .

உன் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கவேண்டும் . . .

Read more...

செவ்வாய், 4 ஜனவரி, 2011

ஆஞ்சநேய வீரா ! அனுமந்த சூரா !

ராதேக்ருஷ்ணா

ஆஞ்சநேய வீரா ! அனுமந்த சூரா !
உன்னைப் போல் 
காமத்தில் மயங்காத மனது வேண்டும் !

ஆஞ்சநேய வீரா ! அனுமந்த சூரா !
உன்னைப் போல்
எதற்க்கும் அஞ்சாத தைரியம் வேண்டும் !

ஆஞ்சநேய வீரா ! அனுமந்த சூரா !
உன்னைப் போல்
பகவானுக்கு கைங்கர்யம் செய்யவேண்டும் !

ஆஞ்சநேய வீரா ! அனுமந்த சூரா !
உன்னைப் போல்
எடுத்த காரியத்தை முடிக்கும் திறன் வேண்டும் !

ஆஞ்சநேய வீரா ! அனுமந்த சூரா !
உன்னைப் போல்
அழகாகவும், அர்த்தத்தோடும் பேச வேண்டும் !

ஆஞ்சநேய வீரா ! அனுமந்த சூரா !
உன்னைப் போல்
எப்பொழுதும் வினயத்தோடு இருக்கவேண்டும் !

ஆஞ்சநேய வீரா ! அனுமந்த சூரா !
உன்னைப் போல்
ராமனிஷ்டமாக வாழ வேண்டும் !


ஆஞ்சநேய வீரா ! அனுமந்த சூரா !
உன்னைப் போல்
புத்தி சாதுர்யமும், பலமும் வேண்டும் !

ஆஞ்சநேய வீரா ! அனுமந்த சூரா !
உன்னைப் போல்
ராம கதை கேட்டால் கண்ணீர் வழியவேண்டும் !

ஆஞ்சநேய வீரா ! அனுமந்த சூரா !
உன்னைப் போல்
சகல சாஸ்திரங்களையும் கற்கவேண்டும் !

ஆஞ்சநேய வீரா ! அனுமந்த சூரா !
உன்னைப் போல்
ராம தாஸனாகவே வாழ்ந்துகாட்ட வேண்டும் !

ஆஞ்சநேய வீரா ! அனுமந்த சூரா !
உன்னைப் போல்..................

உன்னைப்போல் என்னை மாற்றிவிடு !
இதைக் கேட்க எனக்கு அதிகாரமில்லை . . .

ஆனால் உன்னைப்போல் இருந்தால்தான்
இந்த சம்சாரத்தில் நான் ஜெயிக்கமுடியும் . . .

சம்சார சாகரத்தில் மூழ்கிக்கொண்டிருக்கும்
இந்த அல்ப ஜந்துவை,
உன் வாலால் கட்டித் தூக்கி,
பகவானின் சரணகமலங்களில் போட்டுவிடு . . .

ஆஞ்சநேய வீரா ! அனுமந்த சூரா !
உன் திருவடிகளில் சரணடைந்தேன் . . .

இந்த ஏழைக்குழந்தைக்காக
பகவான் ஸ்ரீ க்ருஷ்ணனிடம் தூது செல் !

செல் . . .என்னை ஏற்றுக்கொள்ளச் சொல் . . .
  

Read more...

சனி, 1 ஜனவரி, 2011

அருள் செய் . . .

ராதேக்ருஷ்ணா

மலையப்பா  . . .
எல்லோரும் நன்றாக இருக்கவேண்டும் . . .

ஸ்ரீநிவாசா . . .
எல்லோரும் ஆரோக்கியமாக இருக்கவேண்டும் . . .

கோவிந்தா . . .
எல்லோரும் நிம்மதியாக இருக்கவேண்டும் . . .

பாலாஜீ . . .
எல்லோரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் . . .

வேங்கடேசா . . .
எல்லோரும் பக்தியோடு இருக்கவேண்டும் . . .

ஏழுமலையானே . . .
எல்லோரும் வினயத்தோடு இருக்கவேண்டும் . . .

கலியுக வரதா . . .
எல்லோருடைய கஷ்டங்களும் நீங்கவேண்டும் . . .

தயா சாகரா . . .
எல்லோருக்கும் ஆனந்தம் வளரவேண்டும் . . .

திருமலையானே . . .
எல்லா குடும்பமும் நன்றாக இருக்கவேண்டும் . . .

உன் திருவடிகளில்
சரணாகதி செய்தோம் . . .

தயை கூர்ந்து அருள் செய் . . .

Read more...

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP