ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 16 டிசம்பர், 2016

பணிந்தோமடி கோதை...

மார்கழித் திங்களும் வந்ததடி
கோதை...

மதி நிறைந்த நன்னாளானதடி
கோதை...

உன்னோடு நீராட வந்தோமடி
கோதை...

திருப்பாவை பாட வந்தோமடி
கோதை...

உன் இடமே எமக்கு ஆய்ப்பாடியடி
கோதை...

செல்வச் சிறுமியராய் ஆயினோமடி
கோதை...

நந்தகோப குமரனைக் காட்டடி
கோதை...

யசோதை இளஞ்சிங்கத்தைக் கூப்பிடடி
கோதை...

கார்மேனி செங்கண்ணனை வரச்சொல்லடி
கோதை...

நாராயணனை
நமக்கே தரச்சொல்லடி கோதை...

தன்னையே தரச்சொல்லடி கோதை...

உனக்காக எங்களுக்கும்
தருவானடி
கோதை...

உன்னையே பணிந்தோமடி கோதை...

உன் புகழே பாடுவோமடி
கோதை...

நீயே எங்களுக்கு பறையடி
கோதை...

Read more...

புதன், 14 டிசம்பர், 2016

பாணன் வந்தானடி...

பாணன் வந்தானடி...
காவிரி...
உன் மடி மீதினிலே...

பாணன் பிறந்தானடி...
காவிரி...
கார்த்திகை ரோகியினிலே...

பாணன் நின்றானடி...
காவிரி...
உன் கரை மீதினிலே...

பாணன் அழுதானடி...
காவிரி...
ஸ்ரீரங்கனின் நினைவினிலே...

பாணன் சிரித்தானடி...
காவிரி...
பக்தியின் பித்தினாலே...

பாணன் புலம்பினானடி...
காவிரி...
ரங்கனின் நாமத்தினாலே...

பாணன் சேவித்தானடி...
காவிரி...
ஸ்ரீரங்கத்தைக் கண்டதினாலே...

பாணன் நுழைந்தானடி...
காவிரி...
ரங்கனின் கருணையாலே...

பாணன் பாடினானடி...
காவிரி...
சாரங்க முனியின் தோளினிலே...

பாணன் மயங்கினானடி...
காவிரி...
அமலனாதிபிரான் அழகினிலே...

பாணன் தந்தானடி...
காவிரி...
அமுதன் அரங்கன் திருவடியினிலே...

பாணன் வாழ்கிறானடி...
காவிரி...
இன்றும் உன் மடிதனிலே...

என்னையும் சேர்த்துவிடடி...
காவிரி...
அந்த பாணனின் திருவடியிலே...

Read more...

மார்கழி வருகிறாள்...

வருகிறாள் மார்கழி...
மார்கழி வருகிறாள்...

நல்ல பனியோடும்,
பெரிய கோலங்களோடும்,
மார்கழி வருகிறாள்...

அற்புதமான குளிரோடும்,
ஜோரான பூசணிப் பூக்களோடும்
மார்கழி வருகிறாள்...

அழகான பஜனையோடும்,
சூடச்சுட பொங்கலோடும்,
மார்கழி வருகிறாள்...

ஆண்டாள் நாச்சியாரோடும், அவள் தோழிகளோடும்
மார்கழி வருகிறாள்...

திருப்பாவையோடும், கோபிகைகளின் விரதத்தோடும்
மார்கழி வருகிறாள்...

வைகுண்ட ஏகாதசியோடும்,
மோக்ஷத்தோடும்
மார்கழி வருகிறாள்...

க்ருஷ்ணரின் குசேலரோடும், அவரின்
அவலோடும்
மார்கழி வருகிறாள்...

தொண்டரடிப்பொடியாழ்வாரோடும், ஹனுமத் ஜெயந்தியோடும்
மார்கழி வருகிறாள்...

நம்மை ஆட்கொள்ள
க்ருஷ்ணனாகவே
மார்கழி வருகிறாள்...

சம்சார தாபத்தை தீர்த்து,
பக்தியில் திளைக்கவைக்க
ஆசையோடு
மார்கழி வருகிறாள்...

வா...வா...
மார்கழியைக் கொண்டாடுவோம்...
வா...வா...
மார்கழியை அனுபவிப்போம்...
வா...வா...
மார்கழியில் திளைப்போம்....

Read more...

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP