ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 31 அக்டோபர், 2010

சில மணிநேரங்கள் !

ராதேக்ருஷ்ணா

வாழ்வில் எத்தனையோ
காரியங்கள் செய்துகொண்டேயிருக்கிறோம் !

பயனற்ற செயல்கள் பலகோடி . . .
முட்டாள்தனமான காரியங்கள் சிலகோடி  . . .

சில சமயங்களில் நமக்குத் தெரியாமலேயே,
நாம் மிக அற்புதமான சில காரியங்களில்,
ஈடுபடுகின்றோம். . .


தெய்வத்தின் அனுக்ரஹத்தால் மட்டுமே
நாம் தெய்வீக சக்தியால் உந்தப்பட்டு
உருப்படியான காரியங்களை செய்கின்றோம் . . .


 அப்படி நாம் செய்யும் காரியம்தான்
கோவிலுக்குச் செல்வது . . .


தெய்வம் நிச்சயம் நமக்கு
என்றும் நன்மையே செய்கிறது!


மலையப்ப ஸ்வாமியை மிஞ்சின
கலியுக தெய்வம் வேறொன்று உண்டோ ? ? ?


திருமலை ஸ்ரீநிவாசன் தான் எங்களை
திருமலைக்கு அழைத்துச்சென்றது  . . .


திருமலை பாலாஜியின் அருளல்லாமல்
ஒரு ஜந்துவும் திருமலையில் நுழையமுடியாது . . .


இந்த இரண்டு கால் ஜந்துக்களையும்,
அலர்மேல் மங்கா உறை மார்பன்,
தன் திருமலைக்கு வரவழைத்தான் . . .




திருமலை மிக அழகானது . . .
திருமலை மிக அற்புதமானது . . .
திருமலை மிக உயர்ந்தது . . .
திருமலை மிக விசேஷமானது . . .
திருமலை மிக ஆச்சரியமானது . . .


திருமலையில் இருக்கும் நேரம்,
நிச்சயம் வைகுண்டத்தில் வாழும் நேரமே. . .


நாங்கள் மலையேறி ப்ரபுவின்
பொன்னடியில் சரணாகதி செய்ய
ஆவலோடு வரிசையில் நின்றோம் . . .


பொதுவாக எல்லாவற்றிற்க்கும்,
 காத்திருக்கும் மக்கள் கூட்டம்,
கோயிலில் மட்டும் காத்திருக்க
பொறுமையோடு இருப்பதில்லை . . .


கோவிலில் எத்தனை நேரம்
காத்திருக்கிறோமோ அத்தனை
நேரம் நம் கர்ம வினை நம்மை
அணுகவே அணுகாது . . .


அதனால் எப்பொழுதும் கோயிலில்
நிறைய நேரம் காத்திருக்க,
தொடர்ந்து ப்ரார்த்தனை செய் . . .


நாங்களும் ஆனந்தமாக பொறுமையாக
ஆசையோடு காத்திருந்தோம் . . .
காத்திருக்க வைத்தான் ஸ்ரீநிவாஸன் . . .


அவன் மலையில் இருக்கும்
ஒவ்வொரு மணித்துளியும்,
வைகுண்ட வாசம் தானே . . .


பக்தர்கள் கூட்டத்தில் நாமும்,
அடியவரின் அடியவராக,
நிற்பதே பெரிய வரப்ரசாதம் . . .


கூடியிருந்து குளிர்ந்து என்று
ஆண்டாள் சொன்ன வாக்கியத்தின்
அர்த்தம் பக்த கூட்டத்தில் இடிபட்டுக்கொண்டு
பகவானுக்காக காத்திருத்தலே ஆகும் . . .


3 மணி நேரம் . . .180 நிமிஷங்கள் . . .
ஆஹா. . .இந்த சில மணி நேரங்கள் . . .
பணம் கொடுத்தாலும் கிடைக்காது . . .
பதவி இருந்தாலும் கிடைக்காது . . .
ராஜனாய் இருந்தாலும் நடக்காது . . .
எத்தனை படித்தாலும் கிடைக்காது . . .


வாழ்க்கையில் வைத்தியருக்காக
காத்திருந்தோம் . . .
இளவயதில் கல்யாணத்திற்க்காக
காத்திருந்தோம் . . .
ப்ரயாணம் செய்ய வண்டிக்காக
காத்திருந்தோம் . . ,
யாரோ வருவதற்காக கால்கடுக்க
காத்திருந்தோம் . . .
வெட்டியாய் பல விஷயங்களுக்காக
காத்திருந்தோம் . . .
 வங்கியில் நம் பணத்தை எடுக்க
காத்திருந்தோம் . . .
கல்யாண வீட்டில் சாப்பாட்டிற்க்காக
காத்திருந்தோம் . . .
தூங்குவதற்காக இரவு வர
காத்திருந்தோம் . . .
பல சமயங்களில் வேலைக்காரர்களுக்காக
காத்திருந்தோம் . . .
இன்னும் இது போல் பல காத்திருப்புகள் . . .


ஆனால் இவற்றினால் இதுவரை
ஆனந்தம் அடைந்ததேயில்லை . . .
ஆனந்தம் என்று மயங்கினோம் . . .


உண்மையில் ஆனந்தம் . . .
திருமலையில் ஸ்ரீநிவாஸனைக் காண
காத்திருப்பதேயாகும் . . .


வாழ்வில் எப்பொழுதோ நாம் சென்று
அவனைத் தொழ . . .அந்த நாளுக்காக,
அந்த சில மணித் துளிகளுக்காக...
ஸ்ரீநிவாஸனே நமக்காகவே 
காத்திருக்கும்போது ,
அல்ப மனிதக் கூட்டம்,
அழுக்குடம்பு,எச்சில்வாய்,அஹம்பாவிகள்
நாம் காத்திருக்கக்கூடாதே என்ன ?  ?  ?


ஸ்ரீநிவாஸன் எங்களுக்காக காத்திருக்கிறான்
என்ற சுகத்திலேயே மேனி சிலிர்க்க,
ஆனந்தத்தில் அவனுடைய வைபவத்தை
சத்சங்கமாய் அனுபவித்துக்கொண்டு,
நாமத்தை ஜபித்துக்கொண்டிருக்க,
வரிசையும் நகர, ஸ்ரீநிவாஸனிடம்
கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கிக்கொண்டிருந்தோம் . . .


சிறிது சிறிதாக வரிசை நகர நகர,
பெரிய மலை போன்ற பாபங்கள்,
நெருப்பிலிட்ட பஞ்சாக எறிந்துபோக,
மனதில் சமாதானம் அதிகமாக,
வாயிலே நாமஜபம் திடமாக வந்தது . . .
 
தீபாவளி வந்துவிட்டது ...

முடிந்தவுடன் மீண்டும் திருமலை செல்வோம் . . .


Read more...

புதன், 27 அக்டோபர், 2010

திருமலை . . .

ராதேக்ருஷ்ணா

திருமலை !

எங்கள் ஸ்ரீநிவாஸன் வாழும் மலை !

அழகு வராஹமூர்த்தியின் சொந்த மலை !

அன்பு அலர்மேல்மங்காவின் லீலா மலை !

செடியாய வல்வினைகள்
தீர்க்கும் திருமாலின் திருமலை !  

ஸ்வாமி நம்மாழ்வார் மேனி
சிலிர்த்த உன்னத மலை !

குலசேகர ஆழ்வார் படியாய்
கிடந்து பவளவாய் காண 
ஆசைப்பட்ட மலை !

ஸ்ரீநிவாஸனின் தாயாராய்
யசோதாவும் வகுளமாலிகாவாக
கைங்கர்யம் செய்யும் மலை !

சகலவிதமான பாபங்களையும்
நாசம் செய்யும்
வேங்கடாத்ரி மலை !

பகவான் தங்குவதற்காக
ஆதிசேஷனும் தானே மலையான
சேஷாத்ரி மலை !

வேதங்கள் எல்லாம் மலையாய்
பகவானை ஸ்தோத்திரம் செய்யும்
வேதாத்ரி மலை !

திருமாலுக்காக கருடனும்
ஆசை ஆசையாய் தூங்கி வந்த
கருடாத்ரி மலை !

வ்ருஷபாத்ரனும் பெருமாளின்
அனுக்ரஹத்தில் மோக்ஷம் அடைந்த
வ்ருஷபாத்ரி மலை !

அஞ்சனாதேவியும் நல்ல புத்திரன்
வேண்டி தவமிருந்து ஆஞ்சனேயரைப் பெற்ற
அஞ்சனாத்ரி மலை !

ஆதிசேஷனும்,வாயு தேவனும்
பகவானின் அருளால் ஆனந்தமடைந்த
ஆனந்தாத்ரி மலை !


ரிஷிகளும்,ஞானிகளும்,
தேவர்களும் கைங்கர்யம் செய்யும் மலை ! 

 தொண்டைமான் சக்ரவர்த்தி
தொழுத புண்ணிய மலை ! 

பெரியதிருமலை நம்பிகள்
கைங்கர்யம் செய்த மலை ! 

காரேய் கருணை இராமானுஜன்
முட்டிக்கால்போட்டு ஏறின மலை !

இன்னும் மலை ஏறவில்லை . . .




அன்னமாச்சார்யாரும் விதவிதமாய்
பாடிப் பரவசப்பட்ட மலை !


புரந்தரதாசரும் தன்னை மறந்து
கதறி அழுது ஆனந்தப்பட்ட மலை !


 பலராமரும்,விதுரரும் தீர்த்தயாத்ரையாக
வந்து தவமிருந்து மெய்சிலிர்த்த மலை !


அனந்தாழ்வான் தனது கடப்பாறையினால்
ஸ்ரீநிவாஸனின் முகத்தை பதம்பார்த்த மலை !


அனந்தாழ்வானின் மனைவி நிறைமாத
கர்ப்பிணியாய் கைங்கர்யம் செய்ய ஏறின மலை !


நிகமாந்த மஹா தேசிகரும்
கண்ணன் அடியினை காட்டும்
என்று பாசுரமிட்ட ஏழுமலை !


ஹாதிராம் பாவாஜீயும் ஸ்ரீநிவாஸனோடு
சொக்கட்டான் ஆடின அற்புத மலை ! 


வானவரும்,மன்னவரும்,இல்லாதவரும்,
குழந்தைகளும்,முதியோர்களும்,ஆடவரும்,
பெண்டிரும்,பக்தரும்,மற்றவரும்
ஏறும் உன்னத மலை . . .


திருவேங்கடமாமலை ஒன்றுமே
தொழ நம் வினை ஓயுமே . . .


எங்களையும் ஸ்ரீநிவாஸன்
தொழவைத்தார் . . .
இன்னும் நம்பமுடியவில்லை . . .
திருமலை சென்றோம் . . .
திருமலையில் ஏறினோம் . . .
திருமலையில் இருந்தோம் . . . 
  
தொழுதோம் . . .தொழுதோம் . . . தொழுதோம் . . .
ஏழுமலையையும் தொழுதோம் . . .
ஏழுமலையானையும் தொழுதோம் . . . 


ஸ்ரீநிவாஸா ! கோவிந்தா !
ஸ்ரீவேங்கடேசா ! கோவிந்தா !


 இன்னும் முடியவில்லை . . .
திருமலை அனுபவங்களை
நான் சொல்லி முடியவில்லை . . .


ஆனால் அதற்கு அடுத்த
ஆனந்தவேதம் வரை காத்திரு . . .
அதுவரை
கோவிந்தா கோவிந்தா
என்று அழைத்துக்கொண்டேயிரு . . .

Read more...

வெள்ளி, 22 அக்டோபர், 2010

ராச பௌர்ணமி !

ராதேக்ருஷ்ணா



பௌர்ணமி . . .

முழுமதி அழகானது . . .

எல்லோரையும் மயக்குவது . . .

மனதை இதமாக வருடுவது . . .

ஜீவராசிகளுக்கு போகம் தருவது . . .

கவிஞனும் ரசிப்பது . . .

நாஸ்தீகனும் அனுபவிப்பது . . .

விஞ்ஞானியும் காண்பது . . .

மெய்ஞானியையும் வசீகரிப்பது . . .

மாதம் ஒரு பௌர்ணமி . . .

இருப்பினும் அழகானது . . .

ஆயினும் சரத்கால பௌர்ணமி
 மிக மிக விசேஷமானது . . .

இந்த பௌர்ணமியில்தான்
இரவு ஆரம்பிக்கும் சமயத்தில்
நம் கண்ணன் ப்ருந்தாவனத்தில்
எல்லாவித அலங்காரங்களுடனும்
குழலூதினது . . .


இந்த சரத்கால பௌர்ணமிக்காகவே
கோபிகைகள் மார்கழி மாதத்தில்,
காத்யாயனி விரதம் இருந்தது . . .

இந்த ரசமயமான பௌர்ணமியில்
கண்ணன் ப்ருந்தாவனத்தில் நுழைய
சந்திரனும் அவன் திருவடிகளில்
சரணாகதி செய்தது . . .

இந்த முத்துபோன்ற பௌர்ணமியில்
க்ருஷ்ணன் கோபிகைகளை
மயக்க ஆனந்தமாக குழலூதினது . . .


இந்த லீலா பௌர்ணமியில் தான்
உள்ளம் கவர் காதலன் கண்ணனின்
குழலோசையில் ராதையும் தன்னை
மறந்து,அவனிடம் தன்னை அர்ப்பித்தது . . .



இந்த புண்ணிய பௌர்ணமியில்தான்
கோபிகைகளும் தங்களின் வீடு வாசலைத் துறந்து,பந்துக்களையும் உதறித்தள்ளி,ஆனந்தத்தில்
இரவில் ப்ருந்தாவனத்தில் நுழைந்தது . . .


இந்த அற்புத பௌர்ணமியில்தான்
கோபிகைகளோடு,ராதிகாவும் கண்ணனும்
ராச லீலா ஆட முடிவுசெய்தது . . .


இந்த அம்ருத பௌர்ணமியில்தான்
க்ருஷ்ணன் கோபிகைகளோடு,
யமுனையில் ஆனந்தமாகக் குளித்து,
குள்ளக்குளிர ஜலக்ரீடை செய்தது . . .




இந்த ப்ரேம பௌர்ணமியில்தான்
கோபிகைகள் கண்ணனை அகம்பாவத்தினால்
இழந்துவிட்டு,ப்ருந்தாவனத்தில்
பரிதவித்தது . . .




இந்த விரஹ பௌர்ணமியில்தான்
கோபிகைகள் ராதிகாவின் திருவடிகளில்
சரணாகதி செய்தது . . .




இந்த ப்ருந்தாவன பௌர்ணமியில்தான்
ராதிகா க்ருஷ்ணனை விட்டு,
கோபிகைகளோடு சேர்ந்துகொண்டு,
அழகாக கோபிகாகீதம் பாடினது . . .


இந்த ஆனந்த பௌர்ணமியில்தான்
கோபிகைகளின் பக்தியும்,ராதையின்
க்ருஷ்ண ப்ரேமையும் தேவர்களையும்,
உலகையும் வசப்படுத்தியது . . .


இந்த க்ருஷ்ணலீலா பௌர்ணமியில்தான்
அழகன் கண்ணன் கோபிகைகளின்
ப்ரேமைக்கு தன்னையே கொடுத்தது . . .




இந்த நர்த்தன பௌர்ணமியில்தான்
ஒவ்வொரு கோபிக்கும் ஒரு க்ருஷ்ணனாக,
கண்ணன் பல கண்ணனாக அவதாரம்
எடுத்து அவர்கள் இஷ்டப்படி ஆடினது . . .


இந்த புண்ணிய பௌர்ணமியில்தான்
கண்ணன் ராதையிடம் தன்னையே
பூரணமாக சமர்ப்பித்தது . . .


இந்த பிடிவாத பௌர்ணமியில்தான் ராதிகாவின்
அழகிற்கும்,கடைக்கண் பார்வைக்கும்,
கண்ணன் தானே தோற்றது . . .

இந்த ரஹஸ்ய பௌர்ணமியில்தான்
கண்ணன் கோபிகைகள் வேஷமிட்டு,
கோபர்களுடன் அவர்கள் வீட்டிலிருந்தது . . .

இன்னும் எத்தனையோ உள்ளது . . .

அவையெல்லாம் பரம ரஹஸ்யம் . . .

உன்னதமான ப்ரேம பக்தி உள்ளவரே
அதற்கு அதிகாரிகள் . . .

உனக்கு அந்த அருகதை வர
விடாது இந்த பக்தி பௌர்ணமியிலிருந்து
ப்ரேம நாமமான "ராதேக்ருஷ்ணா"வை
அள்ளி அள்ளிப் பருகு . . .

அப்படியே செய்து வர
நிச்சயம் ஒரு நாள்,
ஒரு சரத் கால பௌர்ணமியில்,
நீயும்,நானும்,க்ருஷ்ணனும்,ராதையும்,
கோபிகைகளும்
ப்ருந்தாவனத்தில் ராசம் ஆடுவோம் . . .

ராச பௌர்ணமியே உனக்கு நமஸ்காரம் . . .

சரத் பௌர்ணமியே எங்களுக்கு 
ப்ரேம பிச்சையிடு . . .

ஜெய் ஸ்ரீ ராச பூர்ணிமா . . .
ஜெய் ஸ்ரீ ப்ருந்தாவன் பூமிக்கு . . .
ஜெய் ஸ்ரீ கோபிகா ஸ்த்ரீகளுக்கு . . .
ஜெய் ஸ்ரீ க்ருஷ்ண சந்த்ரனுக்கு . . .
ஜெய் ஸ்ரீ ராதிகா ராணிக்கு . . .
ஜெய் ஸ்ரீ ராசலீலாவுக்கு . . .

ராதே . . . ராதே . . .
க்ருஷ்ணாராதே . . .

க்ருஷ்ணா. . .க்ருஷ்ணா . . .
ராதேக்ருஷ்ணா . . .


Read more...

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP