ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 16 டிசம்பர், 2017

640. மார்கழியே நீதானடி !

மார்கழி வந்ததோ !!!
மதி நிறைந்ததோ !!!

நீராட வந்தாயோ !!!
நீராட்ட வந்தாயோ !!!

சீர் மல்கியதோ !!!
ஆய்பாடி சிறந்ததோ !!!

கூர்வேல் நந்தகோபனோ !!!
ஏரார்ந்த கண்ணி யசோதையோ !!!

கார்மேனி செங்கண்ணனோ !!!
கதிர்மதியம் முகத்தனனோ !!!

நாராயணனும் நமக்கோ !!!
பறையும் நமக்கோ !!!

பாரோர் புகழ்வனரோ !!!
படிந்தே பாடுவோமோ !!!

ஆண்டாளும் வந்தாயே !!!
ஆளவே வந்தாயே !!

ஆட்கொள்ள வந்தாயே !!!
ஆடிப்பூரத்தில் வந்தாயே !!!

பூமகளாய் வந்தாயே !!!
பூவுலகிற்காய் வந்தாயே !!!

கலியுகத்தில் வந்தாயே !!!
கவலை தீர்க்க வந்தாயே !!!

மார்கழியே நீதானடி !!!
மாதவனும் உனக்காகதானடி !!!

மந்திரமே திருப்பாவையடி !!!
மகிழ்ச்சியும் தந்ததடி !!!

சோம்பேறிகள் நாங்களடி !!!
சுய சிந்தனை இல்லையடி !!!

கோதையே உன் திருவடியே....
கதியெனவே வந்தோமடி...

உன்னிடமே இருக்கவேண்டுமடி...
உன் கை கிளியாய் ஏற்பாயடி !!!

Read more...

திங்கள், 11 டிசம்பர், 2017

ரௌத்திரக்கவி !

எங்கள் முண்டாசு கவிஞன் !

வேண்டும் !
மீண்டும் வேண்டும் !

தாடா காலனே !
எம்மை எடுத்துக்கொள் !

எம் முண்டாசு கவியை மீண்டும் தாடா !

இங்கே மொழிப்பற்று போதவில்லை !
இங்கே தேசப்பற்று பத்தவில்லை !
இங்கே தெய்வப்பற்று சரியாயில்லை !

வேண்டும் !
பாரதி வேண்டும் !
மீண்டும் வேண்டும் !

அன்று இதே நாளில்
எட்டயபுரத்தில்
பிறந்தவன்...
இன்று மீண்டும் இங்கே பிறக்கவேண்டும் !

வா...பாரதி...வா...
நீ அமரகவி...
இன்னும் பாடு...

எங்களை உயிர்ப்பிக்க
உன் தமிழைத் தவிர
எதற்கும் பலமில்லை !

போதாதடா முண்டாசுக்கவியே !
எங்களுக்கு சாமர்த்தியம் போதாதடா !

ரௌத்திரம் மறந்தோம் !
அச்சம் வளர்த்தோம் !
காதல் மறந்தோம் !
காமம் கற்றோம் !
கடவுள் மறந்தோம் !
ஆனந்தம் தொலைத்தோம் !
காணி நிலம் மறந்தோம் !
பணத்தில் வீழ்ந்தோம் !
கடமை மறந்தோம் !
கடனாளியாய் ஆனோம் !
பாசம் மறந்தோம் !
பகைமை கொண்டோம் !
தேசம் மறந்தோம் !
அடையாளம் தொலைத்தோம் !
காக்கைக் குருவி மறந்தோம் !
காலை தூங்கி வழிந்தோம் !
ஓடி விளையாட மறந்தோம் !
ஒடுங்கிப் போனோம் !

மாக்களாய் ஆன
எம்மை
மக்களாய் ஆக்க
உன்னால் மட்டுமே முடியுமடா
முறுக்கு மீசை கவிஞா !

நல்லதோர் வீணை செய்தாள் சிவசக்தி !
அதை நலம் தர
மீட்டுபவன் நீயன்றோ !

காக்கைச் சிறகினிலே நந்தலாலாவை காட்டியவனே !
கிளியின் வண்ணத்தை
சொல்ல வருவாயடா !

வாடா !
ரௌத்திரக் கவியே...

இது உன் தேசமடா !
இது உன் இனமடா !

இது உன் கடமையடா !

இனி பொறுப்பதில்லை !!

Read more...

ஞாயிறு, 29 அக்டோபர், 2017

638. தமிழ் தலைவன் !

எங்கள் தமிழ் தலைவன்,
அன்பால் நாரணனை
அனுபவித்தவன்,
வந்துதித்த
ஐப்பசி அவிட்ட நாள் இன்று !

நாங்கள் கருப்பையில்
மீண்டும் பிறவாதிருக்க,
திருக்கடல் மல்லையில்,
ஞானத் தமிழன்
உதித்த நாள் இன்று !

அன்பையே அகலாய்,
ஆர்வமே நெய்யாய்,
நாராயணனுக்கு
ஞான விளக்கேற்றியவன்
உதித்த நாள் இன்று !

திருக்கோவலூரில்
இடைக்கழியில்
பொய்கையாழ்வாரோடு
அமர்ந்த பக்தன்
உதித்த நாள் இன்று !

மூவரில் ஒருவராய்,
மூவரில் நடுவராய்,
முதல்வனைக் கண்டு,
அன்பாய் விளக்கேற்றியவன்
உதித்த நாள் இன்று !

ஐம்பூதங்களை ஆளும்
ஐம்புலன்களை ஆளும்
மஹத்பூதமான நாரணனை
அனுபவித்த பூதத்தாழ்வார்
உதித்த நாள் இன்று !

திருக்கடல்மல்லை
பக்த சிகாமணியே !
காம பூதமாய்,
கோப பூதமாய்,
அஹங்கார பூதமாய்,
ஆசை பூதமாய்,
அலையும் என்னைத் திருத்தி
ஸ்தல சயனத்தான்,
திருவடியில் இப்போதே சேர்த்து
நீர் பூதத்தாழ்வார்
என்பதை நிரூபித்து விடுங்கள் !

©குருஜீ கோபாலவல்லிதாசர்

Read more...

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP