ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 23 ஜூன், 2021

652. ஸ்ரீமந் நாதமுனிகள்

🇮🇳🕉️📿🐚🛕🦅🙏🏼🏹
ஆனி மாதம் பெற்ற 
ஸ்ரீவைஷ்ணவ சிகாமணியே....

அனுஷம் பெற்ற
ஸ்ரீவைஷ்ணவ பாக்கியமே....

காட்டுமன்னார்கோயில் பெற்ற
ஸ்ரீவைஷ்ணவ ரத்தினமே !

பிரபந்தம் தேடி அலைந்த
ஸ்ரீவைஷ்ணவ ஹம்சமே !

கண்ணி நுண் சிறுத்தாம்பு ஜபித்த ஸ்ரீவைஷ்ணவ தாஸரே !

நம்மாழ்வாரைத் தரிசித்த
ஸ்ரீவைஷ்ணவ சிரோமணியே !

நாலாயிரம் தொகுத்த
ஸ்ரீவைஷ்ணவ பொக்கிஷமே !

தேவகானம் அறிந்த
ஸ்ரீவைஷ்ணவ குயிலே !

ராமனையும், கண்ணனையும் தேடி
நெடுந்தூரம் போன எங்கள் ஸ்ரீவைஷ்ணவ சிகரமே ! நாதமுனிகளே...

வீரநாராயணபுரத்து ஸ்ரீவைஷ்ணவ அடையாளமே !

அடியேனுக்கும் ஸ்ரீவைஷ்ணவ தாசர்களின் திருவடியில் பாதுகையாய் வாழ அருள் செய்வீர் !

இன்று உமது திருநக்ஷத்திரம் !
இந்த நாயேனையும் திருத்தி நாலாயிர திவ்யப்பிரபந்த பைத்தியமாக்கி அருள்வீர் !

🙏🏼🦅🛕🐚📿🏹🕉️🇮🇳

Read more...

திங்கள், 21 ஜூன், 2021

651. பெரியாழ்வார்

பெருமாளுக்குப் பரிவோடு
பல்லாண்டு பாடிய 
பெரியாழ்வாரே...
உமக்கு பல்லாண்டு பல்லாண்டு !

வடபத்ரசாயிக்கு
பூமாலை கட்டிய
கலியுக மாலாகாரரே...
உமக்கு பல்லாண்டு பல்லாண்டு !

பாண்டியன் சபையில்
நாராயணனை நிரூபித்த
வேதப்பிரானே
உமக்கு பல்லாண்டு பல்லாண்டு...

ஸ்ரீவில்லிபுத்தூரில்
கண்ணனை வளர்த்த 
ஆண் யசோதாவே...
உமக்கு பல்லாண்டு பல்லாண்டு....

பூமிப்பிராட்டியான ஆண்டாளையும்
கோபியாக மாற்றின
பட்டர்பிரானே...
உமக்கு பல்லாண்டு பல்லாண்டு...

அரங்கனுக்கு கோதையைக்
கல்யாணம் செய்துகொடுத்த,
எங்கள் ஜனகரே...
உமக்கு பல்லாண்டு
பல்லாண்டு...

ஆனி சுவாதியில் அவதரித்த
கைங்கர்ய ப்ரிய கருடாழ்வாரே...
உமக்கு பல்லாண்டு பல்லாண்டு...

எம்மையும் தொண்டர்குலத்தில்
சேர்ப்பித்த எங்கள் சத்குருவே
உமக்கு பல்லாண்டு
பல்லாண்டு...

Read more...

ஞாயிறு, 30 மே, 2021

648. திருக்கச்சிநம்பிகள்

🙏🕉️🛕🐚📿👣❤️🪔🇮🇳

*ஆனந்தவேதம் !*

_648. திருக்கச்சி நம்பிகள் !_

கண்ணனுக்காக
பூந்தோட்டம் 
வைத்தான்
மாலாகாரர் சுதாமா !

அரங்கனுக்காக
பூந்தோட்டம்
அமைத்தார்
தொண்டரடிப்பொடியாழ்வார் !

வரதனுக்காக
*பூந்தோட்டம்*
சமைத்தார்
திருக்கச்சிநம்பிகள்...

🕉️🛕🐚📿👣🪔❤️

அரங்கனிடம்
பேசினான்
ராமன் !

ஆராவமுதனிடம்
பேசினார்
திருமழிசையாழ்வார் !

வரதனிடம்
*பேசினார்*
திருக்கச்சிநம்பிகள்...

🕉️🛕🐚📿👣🪔❤️

ராமனுக்கு
சாமரம்
வீசினான்
சத்துருக்கனன் 
அயோத்தியில் !

பலராமனுக்கு
விசிறி வீசினான்
கண்ணன்
விருந்தாவனத்தில் !

வரதனுக்கு
*விசிறி வீசினார்*
திருக்கச்சிநம்பிகள்
காஞ்சியில்...

🕉️🛕🐚📿👣🪔❤️

வசிஷ்டருக்கு
சிஷ்யன் ஆனான்
ராமன் !

சாந்தீபனிமுனிக்கு
சிஷ்யன் ஆனான்
க்ருஷ்ணன் !

திருக்கச்சி நம்பிக்கு
*சிஷ்யன் ஆனான்*
வரதன்...

🕉️🛕🐚📿👣🪔❤️

ரிஷிகள் வீட்டில்
உணவருந்தினான்
ராமன் !

விதுரன் வீட்டில்
கூழ் குடித்தான்
கண்ணன் !

ராமானுஜர் வீட்டில்
*ஆகாரம் உண்டார்*
திருக்கச்சி நம்பிகள்...

🕉️🛕🐚📿👣🪔❤️

பிராட்டியிடம்
தூதுசென்றார்
ஆஞ்சநேயர்
ஸ்ரீராமானுக்காக !

திருதராஷ்டிரனிடம்
தூது சென்றான்
கண்ணன்
பாண்டவருக்காக !

வரதராஜனிடம்
*தூது சென்றார்*
திருக்கச்சிநம்பிகள்
ராமானுஜருக்காக....

🕉️🛕🐚📿👣🪔❤️

நாராயணன்
சொன்னதை
தேவருக்குச்
சொன்னார்
பிரம்மா !

கண்ணன்
சொன்னதை
கோபியருக்கு
சொன்னான்
உத்தவன் !

வரதன்
சொன்னதை
*ராமானுஜருக்கு*
சொன்னார்
திருக்கச்சி நம்பிகள்...

🕉️🛕🐚📿👣🪔❤️

ஞானத்திற்காக
மாடு மேய்த்தான்
சத்யகாம ஜாபாலன் !

ஆசைக்காக
மாடு மேய்த்தான்
ஆயர்குலக் கண்ணன் !

ஆசார்யனுக்காக
மாடு மேய்த்தார்
*திருக்கச்சி நம்பிகள்...*

🕉️🛕🐚📿👣🪔❤️

திருக்கச்சி நம்பிகளே...
உம்மைப்போலே,
வரதனோடு பேச,
ராமானுஜரோடு வாழ,
அகம்பாவம் இல்லாமல் இருக்க,
அடியேனுக்கு அருள் செய்வீர்....

© அடியேன்
கோபாலவல்லிதாசன்
21.2.21, ஞாயிறு

🪔❤️👣📿🐚🛕🕉️🇮🇳

Read more...

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP