ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி
அனந்தபுர நகரம் புகுதுமின்றே !

Search This Blog

Wednesday, January 6, 2010

வேறு என்ன வேண்டும் ?

ராதேக்ருஷ்ணா


க்ருஷ்ணனைப் பார்க்க
கண்கள் இருக்கிறது !

க்ருஷ்ண லீலையைக் கேட்க
காதுகள் இருக்கிறது !

க்ருஷ்ண ப்ரசாதத்தைச் சாப்பிட
வாய் இருக்கிறது !

க்ருஷ்ணனுக்கு அர்ச்சனை செய்த
பூக்களை நுகர மூக்கு இருக்கிறது !

க்ருஷ்ண நாமத்தை விடாமல் ஜபிக்க
நாவு இருக்கிறது !

க்ருஷ்ணனுக்கு கைங்கர்யம் செய்ய
கைகள் இருக்கிறது !

க்ருஷ்ணனை ப்ரதக்ஷிணம் செய்ய
கால்கள் இருக்கிறது !

க்ருஷ்ணனை எப்பொழுதும் நினைக்க
மனம் இருக்கிறது !

க்ருஷ்ணனுக்கு அர்ச்சனை செய்ய
பூக்கள் இருக்கிறது !

க்ருஷ்ணனுக்கு அபிஷேகம் செய்ய
ஜலம் இருக்கிறது !

க்ருஷ்ணனை நினைத்து அழ
கண்களில் கண்ணீர் இருக்கிறது !


க்ருஷ்ண ஸ்பர்சத்தில் சிலிர்க்க
மயிர்கால்கள் இருக்கிறது !

க்ருஷ்ணனை முத்தமிட
உதடுகள் இருக்கிறது !

க்ருஷ்ணனின் திருவடிகளை
பிடித்துவிட கைவிரல்கள் இருக்கிறது !

க்ருஷ்ணனைக் கடித்துப் பார்க்க
வாயில் பற்கள் இருக்கிறது !


க்ருஷ்ணனைக் கொண்டாட
வார்த்தைகள் இருக்கிறது !

க்ருஷ்ணனைப் பற்றி பேச
பக்தர்கள் இருக்கிறார்கள் !

க்ருஷ்ண க்ருபையில்
சிரிக்க சிரிப்பு இருக்கிறது !

க்ருஷ்ணனோடு சண்டையிட
கோபம் இருக்கிறது !

க்ருஷ்ண ஆலிங்கனத்தில் திளைக்க
உடல் இருக்கிறது ! 

க்ருஷ்ணனைப் பற்றி புலம்ப
விரஹம் இருக்கிறது !

க்ருஷ்ண காதலை அநுபவிக்க
ப்ரேமை இருக்கிறது !

க்ருஷ்ணனை வைத்துக்கொள்ள
நெஞ்சம் இருக்கிறது !

க்ருஷ்ண த்யானத்திற்கு
நேரம் இருக்கிறது ! 

க்ருஷ்ணனோடு சஞ்சரிக்க
உலகம் இருக்கிறது ! 

க்ருஷ்ணனுக்குத் தர
ஆத்மா இருக்கிறது !

க்ருஷ்ணனுக்காக வாழ
வாழ்க்கை இருக்கிறது !

உலகில் நிம்மதியாய் வாழ 
இதைத் தவிர உனக்கு
வேறு என்ன வேண்டும் ! ! !

பக்தி செய்யாமலிருக்க
காரணம் சொல்லாதே !

பக்தி செய்ய உனக்கு ஆசை வேண்டும் !

வேறு என்ன வேண்டும் . . .

0 comments:

About


Radhekrishna Sath Sangam . . .The Secured Sacred Spiritual Journey towards salvation . . .Founded by HER HOLINESS POOJYA SHREE SHREE AMMA . . .

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP