ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 4 ஜனவரி, 2010

என்ன தவம் செய்தாய் !


ராதேக்ருஷ்ணா

எந்த விதத்தில் மனித வாழ்க்கை 
ஸ்ரேஷ்டம் ?

எத்தனையோ வஸ்துக்கள்
பகவானை அனுபவிப்பதுபோல்
மனிதர்கள் அனுபவிப்பதில்லையே !

திருவனந்தபுரத்தில்
அனந்த பத்ம நாப ஸ்வாமியை
கொள்ளையடித்து
அனுபவிக்கின்ற வஸ்துக்கள்
என்ன தவம் செய்ததோ ? ! ?   
  
தாமரையே!
திருவனந்தபுரம் அனந்தபத்மநாப ஸ்வாமியின்
கைகளில் தஞ்சம் புகுவதற்கு
என்ன தவம் செய்தாய் !

அரளியே !
திருவனந்தபுரம் அனந்தபத்மநாப ஸ்வாமியின்
திருமேனியில் தவழ
என்ன தவம் செய்தாய் !

மயில் பீலியே !
திருவனந்தபுரம் அனந்தபத்மநாப ஸ்வாமியின்
திவ்ய மங்கள சரீரத்தைத் தடவ
என்ன தவம் செய்தாய் !

துளசியே !
திருவனந்தபுரம் அனந்தபத்மநாப ஸ்வாமியின்
திருவடியில் விழுந்து புரள
என்ன தவம் செய்தாய் !

பிச்சியே !
திருவனந்தபுரம் அனந்தபத்மநாப ஸ்வாமியின்
கழுத்தைப் பிடித்துக் கொண்டு விளையாட
என்ன தவம் செய்தாய் !

மல்லிகையே !
திருவனந்தபுரம் அனந்தபத்மநாப ஸ்வாமியின்
நெற்றியில் முத்தமிட்டு அனுபவிக்க
என்ன தவம் செய்தாய் !

ரோஜாவே !
திருவனந்தபுரம் அனந்தபத்மநாப ஸ்வாமியின்
முழங்கைகளில் உட்கார்ந்திருக்க
என்ன தவம் செய்தாய் ! 

 உப்பு மாங்காயே !
திருவனந்தபுரம் அனந்தபத்மநாப ஸ்வாமியின்
திருப்பவள செவ்வாயை ருசிப்பதற்கு
என்ன தவம் செய்தாய் !

குத்துவிளக்கே !
திருவனந்தபுரம் அனந்தபத்மநாப ஸ்வாமியின்
திருமேனியை விடாமல் பார்க்க
என்ன தவம் செய்தாய் !

விதானமே !
திருவனந்தபுரம் அனந்தபத்மநாப ஸ்வாமியின்
உத்திரத்தில் தொங்கிக்கொண்டிருக்க
என்ன தவம் செய்தாய் !

கற்பூரமே ! 
திருவனந்தபுரம் அனந்தபத்மநாப ஸ்வாமியின்
திருமேனியை எல்லோருக்கும் காட்ட
என்ன தவம் செய்தாய் !

மணியே !
திருவனந்தபுரம் அனந்த பத்ம நாப ஸ்வாமியின்
பூஜா சமயங்களில் கணீரென்று சப்திக்க
என்ன தவம் செய்தாய் !

தங்கமே !
திருவனந்தபுரம் அனந்த பத்ம நாப ஸ்வாமியின்
12008 சாலக்ராம திருமேனியில் ஒட்டியிருக்க
என்ன தவம் செய்தாய் !

வஸ்திரங்களே !
திருவனந்தபுரம் அனந்த பத்ம நாப ஸ்வாமியின்
இடுப்பிலிருந்து,கமல பாதங்கள் வரை உரச
என்ன தவம் செய்தாய் ! 

மரக்கதவே !
திருவனந்தபுரம் அனந்த பத்ம நாப ஸ்வாமியின்
சன்னிதியில் நின்று அவரோடு வாழ
என்ன தவம் செய்தாய் !

வாழை இலையே !
திருவனந்தபுரம் அனந்த பத்ம நாப ஸ்வாமியின்
ப்ரசாதத்தை சுமந்து பக்தர்களோடு செல்ல
என்ன தவம் செய்தாய் !


எலிக்குட்டியே !
திருவனந்தபுரம் அனந்த பத்ம நாப ஸ்வாமியின்
சன்னிதியில் இங்கும் அங்கும் ஓடி விளையாட
என்ன தவம் செய்தாய் !

பூனைக்குடும்பமே !
திருவனந்தபுரம் அனந்த பத்ம நாப ஸ்வாமியின்
கோயிலுக்குள் சம்சாரத்தில் திளைக்க
என்ன தவம் செய்தாய் !

அணில்களே !
திருவனந்தபுரம் அனந்த பத்ம நாப ஸ்வாமியின்
மண்டபங்களில் கத்திக்கொண்டு அலைய
என்ன தவம் செய்தீர் !

ப்ரியதர்ஷினி யானையே !
திருவனந்தபுரம் அனந்த பத்ம நாப ஸ்வாமியின்
முன்னே ஆடி ஆடிச் செல்ல
என்ன தவம் செய்தாய் !

மாடப்புறாக்களே !
திருவனந்தபுரம் அனந்த பத்ம நாப ஸ்வாமியின்
கோயிலின் ப்ரகாரங்களில் வாழ
என்ன தவம் செய்தீர் !

சமையல் பாத்திரங்களே !
திருவனந்தபுரம் அனந்த பத்ம நாப ஸ்வாமியின்
ப்ரசாதத்தை உடல் முழுவதும் சுமக்க
என்ன தவம் செய்தீர் !

விறகுக் கட்டைகளே !
திருவனந்தபுரம் அனந்த பத்ம நாப ஸ்வாமியின்
ப்ரசாதம் தயார் செய்ய, தன்னை எரித்துக்கொள்ள
என்ன தவம் செய்தீர் ! 
  
மணலே !
திருவனந்தபுரம் அனந்த பத்ம நாப ஸ்வாமியின்
கோயிலில் எல்லாப் பக்கமும் இறைந்து கிடக்க
என்ன தவம் செய்தாய் ! 
 
இன்னும் எத்தனையோ
வஸ்துக்கள்
பல விதமாக
திருவனந்தபுரம் அழகனோடு
நித்ய சம்மந்தம் கொண்டிருக்கின்றன !

 மனிதப் பிறவியைச் சுட்டுப் போடு !

அகம்பாவத்தின் சிகாமணிகளே !
மமகாரத்தின் பிள்ளைகளே !
அஞ்ஞானத்தின் பிரதிபிம்பங்களே !
பொறாமையின் சகாக்களே !
கனவுலகில் சஞ்சரிக்கும் முட்டாள்களே !

கொஞ்சம் உங்கள் முட்டாள்தனத்தைக்
கொன்று போட்டு விட்டு
வெளியில் வாருங்கள் !

உங்களுடைய பாசக் கிணற்றுக்குள் இருந்து
வெளியில் வந்து பாருங்கள் !

 பக்தி சாகரம் பரந்து விரிந்து கிடக்கிறது !

அதில் நீந்திக் களிக்க வாருங்கள் ! ! !


துளியாவது பக்தி ஆனந்தத்தை
ருசித்துப் பாருங்கள் ! ! !

ஹே குழந்தைகளே !
திருந்துங்கள் . . .
உங்களை உணருங்கள் . . .
உன்னதமானதை தேர்ந்தெடுங்கள் . . .



0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP