ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 15 ஜனவரி, 2010

சூரிய க்ரஹணம் !



ராதேக்ருஷ்ணா

சூரிய கிரஹணம் . . .

இயற்கையின் அதிசயம் . . .

மனிதனால் உண்டாக்க முடியாத
இயற்கையின் அற்புத நிகழ்வு !

விஞ்ஞானம் அதன் அறிவின்
கண் கொண்டு ஆராயும் . . .

அஞ்ஞானம் ஒன்றும் தெரியாமல்
குழம்பிக்கிடக்கும் . . .

மெய்ஞானம் இயற்கையின் அற்புதத்தை
வாழ்விற்கு பலம் சேர்க்க
முயலும் . . .

இப்போது நீ முடிவு செய் . . .

அஞ்ஞானமா ?
விஞ்ஞானமா ?
மெய்ஞானமா . . .

மெய்ஞானத்தின் வழியில்
கொஞ்சம்
க்ரஹணத்தை அனுபவிப்போமே . . .

ஒரு உத்தமமான சூரிய க்ரஹணத்தில்தான்

கோபிகா ஸ்த்ரீகள்,
தங்கள் ப்ரேம நாயகன் க்ருஷ்ணனை,
100 வருஷங்கள் கழித்து 
ப்ரபாச க்ஷேத்ரத்தில்
தரிசனம் செய்தனர் . . .

ஒரு சந்திர க்ரஹண புண்ணியகாலத்தில்தான்
ஸ்ரீ க்ருஷ்ண சைதன்ய மஹாப்ரபு
இந்த பாரததேசத்தில், நவத்வீபத்தில்
"ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே!
ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண
க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே !"
மஹாமந்திர ஜப சமயத்தில்
அவதரித்தார் . . .

இது போல் பல நிகழ்வுகள்
க்ரஹண புண்ணிய காலத்தில்
நிகழ்ந்துள்ளது . . . 

க்ரஹண புண்ணிய காலங்களில்
விடாமல் நாம ஜபம் செய்தால்
மிக அதிகமான பலத்தை
அடையலாம் . . .

க்ரஹண புண்ணிய காலத்தில்
மந்திரங்களை சிரத்தையோடு
ஜபித்தால் மந்திர சித்தி அடையமுடியும் . . .

கர்ப்பஸ்த்ரீகளும் விடாமல்
பகவத் த்யானம் செய்ய
நல்ல குழந்தைகளாக பிறக்கும் . . .

க்ரஹண புண்ணிய காலம்
பகவானுடைய
க்ருபையினால்தான் கிடைக்கிறது . . .

இப்பொழுது இந்த சூரிய க்ரஹணத்தில்
விடாமல் நாம ஜபம் செய்து
உன் வாழ்க்கையை பாவனமாக்கிக்கொள் !

ராதே க்ருஷ்ணா க்ருஷ்ணா ராதே
ராதே க்ருஷ்ணா க்ருஷ்ணா ராதே

ராதே க்ருஷ்ணா க்ருஷ்ணா ராதே
ராதே க்ருஷ்ணா க்ருஷ்ணா ராதே

இயற்கை அன்னையே !
உனக்கு கோடி நமஸ்காரம் ...

மனிதர்கள் எத்தனைதான்
உன்னுடன் போட்டியிட்டாலும்
உன் அதிசயங்களைக் கண்டு,
ஆராயவும்,உபயோகப்படுத்தவும்,
ப்ரமிக்கவும் மட்டுமே முடியும் . . .

உன் ரஹஸ்யங்களை நீயே
வெளியிட்டால் ஒழிய
இந்த முட்டாள் கூட்டத்திற்கு
எப்படிப் புரியும் . . .

நீயே சொன்னாலும்
ஒத்துக்கொள்ளாத
அகம்பாவிகளை என்ன சொல்ல ? ! ? 
 

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP