ஹே கிளிகளே!
ராதேக்ருஷ்ணா
கிளிகளே உங்களுக்கு
கோடி கோடி நமஸ்காரங்கள் . . .
பச்சை நிற உடலும்,
சிகப்பு நிற அலகும்,
மதுரமான மொழியும்,
ஒய்யார நடையும்,
மழலைப் பார்வையும்,
கொண்ட அழகுக் கிளிகளே!
உம்மை வணங்குகிறொம் !
மனிதர்களுக்கு கிடைக்காத
உன்னதமான பாக்கியங்கள்
உங்களுக்குத்தானே கிடைத்தன !
ஹே கிளிகளே !
உங்களில் ஒருத்திதானே
எங்கள் சுகப்ரும்ம மஹரிஷியைப்
பெற்றாள் !
ஹே கிளிகளே !
உங்களில் பலபேர்தானே ப்ருந்தாவனத்தில்
எங்கள் க்ருஷ்ணனோடு பழம் தின்று
விளையாடினார்கள் !
ஹே கிளிகளே!
உங்களில் ஒரு கிளிதானே தினமும்
பகவத் கீதையின் முதல் அத்தியாயத்தை
பாராயணம் செய்தது !
ஹே கிளிகளே !
உங்களில் ஒரு பக்தசிரோமணிதானே
எங்கள் ரங்கராஜனின் கோயிலை
அடையாளம் காட்டியது !
ஹே கிளிகளே !
உங்களைத்தானே மாலையாக
எங்கள் நம்பெருமாள் தன் தோள்களில்
தரிக்கிறார் !
ஹே கிளிகளே !
உங்களில் ஒரு பாக்கியசாலிதானே
எங்கள் ஆண்டாளின் கைகளில்
உட்கார்ந்தாள் !
ஹே கிளிகளே !
எங்கள் ஆண்டாளும் தன் தோழியை
எல்லே! இளங்கிளியே! என்றுதானே
கொஞ்சினாள் !
ஹே கிளிகளே !
உங்களில் ஒரு அத்ருஷ்டசாலிதானே
எங்கள் ராமானுஜரிடமிருந்து இன்னமுதம்
வாங்கிக்கொண்டது !
ஹே கிளிகளே !
எங்கள் ஆஞ்சனேயனும்,துளிசிதாசருக்கு
ராமனைக் காட்டிக்கொடுக்க கிளியாகத்தானே
தன்னை மாற்றிக்கொண்டார் !
ஹே கிளிகளே !
எங்கள் துஞ்சத்து ராமானுஜ எழுத்தச்சனும்,
நீங்கள் சொல்வதைத்தானே கிளிப்பாட்டாக
எழுதினார் !
ஹே கிளிகளே !
எங்கள் திருமங்கை மன்னனும்,உங்களிடம்தானே
திருமலையப்பனிடம் தூது போகச்
சொன்னார் !
இன்னும் உங்களிடம் நிறைய
கேட்க வேண்டியிருக்கிறது!
ஆதலால் கிளிகளே
பறந்து விடாதீர்கள்....
இதோ சீக்கிரமாய் வருகிறேன் !
கோடி கோடி நமஸ்காரங்கள் . . .
பச்சை நிற உடலும்,
சிகப்பு நிற அலகும்,
மதுரமான மொழியும்,
ஒய்யார நடையும்,
மழலைப் பார்வையும்,
கொண்ட அழகுக் கிளிகளே!
உம்மை வணங்குகிறொம் !
மனிதர்களுக்கு கிடைக்காத
உன்னதமான பாக்கியங்கள்
உங்களுக்குத்தானே கிடைத்தன !
ஹே கிளிகளே !
உங்களில் ஒருத்திதானே
எங்கள் சுகப்ரும்ம மஹரிஷியைப்
பெற்றாள் !
ஹே கிளிகளே !
உங்களில் பலபேர்தானே ப்ருந்தாவனத்தில்
எங்கள் க்ருஷ்ணனோடு பழம் தின்று
விளையாடினார்கள் !
ஹே கிளிகளே!
உங்களில் ஒரு கிளிதானே தினமும்
பகவத் கீதையின் முதல் அத்தியாயத்தை
பாராயணம் செய்தது !
ஹே கிளிகளே !
உங்களில் ஒரு பக்தசிரோமணிதானே
எங்கள் ரங்கராஜனின் கோயிலை
அடையாளம் காட்டியது !
ஹே கிளிகளே !
உங்களைத்தானே மாலையாக
எங்கள் நம்பெருமாள் தன் தோள்களில்
தரிக்கிறார் !
ஹே கிளிகளே !
உங்களில் ஒரு பாக்கியசாலிதானே
எங்கள் ஆண்டாளின் கைகளில்
உட்கார்ந்தாள் !
ஹே கிளிகளே !
எங்கள் ஆண்டாளும் தன் தோழியை
எல்லே! இளங்கிளியே! என்றுதானே
கொஞ்சினாள் !
ஹே கிளிகளே !
உங்களில் ஒரு அத்ருஷ்டசாலிதானே
எங்கள் ராமானுஜரிடமிருந்து இன்னமுதம்
வாங்கிக்கொண்டது !
ஹே கிளிகளே !
எங்கள் ஆஞ்சனேயனும்,துளிசிதாசருக்கு
ராமனைக் காட்டிக்கொடுக்க கிளியாகத்தானே
தன்னை மாற்றிக்கொண்டார் !
ஹே கிளிகளே !
எங்கள் துஞ்சத்து ராமானுஜ எழுத்தச்சனும்,
நீங்கள் சொல்வதைத்தானே கிளிப்பாட்டாக
எழுதினார் !
ஹே கிளிகளே !
எங்கள் திருமங்கை மன்னனும்,உங்களிடம்தானே
திருமலையப்பனிடம் தூது போகச்
சொன்னார் !
இன்னும் உங்களிடம் நிறைய
கேட்க வேண்டியிருக்கிறது!
ஆதலால் கிளிகளே
பறந்து விடாதீர்கள்....
இதோ சீக்கிரமாய் வருகிறேன் !
0 கருத்துகள்:
கருத்துரையிடுக