ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி
அனந்தபுர நகரம் புகுதுமின்றே !

Search This Blog

Wednesday, January 20, 2010

பயணம் !

ராதேக்ருஷ்ணா

பயணம்...

வாழ்வில் தவிர்க்க முடியாத
சில நிகழ்வுகளில்
பயணமும் ஒன்று . . .

வாழ்வே பயணம் . . .

ஜனனத்திலிருந்து
 மரணத்திற்கு ஒரு பயணம் . . .

அந்த வாழ்க்கையிலும் எத்தனை பயணம் . . .

இந்த உடலின் பயணம் . . . 

தந்தையின் உடலிலிருந்து
தாயின் கருவறைக்கு ஒரு பயணம் . . .

தாயின் கருவறையிலும் அதில்
சுற்றிச் சுற்றி ஒரு பயணம் . . .

தாயின் கருவறையிலிருந்து உலகில்
வந்து பிறக்க ஒரு பயணம் . . . 

   பிறந்தபிறகு ஒவ்வொருவர்
கையாக மாறி மாறிப் பயணம் !

வளர்ச்சியில் ஒரு பயணம் !

தாயோடு ஒரு பயணம் !

தந்தையோடு ஒரு பயணம் !

பெற்றோரோடு ஒரு பயணம் !

உற்றாரோடு ஒரு பயணம் ! 

பொம்மைகளோடு ஒரு பயணம் !

 பள்ளிக்கூடத்திற்காக ஒரு பயணம் !

பள்ளிக்கூடத்தில் ஒரு பயணம் !

தோழர்கள்/தோழிகளோடு ஒரு பயணம் !

அறிவிற்காக ஒரு பயணம் !

அறிவில்லாத சில பயணம் !

ஆசைக்காக சில பயணம் !

 அன்பிற்காக சில பயணம் !

அவசரத்தில் சில பயணம் !

அவசியத்தில் சில பயணம் !

வேலைக்காக சில பயணம் !

விசேஷங்களுக்காக சில பயணம் !

வெறுப்பில் சில பயணம் !

வைராக்யத்தில் சில பயணம் !

கோபத்தில் சில பயணம் !

அழுகையில் சில பயணம் !

துக்கத்தில் சில பயணம் !

சந்தோஷத்தில் சில பயணம் !

 குதூகலத்தில் சில பயணம் !

மனக்குறைகளோடு சில பயணம் !

அரைகுறை மனதோடு சில பயணம் ! 

பயத்தோடு சில பயணம் !

தைரியத்தோடு சில பயணம் !

குழப்பத்தோடு சில பயணம் !

சிந்தனையோடு சில பயணம் !

சிரிப்போடு சில பயணம் !

சிலிர்ப்போடு சில பயணம் !

சிடுசிடுப்போடு சில பயணம் !

சில்லென்று சில பயணம் !

தேவைக்காக சில பயணம் !

வெட்டியாக சில பயணம் !

வேதனையோடு சில பயணம் !

கோழையாக சில பயணம் !

வீரத்தோடு சில பயணம் !

கட்டாயமாக சில பயணம் !

காரணமேயில்லாமல் சில பயணம் !

ஊர்சுற்ற சில பயணம் !

மற்றவருக்காக சில பயணம் !

இழப்பில் சில பயணம் !

எதிர்ப்பார்ப்போடு சில பயணம் !

ஏமாற்றத்தோடு சில பயணம் !

வைத்தியத்திற்காக சில பயணம் !

வியாதிக்காக சில பயணம் !

வியாதியோடு சில பயணம் !

பிரச்சனைகளோடு சில பயணம் !

தீர்வுகளோடு சில பயணம் !

கேள்விகளோடு சில பயணம் !

பதில்களோடு சில பயணம் !

தூக்கத்தோடு சில பயணம் !

தூக்கமில்லாத சில பயணம் !

கனவுகளோடு சில பயணம் !

லக்ஷியங்களோடு சில பயணம் !

அமைதியாய் சில பயணம் !

ஆடம்பரமாய் சில பயணம் !

மௌனமாய் சில பயணம் !

சப்தத்தோடு சில பயணம் !

பட்டினியாய் சில பயணம் !

அஜீரணத்தில் சில பயணம் !

சாப்பிட்டுக்கொண்டே சில பயணம் ! 

சாப்பிடுவதற்காக சில பயணம் !

நன்றியோடு சில பயணம் !

புலம்பலோடு சில பயணம் !

தேடலில் சில பயணம் !

பரிதவிப்போடு சில பயணம் !

பரிவில் சில பயணம் !

பரபரப்போடு சில பயணம் !

பாதிப்போடு சில பயணம் !

பண்போடு சில பயணம் !

பழியோடு சில பயணம் !

பாவத்தோடு சில பயணம் !

புண்ணியத்திற்காக சில பயணம் !

தனியாக சில பயணம் !

துணையாக சில பயணம் !

துணைக்காக சில பயணம் ! தன்னடக்கத்தோடு சில பயணம் !

அகம்பாவத்தோடு சில பயணம் !

அமைதியில்லாமல் சில பயணம் !

நடுக்கத்தோடு சில பயணம் ! 

அமைதிக்காக சில பயணம் !

மாற்றத்திற்காக சில பயணம் !

மாற்றமுடியாமல் சில பயணம் !

இரவில் சில பயணம் !

பகலில் சில பயணம் !

நீண்ட தூரம் சில பயணம் !

நீண்ட நேரம் சில பயணம் !


குளிரில் சில பயணம் !

வியர்வையில் சில பயணம் !

வலியில் சில பயணம் !

மனஅழுத்தத்தோடு சில பயணம் !

தயக்கத்தில் சில பயணம் !

தயங்காமல் சில பயணம் !

தாளமுடியாமல் சில பயணம் !

வேலையாளாக சில பயணம் !

முதலாளியாக சில பயணம் !

முடியாமல் சில பயணம் !

முடிவோடு சில பயணம் !

அசடாக சில பயணம் !

புத்திசாலியாக சில பயணம் !

அசட்டையாக சில பயணம் !

அசிரத்தையாக சில பயணம் !

பொறுப்போடு சில பயணம் !

பொறுப்பில்லாமல் சில பயணம் !

காமத்திற்காக சில பயணம் !

காமத்தில் சில பயணம் !

துடிப்போடு சில பயணம் !

களைப்போடு சில பயணம் !

கலகலப்பாக சில பயணம் !

கடன் வாங்க சில பயணம் !

கடனை அடைக்க சில பயணம் !

கடனே என்று சில பயணம் !

 சேர்த்திக்காக சில பயணம் !

பிரிவுடன் சில பயணம் !

பிரியாவிடையுடன் சில பயணம் !

கற்பனைகளோடு சில பயணம் !

காசில்லாமல் சில பயணம் !

காசு செலவழித்து சில பயணம் !

வழக்கிற்காக சில பயணம் !

வழக்கு முடிந்து சில பயணம் !

ஜனனத்திற்காக சில பயணம் !

மரணத்திற்காக சில பயணம் !

புது உறவிற்காகச் சில பயணம் !

உறவை அறுத்து சில பயணம் !

உள்ளக்குமுறல்களோடு சில பயணம் !

உடைந்து போன உள்ளத்தோடு சில பயணம் !

ஆனந்தக்கண்ணீரோடு சில பயணம் !

சுமைதாங்கியாய் சில பயணம் !

சுமையாக சில பயணம் !

சுமையேயில்லாமல் சில பயணம் !

சுறுசுறுப்பாக சில பயணம் !

சுட்டித்தனமாக சில பயணம் !

கஷ்டப்படுத்தி சில பயணம் !

கட்டுப்பாடுகளோடு சில பயணம் !

சுதந்திரமாய் சில பயணம் !

சிக்கல்களோடு சில பயணம் !

சிக்கலாய் சில பயணம் !

தொலைப்பதற்காக சில பயணம் !

தேடுதலோடு சில பயணம் !

வேடிக்கையாகச் சில பயணம் !

வாடிக்கையாய் சில பயணம் !

புரியாமல் சில பயணம் !

புதிரோடு சில பயணம் !

புது மனிதர்களோடு சில பயணம் !

பழகினவர்களோடு சில பயணம் !

பழக்கமேயில்லாமல் சில பயணம் !

பழகிக்கொள்ள சில பயணம் !

குற்ற உணர்ச்சியோடு சில பயணம் !

நிம்மதியாக சில பயணம் !

திருட்டுத்தனமாய் சில பயணம் !

உரிமையோடு சில பயணம் !

உரிமைக்காக சில பயணம் !

உறைந்துபோய் சில பயணம் !

உறுத்தலோடு சில பயணம் !

உணர்ச்சிபூர்வமாய் ஒரு பயணம் !

உடல் உள்ளவரை பயணம் உண்டு!

உடலில் வாழ்வதே பயணம் தான்!

பயணங்கள் பலவிதம்! எண்ணங்கள் பலவிதம்!

பார்! பயணப்படுவது என்னவோ நீ தான்! 

உன் மனதின் தன்மைக்கேற்றவாறு எத்தனை விதமான பயணம்  என்று பார்!

இவை இல்லாமல் சில பயணங்களும் உண்டு!

பக்தர்களோடு சில பயணம்!

பக்திக்காக சில பயணம்!

சத்குரு தரிசனத்திற்காக சில பயணம்!

சத்குருவோடு சில பயணம்!

பக்தியோடு சில பயணம்!

சத்சிஷ்யர்களோடு சில பயணம்!

இன்னும் சில பயணம் பாக்கி உண்டு....

மரணப் படுக்கையில் ஒரு பயணம்!

மரணத்தின் பயணம்!      

மரணம் அடைந்த பின் பயணம்!

பக்தியினால் முக்தி அடைந்தால் வைகுந்தப் பயணம்!

ஆசை வயப்பட்டால் மீண்டும் அடுத்த உடலுக்கு பயணம்!

அதனால் பயணம் நிச்சயம் உண்டு! 

எப்படியும் பயணப்படத்தான் போகிறாய்!

அதை நாமஜபத்தோடு பயணித்தால் முக்தி அடையலாம்!  

எதர்க்காக பயணித்தாலும் நாமஜபத்தோடு  பயணம் செய்!
     
உன் பயணம் தொடரும்!

என் பயணமும் தொடரும்!

என்றாவது எங்காவது சந்திப்போம்!

அதுவரை அவரவர் வழியில், குரு சொன்ன முறைப்படி பக்தியோடு பகவான் இஷ்டப்படி பயணம் செய்து கொண்டே இருப்போம்!

பயணத்தின் முக்கிய நோக்கம், ஒரே  நோக்கம் என்றாவது ஒரு நாள் பகவானோடு ஒரு சந்திப்பு நிகழும் !  

நிச்சயம் என்றாவது பகவானுடைய ஒரு சந்திப்பு உண்டு!

அதுவரை பயணம் முடிய வேண்டாம்..

முடியவே வேண்டாம்!!!
 

0 comments:

About


Radhekrishna Sath Sangam . . .The Secured Sacred Spiritual Journey towards salvation . . .Founded by HER HOLINESS POOJYA SHREE SHREE AMMA . . .

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP