ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

Search This Blog

Tuesday, April 3, 2012

உரசல் . . .

ராதேக்ருஷ்ணா

உரசல் . . .

ஒவ்வொரு நாளும்
வாழ்வில் உரசல்கள் . . .

பயத்திற்கும் தைரியத்திற்கும்
தனிமையில் உரசல் . . .

ஆனந்தத்திற்கும் துக்கத்திற்கும்
புரியாத உரசல் . . .

அஹம்பாவத்திற்கும் பணிவிற்கும்
மரியாதை உரசல் . . .

அன்பிற்கும் விரோதத்திற்கும்
போட்டி உரசல் . . .

பாசத்திற்கும் உரிமைக்கும்
போராட்ட உரசல் . . .

தூக்கத்திற்கும் விழிப்பிற்கும்
மயக்க உரசல் . . .

சொத்திற்கும் சுகத்திற்கும்
பங்கு உரசல் . . .

குழப்பத்திற்கும் தெளிவிற்கும்
யோசனை உரசல் . . .

சந்தேகத்திற்கும் நம்பிக்கைக்கும்
தீர்மான உரசல் . . .

வெற்றிக்கும் தோல்விக்கும்
முயற்சி உரசல் . . .

ஆத்தீகத்திற்கும் நாத்தீகத்திற்கும்
நம்பிக்கை உரசல் . . .

புத்திக்கும் மனதிற்கும்
ஆசை உரசல் . . .

தேவைக்கும் ஆடம்பரத்திற்கும்
குழப்ப உரசல் . . .

எதிர்பார்ப்பிற்கும் ஏமாற்றத்திற்கும்
தடுமாற்ற உரசல் . . .

இறந்தகாலத்திற்கும் எதிர்காலத்திற்கும்
நிகழ்வில் உரசல் . . .

இந்த உரசல்களுக்குள்ளே
நாம் வாழப் பழகிவிட்டோம்  . . .

இந்த உரசல்களில்
ஒவ்வொன்றும் மாறி மாறி
வெல்கிறது . . .

சில சமயம் இந்த உரசல்களில்
நாம் களைத்துப்போனது தான் மிச்சம் !

ஆனாலும் உரசல்கள் முடிவதில்லை . . .


0 comments:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP