ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 28 ஏப்ரல், 2012

குணசீலம் . . .

ராதேக்ருஷ்ணா
 
 
குணசீலா . . .
 
உனது பக்திக்காகவே
என் வேங்கடபதி காவிரி
ஆற்றங்கரைக்கு வந்தான் . . .
 
குணசீலா . . .
 
உன் பக்தியில் மயங்கி
உன் பூஜைகளை எல்லாம்
சுகமாக ஏற்றான் . . .


குணசீலா . . .

உன் பெயரையே
ஊருக்கும் தந்துவிட்டான்
உன் ப்ரசன்ன வேங்கடாசலபதி . . .


குணசீலம் . . .
குணசீல ரிஷியின் தபோபூமி . . .

வேங்கடவன் ப்ரசன்ன வேங்கடேசனாக
காட்சி தரும் புண்ணியபூமி . . .


பித்தர்களை தெளிய வைக்கும்
காவிரியின் ஆற்றங்கரை பூமி . . .
 
 
ப்ரசன்ன வேங்கடாசலா . . .

என் பித்தத்தையும் தெளியவை !

என் காமப்பித்தையும் தெளிய வை !

என் பொறாமைப் பித்தையும் மாற்றிக்காட்டு !

என் அஹங்காரப் பித்தையும் அழித்துப்போடு !

என் சந்தேகப் பித்தையும் கொன்று போடு !

எனது குழப்பப் பித்தையும் தெளிய வை !
 
என் எல்லாப் பித்தையும் மாற்றி
என்னை உன் பித்தனாய் மாற்று . . .
 
எனக்கு எல்லாப் பித்தும்
தலையேறியிருக்கிறது . . .
 
உன்னிடம் பித்தேற வை . . .
 
குணசீலா . . .
உன்னைப் போல் என்னையும்
வேங்கடவனின் பித்தனாக்கு . . .
 
குணசீலா . . .உன் அருகில் ஒரு இடம் தா !
 
என் மனதில் உன் வேங்கடவன்
வாழ ஒரு வரம் தா . . .
 
நான் என்று பித்தனாவேன் ? ! ?
 
பித்தனாய் குணசீலத்தில் என்று
அடைக்கலம் புகுவேன் ? ! ?
 
க்ருஷ்ண பித்தனாய் என்று
குணசீலத்தில் திரிவேன் ? ! ?
 
 
 
 

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP