ராமன் எத்தனை ராமனடி !
ராதேக்ருஷ்ணா
ராம் . . .
ஸ்ரீராம் . . .
சீதாராம் . . .
ஜய் ஸ்ரீ சீதாராம் . . .
ராமன் எத்தனை ராமனடி !
ஜய் தசரத ராம் . . .
பித்ரு வாக்யத்தைக் காப்பாற்றினவன் !
ஜய் கௌசல்யா ராம் . . .
பெற்ற வயிற்றை பெருமைப்படுத்தினவன் !
ஜய் அயோத்யா ராம் . . .
மக்களை தன் வசப்படுத்தினவன் !
ஜய் வசிஷ்ட ராம் . . .
குருவின் உபதேசத்தை செயல்படுத்தினவன் !
ஜய் விஸ்வாமித்ர ராம் . . .
குருவின் பாரத்தைத் தீர்த்தவன் !
ஜய் கைகேயி ராம் . . .
கைங்கர்ய சிகாமணியாய் மாற்றினவன் !
ஜய் சுமித்ரா ராம் . . .
பகவத் பாகவத பக்தியை நிரூபித்தவன் !
ஜய் லக்ஷ்மண ராம் . . .
பக்தனை சொத்தாய் கருதியவன் !
ஜய் பரத ராம் . . .
பொறுப்பையும் பெருமையையும் தந்தவன் !
ஜய் சத்ருக்ன ராம் . . .
பாகவத பக்தியை கொண்டாடினவன் !
ஜய் சீதா ராம் . . .
பத்னியின் காதலுக்குத் தன்னைத் தந்தவன் !
ஜய் ஜனக ராம் . . .
பக்தனின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டவன் !
ஜய் அகல்யா ராம் . . .
பக்தையைப் பதிவிரதையென்று சொன்னவன் !
ஜய் குக ராம் . . .
நட்பை,நண்பனை ரசித்தவன் !
ஜய் வனவாச ராம் . . .
வைராக்கியத்தைச் சொல்லித்தந்தவன் !
ஜய் சபரீ ராம் . . .
மோக்ஷத்திற்கு சாக்ஷியாய் நின்றவன் !
ஜய் சுக்ரீவ ராம் . . .
நட்பிற்கு மரியாதை செய்தவன் . . .
ஜய் ஆஞ்சனேய ராம் . . .
பக்தனுக்குத் தன்னை தானம் தந்தவன் !
ஜய் விபீஷண ராம் . . .
சரணாகத வத்சல ராஜாதி ராஜன் !
ஜய் வால்மீகி ராம் . . .
ராமாயணத்தைத் தந்தவன் !
ஜய் லவகுசா ராம் . . .
ராமாயணத்தைப் ப்ரகடனம் செய்தவன் !
இன்னும் எத்தனையோ ராமன் . . .
என் ராமன் . . .
ஜய் கோபாலவல்லி ராம் . . .
க்ருஷ்ணனாய் லீலை செய்பவன் . . .
உன் ராமன் . . .
யோசி . . . கண்டுபிடி . . . அனுபவி . . .
0 கருத்துகள்:
கருத்துரையிடுக