ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

திருமோகூர் . . .


ராதேக்ருஷ்ணா


மார்கபந்து . . .
வழித்துணைவன் . . .

மார்கம் இல்லாமல்
அலைபவருக்கு
மார்கபந்துவே கதி . . .

மார்கத்தை விட்டு
வழிதவறினவருக்கு
மார்கபந்துவே கதி . . .

மார்கம் புரியாமல்
தவிப்பவருக்கு
மார்கபந்துவே கதி . . .

மார்கம் தெரிய,
மார்கம் புரிய,
மார்கத்திற்கு பந்து கிடைக்க,
மார்கபந்துவை அனுபவிக்க
திருமோகூர் வாராய் பிள்ளாய் . . .

பக்தி மார்கம் தெளிவாய் புரிய
திருமோகூர் வாராய் பிள்ளாய் . . .

ஞான மார்கத்தில் சுகமாய் பயணிக்க
திருமோகூர் வாராய் பிள்ளாய் . . .

வைராக்கியத்தோடு மார்க்கம் அமைய
திருமோகூர் வாராய் பிள்ளாய் . . .

குருவின் மார்கத்தில் செல்ல
திருமோகூர் வாராய் பிள்ளாய் . . .

சரணாகதி மார்கத்தைப் பின்பற்ற
திருமோகூர் வாராய் பிள்ளாய் . . .

திருமோகூர் . . .
ஊர் பெயரே எத்தனை அழகு . . .

பெருமாள் திருநாமமோ
மார்கபந்து என்னும்
வழித்துணை பெருமாள் !

இன்னொரு திருநாமமோ
காளமேகப் பெருமாள் !

மழை தரும் மேகம் போன்று
கருணை மழையைக் கொட்ட
நின்றிருக்கும் காளமேகப் பெருமாள் !

நாங்கள் போயிருந்த சமயமோ
காள மேகங்கள் கர்ஜித்து
இவரே உனக்கு வழித்துணைவன்
என்று பறை சாற்றினவே . . .

எத்தனை பெரிய கோயில் . . .
எத்தனை அழகான மார்கபந்து . . .

அழகான ப்ரார்த்தனா சயன ரங்கன் !
திருவடியில் ஸ்ரீதேவியும் பூதேவியும்
ப்ரார்த்திக்க சயனக்கோலத்தில்
திருப்பாற்கடல் நாதன் சன்னதி !

மோஹினி அவதாரம் எடுக்க
பெருமாள் தீர்மானித்த திருமோகூர் . . .

எல்லோரையும் விட அழகு
எங்கள் மோஹனவல்லித் தாயார் . . .

குங்குமப்பூ அழகி !
மஞ்சள் திருமேனி அழகி !
கருணா கடாக்ஷ அழகி !
 
 நம் மோஹத்தை அழித்து,
பெருமாளிடம் நம்மை மோஹிக்கச்
செய்யும் அழகி மோஹனவல்லி . . .

வைத்த கண்ணை எடுக்கப் பிடிக்கவில்லை !

அற்புத சுதர்சன சக்கரத்தாழ்வாரும்
மோஹம் தருகிறாரே . . .

என் செய்வேன் பிள்ளாய் ? ! ?

திருமோகூர் திவ்யதேசமா . . .
இல்லை . . .
திருமோகூர் மோஹ தேசம் . . .
நம்மை மோஹிக்கப் பண்ணும் தேசம் . . .

நான் போனேன் . . .
மோஹித்துப் போனேன் . . .

மீண்டும் என்று என்
மோஹத்திற்கு மார்கமான பந்துவை
நான் காண்பேன் ? ? ?

என் மோஹனபந்துவை
என்று கண்ணாரக் காண்பேன்  ? ? ?

மார்கம் காட்டும் மார்கபந்துவே,
கருமாணிக்க காளமேகமே,
என் வீட்டு மார்கம் நீ அறிவாயே !
இப்பக்கம் வந்து உன் மோஹமழையை
என் மேல் பெய்வாயா ?

என் மோஹம் தீர மார்கம் செய்வாயா ?

இல்லை ...திருமோகூர் திருமோகூர்
என்று பிதற்றி,
நான் என் குல மார்கத்தை
விட்டு பித்தனாய் அலையச் செய்வாயோ ?

அடியேன் வாழ்க்கையில்
செய்த பெரும் தவறு . . .

திருமோகூர் சென்றது தான் . . .

இல்லையெனில் இப்படி
வெட்கமில்லாமல் என் மோஹத்தை
ஊருக்குச் சொல்வேனா ?

ஐயோ . . .
என் மோஹத்தால்,
மார்கபந்துவின் மீதுள்ள மோஹத்தால்,
வெட்கம் அழிந்தேனே . . .

ஹே பிள்ளாய் !
மார்கபந்துவிடம் இந்த
கோபாலவல்லியின் மார்கத்தைச்
சொல்லி அந்த காளமேகத்தை
இங்கே அனுப்பி வைப்பாயா ?

இல்லையேல் நீயும்
என்னைப் போல்
மார்கபந்துவிடம் மோஹப்பட்டு
மார்கம் மறப்பாயா . . .



 
 

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP