ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி
அனந்தபுர நகரம் புகுதுமின்றே !

Search This Blog

Thursday, April 12, 2012

இவர்கள் எனக்குண்டு !

ராதேக்ருஷ்ணா


குழந்தை . . .
குழந்தையாய் இருக்கிறேன் . . .

குழந்தையின் தேவைகளை
பெற்றோர் கவனிப்பர் . . .
என் தேவைகளை
ராதையும் க்ருஷ்ணனும் கவனிக்கிறார்கள் . . .

குழந்தையின் மலமூத்திரத்தை
அம்மா சுத்தம் செய்கிறாள். . .
என் மனதின் அழுக்குகளை
ராதிகா ராணி சுத்தம் செய்கிறாள் !

குழந்தையின் சுகத்தை
பெற்றோர் யோசிக்கிறார்கள் !
என் சுகத்தை ராதிகாவும் கண்ணனும்
யோசிக்கிறார்கள் !

குழந்தைக்கு நல்லதையும் கெடுதலையும்
பெற்றோர் சொல்லித்தருகின்றனர் !
எனக்கு நல்லதையும் கெட்டதையும்
க்ருஷ்ணனும் ராதேயும்
சொல்லித்தருகின்றனர் !

குழந்தையின் அழுகுரலுக்கு
பெற்றோர் செவி சாய்கின்றனர் !
என் அழுகைக்கு ராதையும்
கண்ணனும் ஓடிவருகின்றனர் !

குழந்தையின் எதிர்காலத்தை
பெற்றோர் முடிவு செய்கின்றனர் !
என்னுடைய எதிர்காலத்தை
க்ருஷ்ணனும் ராதாமாதாவும்
முடிவு செய்திருக்கிறார்கள் !

இப்படி குழந்தையைப் போல்
என்னை ராதாமாதாவும்,
க்ருஷ்ண பிதாவும் தாங்கும்போது
நான் குழந்தையாய் இருக்கவே
என்றும் ஆசைப்படுகிறேன் . . .

எது நடந்தாலும் இவர்கள் எனக்குண்டு !

இது போதும் . . .
இந்த வாழ்வில் நான் வெல்ல . . .

இது போதும் . . .
இந்த உலகில் நான் வாழ . . .

இது போதும் . . .
நான் குழந்தையாய் குதூகலமாய்
என்றும் சிரித்திருக்க . . .


0 comments:

About


Radhekrishna Sath Sangam . . .The Secured Sacred Spiritual Journey towards salvation . . .Founded by HER HOLINESS POOJYA SHREE SHREE AMMA . . .

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP