ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

Search This Blog

Friday, June 8, 2012

நீ தோற்பதில்லை . . .

ராதேக்ருஷ்ணாவானத்திற்கு எல்லையில்லை !
 நீ வானம் போலே . . .

மேகங்கள் நிரந்தரமில்லை !
துன்பங்கள் மேகங்கள் போலே . . .


சூரியனில் இருட்டில்லை !
நீ சூரியன் போலே . . .சூரியனை கொசு நெருங்குவதில்லை !
பிரச்சனைகள் கொசு போலே . . .

பூமியின் சுழற்சி தடைபடுவதில்லை !
நீ பூமியைப் போலே . . .


கடலை யாரும் அடக்கமுடிவதில்லை !
நீ கடலைப் போலே . . .

 
காற்றை யாரும் நிறுத்தமுடிவதில்லை !
நீ காற்றைப் போலே . . .


புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது . . .
நீயும் வெல்லும் பசியோடிரு . . .
 தோல்வி என்னும் புல்லைத் தீண்டாதே !


மாடு இளைத்தாலும் கொம்பு இளைக்காது . . .
முயற்சி தோற்கலாம் நீ தோற்பதில்லை . . .
நீ தோற்றாலும் உன் சக்தி இளைப்பதில்லை !


உன்னுள் ஒரு உன்னத சக்தி உண்டு !
 உன்னுள் ஒரு அதிசய பலம் உண்டு !
உன்னுள் ஒரு ரஹஸ்ய உத்வேகம் உண்டு !

வென்று காட்டுவாய்  . . .
வாழ்ந்து காட்டுவாய்  . . .
வரலாற்றை மாற்றிக் காட்டுவாய்  . . .0 comments:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP