ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 10 ஜூன், 2012

இன்றே புரிந்தது !

ராதேக்ருஷ்ணா


ஒன்று எனக்குப் புரிந்தது !
எனக்கு இன்றே புரிந்தது !
இன்று நன்றாய் புரிந்தது !


நான் என்னைப் பற்றி
யோசிப்பதை விட
பார்த்தசாரதி என்னைப் பற்றி
நிறைய யோசிக்கிறான் !


என் எதிர்காலத்தை
என்னை விட பார்த்தசாரதி
தெளிவாய் அறிகின்றான் !


என் உடலின் பலத்தையும்,
என் மனதின் பலவீனத்தையும்,
என்னை விட பார்த்தசாரதி
சரியாக கணித்திருக்கிறான் !


 என் வாழ்வை, என் தேவைகளை
என்னை விட நன்றாக
பார்த்தசாரதி கவனித்துக்கொள்கிறான் !




என் கடந்த காலத்தை
நான் மறந்தாலும்,
என் பார்த்தசாரதி நன்றாக
ஞாபகம் வைத்திருக்கிறான் !




என் நிகழ்காலத்தை
என்னை விட என் பார்த்தசாரதி,
துல்லியமாய் கவனிக்கிறான் !




என் எதிர்காலத்தை
என்னை விட என் பார்த்தசாரதி
தெளிவாய் பார்க்கிறான் !


இவ்வளவும் அவன் செய்யும்போது,
நான் என் வாழ்க்கையில்
செய்யவேண்டியது எதுவுமில்லை !


ஒன்று உண்டு . . .
நான் செய்ய வேண்டியது . . .
பார்த்தசாரதியின் பாதமே
கதியாகக் கொண்டு,
ஒழுங்காக வாழவேண்டியது . . .


பார்த்தசாரதி மனம் நோகாமல்
வாழவேண்டியது . . .


பார்த்தசாரதி சந்தோஷப்படும்படி
வாழவேண்டியது . . .


பார்த்தசாரதி திருப்தியாகும்படி
வாழவேண்டியது . . .


இதுவே எனக்குப் புரிந்தது . . .
இன்றே புரிந்தது . . .
தெளிவாய் புரிந்தது . . .

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP